Author: Sathish
•1:49 PM
 சமீபத்தில் INCEPTION ன்னு ஒரு ஆங்கில  திரைப்படம் பார்த்தேன்...மனுஷங்க என்னமா யோசிக்கிறாங்க...திரைக்கதைக் கண்டு வியந்து போனேன்... படத்தோட கதை என்னென்னா, விஞ்ஞான வளர்ச்சியின் முதிர்ச்சியில், ஒரு குழு ஒருவனின் கனவுலகில் சென்று அவன் கனவில்,ஆழ் மனதில் தனக்கு தேவையான விஷயத்தை விதைப்பது தான் கதை... இப்படத்தில் Titanic புகழ் டிகாப்ரியோ ஹீரோவாக அசத்தி இருப்பார்...

Leonardo Dicaprio இப்படத்தில் பிறர் கனவுகளில் பயணித்து,கலந்துரையாடி அவர்கள்தம் ரகசியங்களை தெரிந்து கொள்வதில் பயிற்சி பெற்றவர். தனியாக பயணித்து ஆழ்மனதில் உள்ள விஷயங்களை வெளிக் கொணர்வதில் கைதேர்ந்த ஹீரோ, இதே போன்ற திறன் கொண்ட சக நண்பர்களின்  உதவியுடன் ஒரு டீம் ஆக கனவுகளில் பயணிப்பது, கனவுகளில் கனவு அதில் மற்றவர் நுழைவது என்று பல புதிய முயற்சிகளை கையாண்டுள்ளார் இயக்குனர் Christopher நோலன்;.Dark Knight , Bat Man series படங்களின் திரைக்கதையில் புகழ் பெற்றவர்...இதுபோன்ற படங்கள் தமிழில் வந்தாலே நமக்கு புரியாது...இங்கிலீஷ் லே வேறயா? சுத்தம்...ஆனாலும் விடாப்பிடியாக ரெண்டு மூணு தடவ போட்டு பார்த்து படத்த புரிஞ்சிட்டோமுல.....

படத்த முடிச்ச கையோட கனவுகள் பற்றிய சில தகவல்களை சேர்க்க ஆரம்பித்தேன். ரொம்பவே ஆச்சர்யப்படும்படி நெறைய விஷயங்கள் இருக்குங்க...கனவுகளின் ஆராய்ச்சி இன்னமும் தொடர்ந்துக் கொண்டிருகிறது...நெறைய விஷயங்கள கனவு ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்காங்க.. ஆனா நாம பல டுமீல்கள் சொல்றோம் ...அதுல சிலது கொஞ்சம் உண்மையும் இருக்கு... பொதுவாக கனவுகளில் கலர் இருக்கும்...நீல வானமும், பசுமையான நிலப்பரப்பும் கனவுகளில் வருவதன் மூலம் கலர் கனவுகள் தான் நமக்கு வரும் என்பதை நாம் உணரலாம்...ஆனால் சிலர் தமக்கு கனவுகள் black and white தான் வரும் என்று சொல்கிறார்கள்...அதுவும் உண்மை தான் ஆனால் 
70 % பேருக்கு கலர் கனவுகள் தான் வரும்...பொதுவாக கனவுகள் என்பது நிஜ உலகில் நாம் ச்நதித்த விஷயங்களின் பிம்பங்களே...இதுல ஆச்சரிய மூட்டுகிற விஷயம் என்னவென்றால், நாம் நம் வீட்டிலிருந்து பக்கத்துல இருக்க கடைக்கு போறோம், அதுக்கு 2 நிமிஷம் ஆகும் என்றால், கனவுலேயும் அதே நேரம் தான் ஆகுமாம். சும்மா டப்புன்னு போய் நிக்க முடியாது...எனக்கு இது ரொம்பவே ஆச்சரிய மூட்டுச்சு...அதே மாதிரி, பலபேர் எனக்கு நைட் fulla எனக்கு இன்னிக்கு கனவு சொல்றாங்க ..அது மாதிரி கண்டிப்பா இருக்க முடியாது...கனவின் காலம் 5 முதல் அதிகபட்சம் 20 நிமிஷங்களே...கனவுகளின் ஆராய்ச்சியில் கண்ட இன்னொரு உண்மை தூக்கத்தின் தொடக்க நிலையிலோ அல்லது முடிவிலோ தான் கனவு வருமாம்...ஆழ்ந்த தூக்கத்துல யாருக்கும் கனவு வராது...

நம்ம ஊர்லே கனவுகளுக்கு பல நம்பிக்கை இருக்கு...பகல் கனவு பலிக்காது, விடிகாலை கனவு பலிக்கும், கனவுல பாம்பு வந்தா கெட்ட சகுனம், அதே பாம்பு குத்தி ரத்தம் வந்தா நல்ல சகுனம்...இதெல்லாம் போதாத குறைக்கு, வீடு பற்றி எரியற மாதிர் கனவு கண்டா அந்த வீட்லே ஏதோ ஒரு பொண்ணு வயசுக்கு வரப் போகுதாம்...[ஸ்வபா முடிலே டா சாமி...] எங்கம்மாக்கு அந்த மாதிரி கனவு வந்ததும், சடங்கு செய்வதுக்கு பொருள் வாங்க ஆரம்பிச்சிடுவாங்க.... 

சில சமயம் நடக்கவிருக்கும் சம்பவங்கள் கனவுகளாக சிலருக்கு முன்கூட்டியே தெரிய வருவதும் உண்டு...அதற்குப் பெயர் 'Premonition' என்கிறார்கள். இதே மாதிர் சம்பவம், உரையாடல் இதற்கு முன்பு எப்போதோ நடந்தா மாதிரியே இருக்கே ன்னு நாம யோசிப்போம் பாருங்க அதான்  'Premonition'. எனக்கு சின்ன வயசுல சினிமா பாக்கற மாதிரி கனவு வரும்..சொன்ன நம்ப மாட்டீங்க, relay மாதிரி விட்ட எடத்துலே இருந்து அடுத்த நாள் படத்த continue கூட பண்ணி இருக்கேன்...ஆனா யாரும் நம்ப மாட்டேன்கறாங்க...ஆனா எப்போ அந்த மாதிரி கனவு வந்தாலும், விடிகாலை 4 மணிக்கு வீட்லே ஒரே பிரச்சனை தான்...படத்தோட இண்டர்வல் லே மூச்சா போறமாதிரி கனவுல வரும் நெஜத்துலேயும் போய்டுவேன்...[அட அசிங்கம புடிச்சவனே மூச்சா போனத மூனுக்கு போனா மாதிரி பெருமை அடிக்கறே....] ஈரமான பெட்ஷீட்ட என் பக்கத்துல தூங்குற என் தம்பி மேல போட்டு அவன் மேல பழி போட்டுடுவேன்... எங்கம்மா பாவம் அவன எழுப்பி ரெண்டு போட்டு அந்நேரத்துக்கு அவன குளிக்க வச்சு ஒரே ரகளை தான் போங்க ...ஹி ஹி ஹி 

கனவுகள் பற்றி ஆராயும் போது , சற்றே மனதை பாதித்த ஒரு விஷயம் 
பிறவியிலிருந்து கண் பார்வை இல்லாதவர்கள் கனவில் வெறும் குரல்கள் மட்டும் ஒலிக்குமாம். அவர்களால் உருவங்களை காண முடியாதாம்.....ச்சே பாவம் லே...கனவுல கூட அவங்களாலே நாம் அனுபவிக்கிற விஷயங்கள அனுபவிக்க முடிலே நெனைக்கும் போது மனம் சற்றே இறுக்கமாகி விட்டது...கனவுகள் இல்லாத ஜீவனில்லை... விலங்கினங்களும் கனவு காணும்...சில கனவுகள் அடிக்கடி வரும்...அதனை 'Recursive Dreams'  என்று சொல்கிறார்கள்.... ஒரு மனிதன் சராசரியாக 70 - 75 வருடங்கள் வாழ்கிறான் என்றால் 6 வருடகாலங்கள் அவன வாழ்க்கை கனவுகளில் கழிகிறது என்கிறது ஆராய்ச்சி...என்னோட சகா ஒருத்தன்  இருக்கான்...படுபாவி எப்போ பார்த்தாலும், பிதாமகன் விக்ரம் மாதிரி வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பான். என்னடா எப்போவுமே கனவுலகதுலே இருக்கன்னு கேட்டா, அப்துல் கலாம் தான் கனவு காண சொன்னார்னு சொல்லுவான்...அட கூருகெட்டவனே, அவர் சொன்ன கனவு வேற...அது வாழ்க்கையில் நீ அடைய விரும்பும் இடத்தை, வெற்றியை கனவு கான்...கனவு மெய்ப்படும்வரை விழித்திருன்னு சொன்னார்...அதையும் நம்ம ஆளுங்களால  மட்டும்தான்  இப்படி டைப் டைப்பா யோசிக்க முடியும்...என்ன கொடுமை சரவணா!!!