Author: Sathish
•10:45 AM
பிரபலமாயிட்டாலே இப்படிதான்...வாசகர்கள், நான் அடிக்கடி பதிவு எழுதணும்னு  ஆசைப் படுகிறார்கள்... நமக்குத்தான் நேரமில்லை...[உனக்கு வர ஒன்னு ரெண்டு கமெண்டுக்கு தேவையா இந்த விளம்பரம்? ஹி ஹி ஹி ]

இங்கே [US] வந்த அம்மா அடுத்த மாதம் தாயகம் திரும்புகிறார்கள்...அதனால, ஷாப்பிங் லே கொஞ்சம் பிஸி...ஒரு நாலஞ்சு வாரம் முன்னாடி, என்னோட தங்கச்சிக்கு ஒரு MP3 பிளேயர் வாங்கி இருந்தேன்...அதுல எதோ கோளாறு...இங்கே online லே வாங்கறது,அதோட return பாலிசி மிகவும் பாராட்டத்தக்கது...வாங்கிய பொருள் சரி இல்லையென்றால், 30 நாட்களுக்குள் திரும்ப கொடுத்துவிடலாம்...இதற்கு காரணம் கூட தேவை இல்லை...ஆனால், இதை நம்ம ஊரு மக்கள் படு மட்டமாக பயன்படுத்துகிறார்கள்...வாங்கி அதனை பத்து பதினைந்து நாள் பயன்படுத்திவிட்டு திரும்ப கொடுத்துவிடுவது அப்பட்டமானது...அதுவும் shortterm லே வரவங்க பெட், தலையணை எல்லாம் வாங்கி பயன்படுத்திவிட்டு return   கொடுத்துடரானுங்க... [ரூம் போட்டு யோசிப்பானுங்களோ?]  சரி, நாம விஷயத்துக்கு வருவோம்.... நான் வாங்கின MP3 பிளேயர்லே சின்ன பிரச்சனை கடைசிவரை ON பண்ணவே முடிலே ...ஹி ஹி ஹி ..return பண்ணுவதற்காக வாங்கின கம்பனிக்கு பேசினதும், அவங்க எல்லாம்  விசாரித்து விட்டு எனக்கு ஓரு 'Packaging ஸ்லிப்' அனுப்பி வைத்தார்கள்... நான் செய்ய வேண்டியதெல்லாம் ஓரு டப்பாலே என்னோட MP3 பிளேயர் போட்டு இந்த ஸ்லிப் அதன் மேல் ஒட்டி போஸ்ட் ஆபீஸ்லே கொடுக்கணும்....எல்லாம் ரெடி பண்ணிட்டு போஸ்ட் ஆபீஸ் கெளம்பலாம்னு வெளியே வந்தா இந்த ஊரு போஸ்ட் women அவங்களுக்கே உறிய ஒரு மினி வேன்லே வந்து இறங்கினாங்க...இந்த ஊர்லேதான் எல்லாம் ஈசியாச்சேனு அவங்ககிட்டயே கொடுத்தா, வாங்கி அத ஸ்கேன் பண்ணி மேட்டர் முடிசிட்டு  போய்டே இருக்காங்க...என்னோட வேலை படு சுலபமா முடிச்சுது...அப்போ எனக்கு நம்ம ஊரு போஸ்ட் Man ஞாபகம் வந்துடுச்சு... 

சார் போஸ்ட்... நான் சின்ன வயசில அதிகமா கேட்டிருக்கேன்...காக்கி கலர் uniform  லே, சைக்கிள் லே பெல் அடிச்சிட்டு வர எங்கே தெரு postman குரல் அது... இப்போ எங்கே போச்சி அந்த குரல்? கடைசியா நான் எப்போ லெட்டர் எழுதினேன்? எனக்கு எப்போ லெட்டர் வந்துச்சு? கணினி மயமாகிவிட்ட காலகட்டத்தால் மின் அஞ்சல் படு பிரபலமாகி விட்டது...பிறந்தநாள், திருமணநாள், தீபாவளி, பொங்கல் என அணைத்து பண்டிகை சுபகாரியங்கள் எல்லாவற்றிற்கும் மின்வாழ்த்துகளும், மின்அஞ்சல்களும் பரிமாறிக்கொள்ளும் காலமாகிவிட்டது... ஒருத்தன் மண்டைய போட்டா கூட மின் அஞ்சல் வழியாதான் ஆறுதல் சொல்றானுங்க....அதுதவிர,   கிராமபுரங்கள் உட்பட வீட்லே  நாலு பேரிருந்தாலும் குறைந்தது 6 செல் போன், [ கேட்டா official , பர்சனல் சொல்றாங்க...]தொலை தொடர்பு நவீனமயமாகிவிடதால் இந்த தபால் உலகம் சற்றே நலிந்துவிட்டதோ?  

கடிதம் எழுதுவது ஒரு கலை. அதுவும் தமிழ்லே எழுதுவது ஒரு அற்புதமான உணர்வு... தொலைவிலிருப்பவர்கலை அருகாமையில் காட்டும் அழகிய கண்ணாடி...நான் சின்னதுலே ஏன் பாட்டி வீட்டுக்கு, நாகப்படினதிளிருந்த என்னோட அக்காவுக்கு  கடிதம் எழுதுவேன், அதுதவிர என்னோட மாமா சிங்கப்பூர்லே இருந்தார்...அப்போ அடிக்கடி நான் கடிதம் போடுவேன்.... அக்காவுக்கு எழுதும்போது இண்டு இடுக்கு ஒரு இடம்விடாம எழுதி கடைசியா மடிக்கற இடத்துலேயும், பக்கத்துக்கு வீடு ஆன்டியெ மிகவும் கேட்டதாய் சொல்லவும்னு எழுதி முடிப்பேன். [அட கர்மம் புடிச்சவனே !! அந்த வீட்லே அங்கிள்லே இல்லையா? னு கிண்டல் பண்றவன பர்த்தி எனக்கு கவலை இல்லை ஹி ஹி ஹி ]

என் பேர் போட்டு வர கடிதங்கள் அனைத்தும் நான் பத்திரப்படுதியுள்ளேன்...அதில் பல Dr  சதீஷ் M.B.B.S. என போட்டு வரும்....இப்போ நினைத்தாலும் எனக்கு சிப்பு சிப்பாவருது...8th Standard வரை நான் நல்லதான் படிச்சேன்...இருந்தாலும் Dr  சதீஷ் னு சொல்றது எனக்கே ஓவரா தான் தெரியும்..[ இப்போ அந்த லெட்டர் போட்டவங்கள தண்டிக்க ஒரே வழி என்னோட 12th மதிப்பெண்களை xerox  எடுத்து அனுபறது தான்....] நான் சொன்னேன் லே என்னோட மாமா ஒருத்தர் சிங்கப்பூர் லே இருந்து அடிக்கடி கடிதம் போடுவார்னு....அந்த கடிதம் வர பேப்பர், ஸ்டாம்ப் எல்லாம் ரொம்ப அழகா இருக்கும் நான் அதை பள்ளிக்கு எடுத்து சென்று பசங்களுக்கெல்லாம் காமிச்சு பெருமை அடிச்சிப்பேன்.... என் friend னு சொல்லிக்கற enemy ஒருத்தன், எனக்கு போட்டியா அவனோட அத்திம்பேர் மயிலாப்பூர் லே இருந்து எழுதிய கடிதத்த கொண்டுவருவான்...ரொம்பவும் வெகுளியான நான் மயிலாப்பூர, சிங்கப்பூர் மாதிரி ஒரு வெளிநாடுனு நெனச்சி பல தடவ ஏமாந்திருக்கேன்...[தூ...ரொம்ப பெருமை...பப்ளிக்கா சொல்ற விஷயமா டா இது...]...

ஆள் வளர, வளர சோம்பேறித்தனமும் கூடவே வளர்ந்து, நாளடைவில் கடிதம் எழுதறது ரொம்பவே குறைந்துவிட்டது...கல்லூரி இரண்டாம் ஆண்டுக்குப்பிறகு தமிழில் எழுதற சந்தர்ப்பமும் ரொம்பவே குறைந்து விட்டது.....என் தலையெழுத்து நல்ல இருக்கோ இல்லையோ...என் கையெழுத்து நல்லாவே இருக்கும்.....ரொம்ப நாள் எழுதாததால என் கையெழுத்து சின்னாபின்னமாகி இருக்கும்னு நெனச்சேன், ஆனால் என் கையெழுத்து அப்படியேதான் இருக்கு...அதை maintain பண்ண  நானும் பல தடவ டைரி எழுதனும்னு ஆரம்பிச்சு, பல டைரியெ ஜனவரி 1 லெ  ஆரம்பிச்சு  பொங்கலுக்குள்ள ஏறக்கட்டி இருக்கேன்...கொஞ்ச நாளா தொடர்வது இந்த மின் திரட்டுக்கள்தான்... இதுவாவது தொடர்ந்தால் சரி....ஆனால், நான் ஒன்றில் மட்டும் படுத் தெளிவாய் இருக்கேன்....கோடானகோடி தமிழ் வாசகர்களுக்காகவும், என் ப்ளாக்ன்  ரசிகர்களுக்ககவும் தொடர்வேன் என் கலைப் பணியை....அள்ளி தர நான் ரெடி ....துள்ளிப் பி[ப]டிக்க நீங்க ரெடியா?  [நோ ...நோ badwords...]


Author: Sathish
•9:09 AM
வழக்கம் போல Sep 8th காலை எழுந்து thatstamil.com அலசுகையில் அதிர்ச்சியான செய்தி...நடிகர் முரளி மாரடைப்பால் இறந்தது...அவருடைய ரசிகன் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு சக மனிதர், நன்கு பரிட்ச்யப்பட்ட நபர் திடீரென இறந்தது மனதை வெகுவே பாதித்தது...

ஒரு சில வாரங்கள் முன்புதான் Coffe with Anu நிகழ்ச்சியில் அவரையும். அவரது மகன் பேட்டியும் பார்த்தேன்...சின்ன வயசு, ஆரோக்யமான உடல் வாகு...அவருக்கா மாரடைப்பு? பூவிலங்கில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, மணிரத்தினத்தின் முதல் படமான, பகல் நிலவில் பலரது உள்ளங்களை கவர்ந்தவர் முரளி...அதன் பிறகு சில தொய்வு அவரது திரை உலக வரலாற்றில் இருப்பினும் மீண்டும் புது வசந்தம் மூலம் திரையுலகில் தனக்கோர் இடத்தைப் பிடித்தார் முரளி.

மைக் என்றால் மோகன் என்பதுபோல் கல்லூரி மாணவன் என்றல் நினைவுக்கு வருவது முரளி தான்....காதல் கதைகளில் சற்றே புதுமையான, வித்யாசமான கதைகள் கொண்ட படங்களை தமிழுக்கு தந்தவர் முரளி... இதயம் படத்தை ரசிக்காத தமிழ் இதயம் இருக்குமா? அவருடைய எதார்த்தமான நடிப்பும், அழகான சிரிப்பும் இன்னும் நம் கண்முன்னே நிற்கிறது...

திரை உலக வாழ்வில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் வாழ்ந்தவர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். தன் மகன் அறிமுகமாகி அவரது வளர்ச்சியை காண மனுஷன் எவளவு ஆசை பட்டிருப்பார். அதற்குள் இந்த திடீர் சம்பவம் திரை உலகத்தினரை மட்டும் அல்ல பலரது உள்ளங்களையும் கசக்கி இருக்கும்....அவரது குடும்பத்தாருக்கு அவரது இழப்பை தாங்கிக் கொண்டு அதிலிருந்து மீண்டு வரும்  தைரியத்தை தமிழ் நெஞ்சங்கள் தரட்டும்....முரளி அவர்களின் ஆத்மா சாந்தி பெறட்டும்...