Author: Satya
•9:46 AM
Town House என்று சொல்லப் படும் அந்த மூன்றடுக்கு மாடியில் இருந்த Garage கதவு, சத்யம் தியேட்டர் திரை மாதிரி மெல்ல உயர, உள்ளிருந்து பளிச்சென்று ஒரு கருப்பு கார் சீறிக்  கொண்டு வெளிப்பட்டது..."பார்த்து...பொறுமையே கெடையாது..." செல்லமாய் ஒரு அதட்டு அதட்டும் மனைவியை கண்ணாடி வழியே பார்த்தான் பிரஷாந்த். கொஞ்சம் குண்டா இருந்தாலும் சுசி sexy தான் என நினைத்தபடி வழக்கம் போல சீட்ல, கார் டாஷ்போர்ட்ல garage ரிமோட் தேடி சலிப்பாய் கீழிறங்கி manual லாக் செய்து திரும்ப கார்ல ஏறினான். சாயந்திரம் வேலை முடிச்சு வந்ததும் ரிமோட்ஐ தேடி பிடிச்சி ஒழுங்கா டாஷ்போர்ட்ல வைக்கணும்னு சொல்லிக் கொண்டான்...மீண்டும் சுசியைப பார்த்து போய்வரட்டுமா என்று தலை அசைத்து வீட்டின் முன்னே இருக்கும் லெட்டர் பாக்ஸ் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்த்த வீடு நர்மதா "குட் மார்னிங்..ஆபீஸ்  கெளம்பியாச்சு போல...எங்களுக்கு இன்னிக்கு கல்யாண நாள்..அதான் சுசிய பார்த்து ஸ்வீட் கொடுக்கலாம்னு.." சொல்லிக்கொண்டே போனாள்....இவள் ஒரு மின்னல்..அவளே கேள்வி கேட்டு அவளே பதில் சொல்லி...கடைசி வரை என்ன பேசவே விடல என நினைத்தவாறு மீண்டும் புறப்பட தயாராக "Wow ..Nice கார்" ன்னு மூணு ஸ்கூல் பொண்ணுங்க கமெண்ட்....தேங்க்ஸ் கூறிக்கொண்டே காரை ரோட்டினுள் இறக்கினான் பிரஷாந்த்...

அமெரிக்காவில்  ஒரு பிரபல  தனியார் அலுவலகத்தின் மேனேஜர் பிரஷாந்த். அவனது ஆபீஸ்  வீட்டிலிருந்து 35 மைல்...சுமார் 40 நிமிடமாகும்...போக 40 வர  40 ..இந்த 80  நிமிடங்கள் தான் பிரஷாந்த்தின்  தனிமையான் நேரம்...பல முக்கிய முடிவுகள், யோசனைகள் இளையராஜாவின் இசையில் இந்த நேரத்தில் உதிக்கும்...தனக்குதானே பேசிக்கொள்வான்; சிரித்துக்கொள்வான்...

"Wow ..Nice கார்" மீண்டும் ரீங்காரமிட்டது பிரஷாந்த்தின் மனதில்... சந்தோஷமாயிருந்தது.  "29,000  டாலர் செலவு பண்ணி புது கார் அவசியமா? இந்த வருடம் உங்களுடைய செலவ நெனச்சி, நீங்களே முடிவு பண்ணிகோங்க..." என்று சுசி சொல்லியும், புத்தம் புது கார் எடுத்தான்... "கார், வீடு, பொண்டாட்டி இதெல்லாம் ஒரு தடவ அமையற விஷயம் டா... நல்லதா அமஞ்சாதான் மனசு நெறைவா இருக்கும்....ம்ம்ஹம்ம்ம் பொண்டாட்டி விஷயத்துல ரொம்ப யோசிக்காம விட்டுட்டேன்... அட்லீஸ்ட் கார் விஷயத்துளையாவது கொஞ்சம் கவனமா இருக்கேன்" என்று கிண்டல் செய்யும்போது அவளின் செல்ல கோவத்தை மீண்டும் நினைத்து தனக்குதானே சிரித்துக் கொண்டான்...வழக்கமாக தான் நிறுத்தும் "STAR BUCKS" கடையின் முன்னிறுத்தி... ஒரு "Caffe Latte"  வாங்கிக்கொண்டு மீண்டும் காரை விரட்டினான்... அடுத்த சிந்தனை அவன் நினைவை  தட்டியது...  இன்று ஒரு முக்கியமான நாள்... புது contract விஷயமாக ஜெர்மனி லிருந்து வரும் கஸ்டமர்களுக்கு முக்கியமான presentation .... நான்கைந்து மாதங்களாக இதற்கான வேலைதான் ஓடியது... இந்த contract கெடச்சுட்டா 2 வருடம் ஒரு பிரச்சனையுமில்லை... வேலை சுமுகமாக போகும்...." என் ப்ளூ file ..." அதில்லல்லவா அனைத்தும் இருக்கிறது...எடுத்து வைத்தேனா? திடீர் கேள்வி பிரஷாந்தின் மனதில்... தான் highwayல் இருப்பதை சற்றும் யோசிக்காமல் கார் பெல்ட் கழட்டி பின்சீட்டில் இருக்கும் தன் லேப்டாப் பேகை  இழுக்க முற்படும் அதே சமயம், கார் சற்றே நிலைதடுமாறியது...பிரஷாந்த் சுதாரித்துக் கொள்ளுமுன், நிலைதடுமாறி ஓடிய கார், பலத்த சத்தத்துடன் அருகே சென்றுகொண்டிருந்த பெரிய truck ல் மோதி தூக்கி எறியப்பட்டது ...ஆ....என்று அலறினான் பிரஷாந்த்....

"என்னாச்சு ...என்னாச்சுங்க.." சுசியின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் பிரஷாந்த்... வேர்த்துக் கொட்டியிருந்தது .....இன்னும் அதிர்ச்சியிலிருந்து அவன் மீளவில்லை... "எப்போ பார்த்தாலும் அடிதடி, thrillerனு படம் பார்த்தா இப்படிதான் கெட்ட கெட்ட கனவு வரும்...தண்ணி குடிச்சிட்டு படுங்க..." கொஞ்சம் எரிச்சலாய் சொன்னாள் சுசி.. மணி பார்த்தான் பிரஷாந்த் 2 : 20 ...ச்சே என்ன பயங்கரமான கனவு...நாளைய மீட்டிங் நினைத்துக்கொண்டே படுத்திருப்பேன்.. அதான் இப்படி... இன்னமும் தனக்கு வேர்த்து கொட்டுவதையும், முச்சு வாங்குவதையும்  நினைத்துக்கொண்டே சற்றே கண் அசர்ந்தான் பிரஷாந்த்..

பிரஷாந்த் Tie கட்டிகொண்டே, கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் சுசி அருகே சென்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.."என்ன! சீக்கிரம் கிளம்பியாச்சு...." நெளிந்துக்கொண்டே எழுந்த மனைவியை ரசித்தான் ... "முக்கியமான மீட்டிங் இன்னிக்கு அதான்.. Evening லேட் ஆகலாம்..பயப்படாதே" சொல்லிக்கொண்டே கிளம்பினான்.....பிரஷாந்த்.

Garage கதவு, சத்யம் தியேட்டர் திரை மாதிரி மெல்ல உயர, உள்ளிருந்து பளிச்சென்று கருப்பு கார் சீறிக்  கொண்டு வெளிப்பட்டது..."பார்த்து...பொறுமையே கெடையாது..." செல்லமாய் அதட்டும் மனைவியை கண்ணாடி வழியே பார்த்தான் பிரஷாந்த். கொஞ்சம் குண்டா இருந்தாலும் சுசி sexy தான் என நினைத்தபடி வழக்கம் போல சீட்ல, கார் டஷ்போர்ட்ல garage ரிமோட் தேடி, சலிப்பாய் கீழிறங்கி manual லாக் செய்து திரும்ப கார்லே  ஏறினான். சாயந்திரம் வேலை முடிச்சு வந்ததும் ரிமோட்ஐ தேடி பிடிச்சி ஒழுங்கா டஷ்போர்ட்ல வைக்கணும்னு சொல்லிக் கொண்டான்...மீண்டும் சுசியைப பார்த்து போய்வரட்டுமா என்று தலை அசைத்து வீட்டின் முன்னே இருக்கும் லெட்டர் பாக்ஸ் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்த்த வீடு நர்மதா "குட் மார்னிங்..ஆபீஸ்  கெளம்பியாச்சு போல...எங்களுக்கு இன்னிக்கு கல்யாண நாள்..அதான் சுசிய பார்த்து ஸ்வீட் கொடுக்கலாம்னு.." சொல்லிக்கொண்டே போனாள்....பிரஷாந்தின் கண்களில் பயம்...உடலெங்கும் நடுக்கம்...
Author: Satya
•2:11 PM
அசல் பார்த்த வலியிலிருந்து மீளமுடியாமல் இருந்த எனக்கு வெகுவாக தெம்பளித்த படம் அங்காடித் தெரு. டைரக்டர் வசந்த பாலனின் மூன்றாவது படம் என்று நினைக்கிறன்...முதல் படம் ஆல்பம், புது முகங்கள் தான் அதிலும்...பழம்பெரும் நடிகர் 'தேங்காய்' ஸ்ரீநிவாசன் அவர்களின் பேத்தி நடிச்சது..சிம்பிள் கதைதான் ஆனாலும் ரொம்ப நல்லா இருந்தது...அடுத்தது வெயில்..இரண்டிலும் கலக்கிய பாலன்,அங்காடி தெருவிலும், புது முகங்களையும், நல்ல கதைக் கருவையும் தேர்ந்தெடுத்து அதை ரொம்ப நல்லா தந்திருக்கிறார்...சமீப காலமாக, ஹீரோக்களை மட்டும் நம்பாமல், கதைகருவை நம்பி எடுத்த படங்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கத் தான் செய்கிறது...அந்த வரிசையில், அங்காடித் தெரு 'கல்லூரி' அளவுக்கு என்னை கவர்ந்தது...ரொம்பவும் எதார்த்தமான, நாட்டில் நடந்துக் கொண்டிருக்கிற ஒரு கதை. சின்ன சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தி திரைகதை அமைந்துள்ளது...

சென்னையிலிருந்த போது நானும் அந்த மாதிரி கடைகளுக்கு போய் இருக்கிறேன்...நாள் முழுவதும் நின்றுகொண்டே  வியாபாரம் பார்க்கும் அவர்களுக்கு ரொம்பவும் சின்ன வயசா தான் இருக்கும்...பாவமா இருக்கும். அவர்களின் தேவையை தனக்கு சாதகமாக்கி கொள்ளு(ல்லு)கிறார்கள், அந்த கடைகளின் முதலாளிகள் எனும் முதலைகள்...நானும் என் வீட்டில் உள்ளவர்களும்  அந்த கடைகளுக்கு செல்லும் போது, ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்வோம்...அனாவசியமாக இதை எடு அதை எடுன்னு சொல்லாம, ரொம்பவும் அவங்க நேரத்தை எடுத்துக்காம செலக்ட் பண்ணிடுவோம்.... ஹ்ம்ம் இப்போதைக்கு எங்களால முடிஞ்சது...:(

படத்தில் நடித்த மகேஷ்,அஞ்சலி ரொம்பவும் அசத்திட்டாங்க...இயல்பான நடிப்பு...அஞ்சலி அம்சம்...டச் பண்ணிடாங்க [யாரு தான் உன்ன டச் பண்ணல?] வாழ்த்துக்கள்...படத்தில் வரும் Black  பாண்டியின் நடிப்பும் பாராட்டதக்கது...விஜய் டிவியின் 'கனா காணும் காலங்கள்' மூலம் பிரபலமான பாண்டி இந்த படத்துல ஒரு முக்கிய பாத்திரத்துல நடிச்சிருக்கார்...

பணக்காரர்களை விள்ளதனமாகவும், ஏழைகளை ரொம்பவும் நல்லவர்களாகவும்,  வேலையாட்கள் சாப்பிடும் மெஸ் அருவருப்பாகவும், பின்னர் அதே மெஸ் சாதரணமாகவும் காண்பிக்கப் படும் சில வழக்கமான சினிமா formula  தவிர படத்தில் குறை என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை...

தைரியமாக, சென்னை ரங்கநாதன் தெரிவில் வியாபாரம் செய்யும் வேலையாட்களின் அவல நிலையை அப்பட்டமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருகிறார் வசந்தபாலன்...இந்த படத்தின் மூலம் அவர்களின் கஷ்டமறிந்து அவர்களின் அவல நிலைகள் சற்றே தகர்க்கப் படுமானால் நலமே....