Author: Satya
•11:40 AM
உலகநாயகன் என்பதின் அர்த்தத்தை மீண்டும் உணர்த்தியுள்ள படம் விஸ்வரூபம்...பத்து பைசாக்கு பிரயோஜனமில்லாத படத்தையே பத்து தடவ பாக்கற ஜாதி நான்...(அய்யய்யோ ...அப்புறம் எதாவது ஜாதி சங்கம் என் ப்ளாக் தடை செஞ்சிடப்  போறாங்க...) கமல் படம் ரிலீஸ் ன்னா  சும்மாவா..அடிச்சி புடிச்சி ப்ரிமியர் ஷோ டிக்கெட் வாங்கியாச்சு  லே ....

படம் ஆரம்பம் முதல் முடிவு வரை செம வேகம்..." என் ஆம்படிய கொஞ்சம் வேற மாதிரி" என பூஜா சொல்லிக் கொண்டிருக்கும் போதே கமலின் அறிமுகம் விஸ்வநாதனாக... வயதின் முதிர்ச்சி தெரிந்த போதும்,  கதக் நடன நளினத்தை நாட்டியத்தில் மட்டும்மல்லாமல்   நடை உடை பாவனைகளிலும் காட்டுவது கமல் என்ற ஓர் உன்னதக் கலைஞனால் மட்டுமே முடியும்.... ச்சே மனு(ஷி?)ஷன் என்னமா நடிச்சி இருக்கார்....

முதல் 30 நிமிஷம் கதக் கதக் ன்னு போன கதை, அப்புறம் ஒரே சதக் சதக் ன்னு ரத்தமும் ரத்தமுமா சிவப்பை கொப்பளித்தது... "நிஞ்சா அசாசின்ஸ்" படத்துக்கு அப்புறம் இவ்வளவு ரத்தத்தை இப்படத்தில் தான் பார்த்தேன்.. தவறில்லை கதை களம் அப்படி..."அல் -கொய்தா" வை மையமா வச்சி படம் எடுக்கும் பொது ரத்தம் இல்லாம பின்ன முத்தம்மா இருக்கும்? [ அட ஆமா... கமல் வாய் கவிதை சொன்னதே தவிர வேற ஒன்னும் பண்ணலையே... ஹி ஹி.. ஹி...]

அவ்வளவு நேரம் பிராம்ஹணன் என்று சித்தரிக்கப்பட்டு,  மென்(பெண்)மையான மனிதனாயிருந்த Wiz (விஸ்வநாதன்) பாத்திரம் ஒரு இஸ்லாமியர் என்ற அதிர்ச்சியிலிருந்து பூஜா ( நாமும் தான் )மீளும் முன், கமல் ஒரு உளவுத்துறை அதிகாரி  என்று கதையோட்டம் நகர, நான் என்னை இருக்கையின் நுனியில் காண முடிந்தது.... அந்த முதல் தடாலடி சண்டை அட்டகாசம்.. அமர்க்களம்.,.. ஆப்கனிஸ்தான் சுரங்கங்கள், மார்கெட்டில் வெடிப் பொருட்களும், வெடி மருந்துகளும் காய்கறிகள் போல் அசால்டா   விற்கப்படுவது போன்றவை தமிழ் சினிமாவிற்குப் புதிது... இதைப் போன்ற கதைக்களம் கமல் என்ற ஒருவரால் மட்டுமே நினைக்க முடியும்...

ஹோலிவுட் படத்திருக்கு இணையான கதையை சிந்திக்க மட்டுமில்லாமல் அதனை அப்படியே படைத்த கலைஞனுக்கு ஒரு சபாஷ் போடாமல் தடை போட்ட நெஞ்சங்களை எண்ணி நான் மிகவும் வருத்தப்பட்டேன்....  எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் என்று புரட்சிப் பேச, அதக்காக குரல் கொடுக்க பலர் இருக்க, அதே விஷயத்தைப் பேச நான் வரவில்லை... இஸ்லாம் ஒரு மதம், மார்க்கம்.. 2 மணி 20 நிமிடத்தில் ஒரு இனத்தின் அடையாளத்தை ஒரு சினிமா மாற்றிவிடுமா? தவிர,   இஸ்லாமியர்களை கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டாக தடை என்றால், கதையின் நாயகன் ஒரு இஸ்லாமியன், நல்லவன், போராளி...  என்று ஏன் தடை கேட்டவர்கள்  எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே என் வாதம்...

சரி விடுங்க....கமலுக்கு சர்ச்சைகளோ, சண்டைகளோ புதிதல்ல...அதனால் தான் என்னவோ "யார் என்று புரிகிறதா" என்ற விஸ்வரூபம் பாடலில்   "தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா? " என்ற வரிகள் உள்ளன போலும்?? 
ஆங்காங்கே கதையில் சின்ன சின்ன தேக்கங்கள் இருப்பினும் அவை சுட்டிக் காட்டும் அளவுக்கு இல்லை.....மேலும் கதையின் கிளைமாக்ஸ் விஸ்வரூபம் 2 உருவாக உள்ளதாக எண்ண செய்கிறது...[வேண்டாம் அழுதுடுவேன் ன்னு.. வடிவேல் டயலாக்ஐ  கமல் சொல்லுவாரு...கொஞ்சம் அடங்கு...] எனவே தெளிவில்லாத கேள்விகளுக்கு பாகம் 2 தெளிவு படுத்தும் என்பதே என் கருத்து.... 

வெகு நாட்களுக்குப் பிறகு நான் முழுவதும் ரசித்துப் பார்த்த படம் விஸ்வரூபம்....கண்டடிப்பாக  தடை நீங்கி விரைவில் தமிழகத்தில் இந்தப் படம் திரையிடப் படும்.... பார்த்து என்ஜாய் பண்ணுங்க... என்ன, அண்ட்ரியா, பூஜா என்று இரண்டு கதாநாயகிகள் இருந்தும் கமல் கமலாக இல்லாமல் போனது கொஞ்சம் "வடை போச்சே"ன்னு எண்ணச் செய்கிறது.. .ஹி... ஹி...ஹி...


This entry was posted on 11:40 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On January 26, 2013 at 12:51 PM , ராஜ் said...

நல்லா எழுதி இருக்கீங்க...எனக்கும் நீங்க சொல்வதலாம் படம் பார்க்கும் போது தோன்றியது. ஏன் இந்த படத்தை தமிழக முஸ்லிம் மத தலைவர்கள் தடை செய்ய சொன்னார்கள் என்று புரியவேயில்லை. நிஜமாக பார்த்தால் அல்கொய்தா அமைப்பு தான் தடை செய்ய சொல்லி போராட வேண்டும்.

ஆனாலும் நிறைய கமல் டச் இருந்தது, க்ளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டி இருக்கலாம். நிறைய கேள்விகளுக்கு விடை அடுத்த பாகத்தில் சொல்லவர் என்று நினைக்கிறன்.

 
On January 28, 2013 at 9:30 AM , Anonymous said...
This comment has been removed by a blog administrator.
 
On January 28, 2013 at 9:30 AM , Anonymous said...
This comment has been removed by a blog administrator.
 
On January 28, 2013 at 10:09 AM , Satya said...

நண்பர் ராஜ் அவர்களே, உங்கள் வருகைக்கு நன்றி...தொடர்ந்து வருகை புரியுங்கள்...

சகோதரர் அஜீஸ் அவர்களே, உங்கள் வருகைக்கு நன்றி ! நான் சினிமாவை சினிமாவாகப் பார்க்கிறேன்...சரித்திரத்தைப் பற்றி பேசுகையில், நல்லனவற்றை மட்டும் சொன்னால் ஒரு சார்பாகிவிடும்...தீயனவையும் கலந்து சொல்வது தான் முறை...தவிர முஸ்லிம் சகோதரர்களை கொச்சைப் படுத்தி ஒரு காட்சியும் அமையவில்ல என்பது என் கருத்து....உங்கள் கருத்தை என் பதிவில் பதிவு செய்வது மதச் சார்பாக இருக்கும் என்பதால் நான் அதனை பதிவிலிருந்து அகற்றி இருக்கிறேன்..மன்னிக்கவும்....எனக்கு மதம் கிடையாது...ஆடு வெட்டுவதும், மெழுகு வர்த்தி கொளுத்துவதும் நாம் ஏற்ப்படுதியதே தவிர வேறொன்றும் இல்லை...மதம் வேண்டாம்..மனித நேயம் போதும்....

 
On November 23, 2013 at 6:35 AM , Logeshwari Vasudevan said...

sir, you r also kamal fan. i too. i like him very much because he is legend of tamil cinema. not else.