Author: Satya
•11:02 AM
 சமீபத்தில் நான் ஒரு ஆங்கில குறும்படம் / விளம்பரப்படம் பார்த்தேன்.[வித் subtitle? ன்னு கிண்டல் பண்றவங்க பத்தி எனக்கு கவலை இல்லை...ஹி ஹி ஹி ]அதுல, ஒரு 18 - 22 வயது பெண்ணொருத்தி [சும்மா கும்முன்னு இருப்பாங்கோ!!...தப்பா நினைக்காதீங்க நான் கலைய அர்ச்சனை பண்றவன்! ஆராதிக்கிறவன் !!] தன் காதலன் வீட்டின் வெளியே நின்றுகொண்டு அவனை அழைப்பாள்...பையன் என் இனத்தான்; காது கொஞ்சம் மந்தம் [காது மட்டுமா!] அவளுக்கு செவி சாய்க்கமாட்டான். அம்மணி கத்தி, ஓய்ந்து என்னசெய்வது என்று யோசித்து கீழே கிடக்கும் காகிதங்களை உருள் செய்தும், சிறு சிறு கற்கள் கொண்டு கூரை மீதும் அவன் நிழல் தெரியும் ஜன்னல் மீதும் வீசி எறிவாள்...நோ யூஸ்! இவள் செய்கையை தூரத்தில் இருந்து பார்க்கும் வழிபோக்கர் ஒருவர் உதவும் பொருட்டு [worst fellows பொண்ணுக்கு உதவி ன்ன அவனவன் கெளம்பிடராங்க !!!] அவள் அருகில் சென்று " கொஞ்ச நேரமா நான் உன்னை பார்த்திட்டிருகேன்; நீயும் விடாம முயற்சி பண்ற அவனும் நீ வீசியெறிய கற்களுக்கு கவனிக்கிற மாதிரி தெரில,  இதுல ட்ரை பண்ணுன்னு சொல்லி தன் செல்போனை கொடுப்பார்! அந்த பெண் தன் நன்றியை கண்களில் மட்டும் அல்லாமல் புன்னகையிலும் தெரிவித்து, அடுத்த கணம் அந்த செல்போனை ஜன்னலில் விட்டெறிய ஜன்னலும், செல்போனும் உடைய திகைத்து நிற்பான் அந்த வழிப்போக்கன் [காதலனும் தான்!!!]

அந்த பொண்ணு மாதிரியே நம்மில் பலபேர் ஊர்லே திரியறோம்! நான் அவர்களை இரும்ப திருடி பேரிச்சம் பழம் வாங்குற பசங்கன்னு சொல்லுவேன்! திருடறது ன்னு முடிவு பண்ணிட்ட நேரா பேரிச்சம் பழமே திருடேன்! [அடடா பின்றடா ! அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டா செதுக்கி பகத்துலேயே உட்கார வேண்டிய பய நீ!!!]

உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் புத்தி உள்ளது! [உனகிருக்கா? ன்னு கேட்பவர்களை நான் வன்மையா கண்டிக்கிறேன் :( ] புத்தி என்பது ஏட்டு சுரக்காய்; ஆனால் சமயோசிதம் உள்ளவன் வாழ்க்கையில் பல்வேறு கால கட்டத்தில் கவனிகபடுகிறான்! வெற்றியும் பெறுகிறான்! நம்மில் பலர் தான் செய்யும் வேளையில் கெட்டிகார தனம் இருந்தும், தொழில் நுட்பத்தில் கலை தேர்ந்தும் மேலதிகாரிகளின் அல்லது அலுவலகத்தின் நன்மதிப்பை பேர இயலாமைக்கு சமயோசிதம் சற்றே சரிந்து நிற்பது தான் காரணமென்பேன்! இன்னும் சிலர் சமயோசிதம் - சந்தர்பவாதம் இவைகளுக்கு வித்யாசம் தெரியாமல் இருகிறார்கள். தான் செய்த வேலையை தகுந்த இடத்தில உபயோகித்து நன்மதிப்பை பெறுபவன் சமயோசிதவாதி ; மற்றவன் செய்த வேலையை தான் செய்ததாக கூறுபவன் சந்தர்ப்பவாதி..

சந்தர்பவாதிகளிடத்து தன் திறமை சிதையாமல் இருக்க சமயோசிதமாய் இருப்போம் நாம்!
Author: Satya
•11:38 PM
வந்துட்டான்யா...வந்துட்டான்யா!! என்னோட பங்காளிங்க சொல்றது காதுல விழுது :) அவங்களுக்கு நான் சொல்றது...." ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்கமாட்டேன்..." [அட கூறுகெட்ட குப்பா...நீயே உன் பேச்ச கேட்காத போது மத்தவங்க எப்படி டா கேட்பானுங்கன்னு நெனைகாதிங்க ....] வெடல பசங்கலாம் ப்ளாக் எழுதறானுங்க !! நானும் ஒரு ட்ரை ப்ளீஸ்....ஹி...ஹி...ஹி....

வாழ்க்கை! ஒரு சின்ன கனவு...அதுல எவ்வளவு பிரச்சனைகள், போட்டிகள், பொறாமைகள்...யப்பா சாமி தாங்கலடா.. வரும்போதும் ஒன்னும் கொண்டு வரல போகும்போதும் ஒன்னும் கொண்டு போக போறதில்ல... இந்த இடைப்பட்ட காலத்தில ஒய் டென்ஷன்? [நல்லா தான் பேசற...ஆனா இருக்கற பிரச்சனை லே நீ வேற ஏன் இந்த புது முயற்சி?] என்ன பொறாமை :( வளரும் கலைஞன தடை செய்யதிங்க பா...

சரி விஷயத்துக்கு வருவோம் ... திடீர்னு நான் எழுத ஆரம்பிச்சேனா? எனக்குள் ஒரு கேள்வி...இல்ல பா...நீதான் ஒன்பதாவது படிக்கிற காலத்துலேயே கட்டுரை போட்டிலே கவிஞர் வைரமுத்து கையாலே "இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்" புத்தகம் முதல் பரிசா வாங்கினியே...ஏங்கேயூ கேட்ட குரல்...ம்ம் இருக்கட்டுமே இருக்கட்டும் அப்போ அவர் அடிச்ச கல்லால இப்போ முப்பத்திரண்டு வயசுல வலிச்சு மீண்டும் எழுத ஆரம்பிச்சிருக்கேன்...[விதி வலியது... உங்கள  யார் காப்பாத்துறது?]

என்ன புதுசா இந்த ப்ளாக்லே இருக்கும்? வித்யாசமா ஒன்னும் இல்ல நாளும் வித விதமா எதாவது இருக்கும்...அன்றாட வாழ்க்கைல நாம பல பேர சந்திக்கிறோம்... அதுல சில பேர பின்பற்ற நினைக்கிறோம்...இந்த ப்ளாக் மூலமா நான் சந்தித்த சில நல்ல உள்ளங்கள், நல்ல நிகழ்வுகள், சில துக்கங்கள், சில ஸ்வாரஸியங்கள், சில (பல) கலாய்ப்புகள், சமூக சீர்திருத்த முயற்சிகள் [வெச்சாண்டா ஒரு பஞ்ச ..அட்றா அட்றா..], சினிமா, பொழுது போக்கு ன்னு அள்ளி தர இந்த புதிய முயற்சி ...மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்...