Author: Sathish
•11:34 AM
அவசரப் படாதீங்க...எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கு...ஒழுங்கா லைன் லே நில்லுங்க...ஹ்ம்ம் கேபிள் ஷங்கர் வாப்பா வா வந்து முதல் ஆளா நில்லு. பிச்சைப்பாத்திரம் சுரேஷ் வாங்க, டுபுக்கு ரங்கா , சாரு சார் எங்கே போறீங்க சும்மா வாங்க...இதில் என்ன கூச்சம்??? .பெய்யென பெய்யும் மழை - பிரதீப்..நீ இல்லாம எப்படி பா நீதானே புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சது வா...வா... இப்போ ஒன்னா நின்னு chorous  ஆ  காரி துப்புங்க...யப்ப்பா....முடிஞ்சுதா? இப்போ போ போ போய்கிட்டே இரு... வெயிட் எ நிமிட் ...த்து.....நானே துப்பி கிட்டேன்...இனி யாரும் துப்பக் கூடாது!!!

கடைசியா தேர்தல் சமயத்துல ஒரு பதிவு போட்டது...அதோட இப்போதான் வர! பிரச்சாரம் பண்ண வடிவேலையும் காணூம்!! உன்னையும் காணோம் ஹ்ம்ம்.... உனக்கெல்லாம் ப்ரீயா ப்ளாக் எழுத இடம் கொடுத்தவன உதைக்கணும் தானே நெனைகறீங்க!!!  வேலை அதிகம், மாடா உழைச்சேன், படிச்சேன் கிழிச்சேன்னு பொய் சொல்ல விரும்புல... யாருமே இல்லாத கடைக்கு டீ ஆத்தனாலும் [கமெண்ட் வராம பதிவு போடறத தான் சொல்றேன் ] atleast டீ [பதிவு] போடற திருப்தியாவது இருந்தது...அப்படி என்னதான் பண்ணோம் இந்த அஞ்சு மாசம்னு பார்த்த சொல்ற மாதிரி கருமம் ஒன்னும் இல்ல!காலை எழுந்தது முதல் இரவு படுக்கற வரை என்னதான் கிழிச்சேன்? சரி...விடுங்க பய புள்ள ஏதோ சோம்பெரித்தனதுல இருந்துட்டேன் ...அதுக்காக அப்படியே இருந்துடுவேனா?   எனக்கு என்ன ஆச்சு ஏது ஆச்சுனு நீங்க பீல் பண்ண மாட்டிங்க? அதான் இந்த அஞ்சு மாச கதைய உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் [கொல்லத்தான்] இப்போ எழுதறேன்...[டேய் நீ எழுதலே ன்னு ஒருத்தரும் கேள்வி கேட்கள ன்னு நெனைக்காதீங்க...கேட்கலனாலும் எழுதுவேன்!!!]

தினமும் காலை லே எழுந்ததும் இன்னிக்காவது  ஒரு பதிவு போட்டுடனும் ன்னு தோணும், நெஞ்சு பட படன்னு துடிக்கும்...கை எல்லாம் விறு விறு ன்னு இருக்கும் [போய் ஒரு நல்ல டாக்டர் ர பாரு] சிந்திச்சு ஒரு வழியா லேப்டாப் தொடப்போனா மணி இரவு 10  30 ஆகுது இன்னும் படுக்கலா ன்னு என் பொண்டாட்டி குரல்கொடுப்பா ஸ்வப்பா...ஒண்ணுமே பண்ணாம எப்படி டா டைம் போகுது ன்னு எனக்கு சத்யமா  தெரிலே... ஆனா கடந்த அஞ்சு - ஆறு மாசமா என் ஆபீஸ்ம்  மின்ன மாதிரி இல்ல, மனசாட்சி இல்லாம வேலைலாம் செய்ய சொல்றாங்க... இந்தியாக்கு சுதந்திரம் கெடச்சாச்சு லே?[ US லே உட்கார்ந்துகிட்டு கேட்கற கேள்விய பாரு? வெண்ணை!!] இன்னும் அடிமை மாதிரியே நடத்துறாங்க!!!

புது customer  florida லே ..அதனால வேலை கொஞ்சம் அதிகம்...அதுல ஒரு நல்ல விஷயம்னா கிழக்கு அமெரிக்க லே பல இடங்கள் சுத்தின நானும் என் மனைவியும்   florida மட்டும் தான் விட்டு வச்சிருந்தோம் ...இந்த புது வேலை லே அதுவும் சுத்தி முடிச்சோம்...

பொதுவா எனக்கு இந்த பெரிய பெரிய rides லே போறது பிடிக்காது...நம்ம மெரினா பீச் லே  குதிரை, வாத்து ன்னு இருக்க த்ரில்ளீர் ராட்டினம் தான் பிடிக்கும்...தில்லா ஏறுவேன் [கர்மம் கர்மம் ]ஆனா இங்கே கொலைவெறி லே திரியறானுங்க...உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன்...நீள் உருளை வடிவா ஒரு ride நெறைய பொடிசுங்க [8- 10 வயசிருக்கும் ] எல்லாம் உட்கார்ந்திருந்துது...சோ நானும் கொஞ்சம் மெல்ல சுத்தும்,,, ஊஞ்சள்  மாதிரி ஆட்டுவானுங்க ன்னு நம்பி உட்கார்ந்தேன். படுபாவிப் பசங்க... கண்டபடிபுரட்டி எடுத்தானுங்க....மயக்கம் வர சமயம் நாளா பக்கமும் சின்ன பைப் மாதிரி ஒன்னு லே தண்ணியே பெய்ச்சி அடிச்சானுங்க..தெளியே வச்சி அடிகிரானுங்களோன்னு யோசிக்கரதுக்குள்ள, அந்த ride லே போய் உட்காரப் போட்டிருந்த மேடை விரிஞ்சி உள்ளே இருந்து நெருப்பு அடிக்குது...அடப்பாவிகளா மசாலா தடவாத கபாப் மாதிரி என்ன use
  பண்றீங்களே ன்னு அழுகாச்சி அழுகாச்சியா வந்துது... என்ன ஒரு வில்லத்தனம்!!!Universal ஸ்டுடியோஸ், டிஸ்னி வேர்ல்ட் அது இதுன்னு ஒரே எந்சாய் தான் போங்க...குறிப்பா Harry Potter ride சக்கை போடு போட்டது...  3  நாள்  ஒரே rides ஆ போய், 1  வாரமா தண்ணி அடிச்சா மாதிரியே திரிஞ்சேன் .... 

 அது தவிர 250 வருடம் பழமையான காதொலிக் சர்ச்,  NASA , Tampa மற்றும் சுற்று வட்டாரத்துல இருக்க பீச் ன்னு அப்படியே ஓடுச்சு என் florida  பயணம்...ஒழுங்கா போய் வந்த இடத்தை பற்றி எல்லாம் எழுதினா கண்டிப்பா நாலஞ்சு பதிவு போட்டிருக்கலாம்...பாழாப் போன சோம்பேறித்தனம் ஒன்னும் பண்ண விடல...சரி விடுங்க...அதான் வந்துட்டேன்லே... வந்ததுக்கு, எனதன்பு  பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன்,  நல்ல பதிவுகளை படைத்திட வாழ்த்தி வணங்கி,  நானும் சோம்பேறித்தனம் இல்லாமல் இந்த புது வருடப் பிறப்புக்கு தொடர்ச்சியா பதிவுகளை படைத்திட உறுதி மொழி எடுக்கிறேன்.. [கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம எப்படி என்னால இப்படி இருக்க முடிது? ] தப்பே இல்ல...திரும்ப ஒவ்வொருதர லைன் லே நில்லுங்க!!!
Author: Sathish
•6:40 PM
அம்மாடி...ஒரு வழியா நம்ம ஊர்லே தேர்தல் முடிஞ்சுதுடா சாமி....ஆளாளுக்கு பண்ண ரவுசு இருக்கே ...அட்ரா...அட்ரா... நம்மை ஆளப் போற தலைவர பார்த்தா நமக்கு ஒரு முன்னுதாரமா இருக்கணும்...அப்படி ஒருத்தர கூட பார்க்க முடியவில்லையேன்னு யோசிக்கும் போது  அழுகாச்சி அழுகாச்சியா வருது....நான் இங்கே [அமெரிக்காவில் ] இது வரை ரெண்டு தேர்தலே பார்த்திருக்கேன்...1 Governer தேர்தல் 2 . President மற்றும் Senetar தேர்தல். இங்கேயும் தான் ஊர் ஊரா போய்  பிரச்சாரம் பண்ணாக... இவர் தான் வேட்பாளர், அவர் யாரு, என்ன பண்ணாரு என்ன பண்ண போறாரு என்பதை எல்லாம் ஊடகங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும், பத்திரிகை வாயிலாகவும் பார்க்க  முடிஞ்சது.... அத பாத்துப்புட்டு,  நம்ம ஊரு தேர்தல்களில் நடந்த அளப்பரையே பார்க்கும் போது, இவங்கள பார்த்து நாம கத்துக்க வேண்டியது நெறைய இருக்குன்னு தோணுது...அதெல்லாம் கத்துக்கிட்டா ரொம்ப டீஜிண்டா (I mean decent ஆ ) ஆயிடுவோமே...அது எதுக்கு? 

அது சரி, தேர்தல் முடிஞ்சி ஒரு மாசமாகுது இப்போ என்னடா அத பத்தி எழுதற? பொலம்பறன்னு நினைக்காதீங்க... தேர்தல் முடிஞ்சாலும், தேர்தலுக்கான சுவடுகள மறைவதற்குள் அடுத்த தேர்தலே வந்துடும்... நான் ஆங்காகே ஒட்டி வச்சிருக்க விளம்பர பானர்களையும், போஸ்டர்களையும் தான் சொல்றேன்...அது என்ன தெரிலே, நம்ம ஆளுங்களுக்கு விளம்பரங்களில் உள்ள மோகத்தைப் பார்த்தா எனக்கு வயித்தெரிச்சலா  இருக்கு... நம்ம ஊர்லே டிஜிட்டல் போஸ்டர் என்ன அவ்வளவு சீப்பா? அநியாயத்துக்கு காமெடி பண்றாங்க... இடப்புறம் இருக்க படத்த பார்த்ததும்  என்னோட வயித்தெரிச்சலோட வலி உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நெனைக்கிறேன்...ஏன் இந்த கொலை வெறின்னு தான் எனக்கு தெரில்லே... இவங்கெல்லாம் எவ்வளவு பெரிய தலைவர்கள்...அவங்கள இப்படி இந்த கோணத்துல பார்க்கனுமா? அதிலும் கடைசியா இருக்க வ.வூ.சி யே பாருங்க [விஜயகாந்த் வாயில தயிர் வடை வச்சுக்க சொல்லி எடுத்திருப்பான்களோ?] இந்த போஸ்டர் மூலமா என்னதான் சொல்லவறாங்க? விஜயகாந்த் சார் க்கு இப்படி ஒரு போஸ்டர் ஒட்டப்  பட்டது தெரியுமா? தெரிஞ்சா அவருக்கே  சிரிப்பு வருமே...

சரி போகட்டும், புது தலைவரு, புது தொண்டர்கள்.. ஆர்வக்கோளாறு ஏதோ பண்றாங்கன்னு பார்த்தா, பழம் தின்னு கொட்டை  போட்ட முன்னணித் தலைவர்களும் இப்படி காமெடி பண்றத தான் என்னால ஜீரணிக்க முடிலே... எப்படி தான் யோசிப்பாங்களோ? இந்த போஸ்டரப் பார்த்தா, எனக்கு 'நாடோடிகள்'  படத்துல வர அந்த காமெடி தலைவர் ஞாபகம் தான் வருது... கோ - கோ ன்னு அடுக்கு மொழிலே போடணும் என்பதற்காகவே போட்ட விளம்பரம் இதுன்னு நெனைக்கிறேன்...இதுல வேற பின்னாடி ADMK போஸ்டர்..ஒரு செகண்ட் நான், இந்த தேர்தல்லே இவங்க ரெண்டு பேரும் கூட்டணியோ ன்னு பதறிப் போயிட்டேன்.... பாருங்க ஸ்டாலின் தல மேல இரட்டை இல்லை சின்னம், கலைஞர் தலைக்கு  மேல MGR போட்டோ..

சரி, இதெல்லாம் தேர்தல் நேரத்துலே ஒரு மெசேஜ் வச்சி, ஏதோ கடைசி பென்ச் லே உட்க்கார்ந்து இருக்க தொண்டன் பண்ணிட்டான் விடுங்க..சில போஸ்டர்களா பார்த்தா என்னடா சொல்லவறீங்கன்னு தோனும்.  இது என்ன அரசியல் வருகைக்கான போஸ்டரா? இளைய தலவலி சீ தளபதி, தமிழகம் ஆயிட்டாரே... கட்சி ஆரம்பிச்சாச்சு, கொடி போட்டாச்சு ஏன் கண்டப் போராட்டம் கூட நடத்தியாச்சு...ஆனா பிரச்சாரம், பொதுக்கூட்டம் ன்னு மேடை ஏற மாட்டோம்...கோர்வையா என்னாலா பேசக் கூட முடியாது..ஆனா நான் ரௌடி ஆயிட்டேன் , ரௌடி ஆயிட்டேன் வடிவேலு சொல்ற மாதிரி நான் அரசியல்வாதி ஆயிட்டேன்ன்னு சொல்லிக்கவேண்டியது...அவர் பாஷையிலேயே  சொல்லனும்னா..."அண்ணா...என்னகன்னா இதெல்லாம்...நான் தெரியாம தான் கேட்கறேன் இதெல்லாம் தேவையா?"

இது யாருன்னு சத்யமா எனக்கு தெரில்லங்க.. பொங்கலுக்கு பெரிய கிரீடிங் கார்டு போட்டிருக்கார்னு நெனைக்கிறேன்... ஸ்வப்ப்பா....முடிலே... எதுக்காக இந்த விளம்பரம்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? ஏன் இப்படி ஊற நாசம் பண்றாங்க? பல கேள்விகள் நம்மிடையில், ஆனால் பதில் இல்லை....


விடு கழுதை, இந்த அரசியல் பிரமுகர்கள் தான் இப்படி பண்றாங்க பார்த்தா, இந்த போஸ்டர பார்க்கும் போது யாரை குறை சொல்றதுன்னு எனக்கு புரிலே... அந்த வரிகளை கூர்ந்து கவனிங்க மகா ஜனங்களே..."திரிஷாவின் சிரிப்பு , திகட்டாத இனிப்பாம்!!!!1958 S.S.L.C மாணவர்கள் ன்னு 8 பேரோட போட்டோ வேற...இதில்லென்ன பெருமை வேண்டி கெடக்கு? தள்ளாத வயசுல இப்படி தறிகெட்டு திரியனுமா?

பிரபலமானவர்களின் அலும்பல்களுக்கு இணையாகத்தான் சாதாரண மக்களும் செயல் படுகிறார்கள். உன் வீட்டு நிகழ்ச்சிக்கு, வாழ்த்து தெரிவிக்க ஊரெல்லாம் எதுக்கு போஸ்டர் அடிக்கற? கல்யாணம் பண்றத அவ்வளவுப் பெரிய சாதனையாக கருதுகிறார்கள்...புதுமணத்   தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவிக்க, மாமா, அத்தை சித்தி சித்தாப்பா ஒன்னு விட்ட பெரியப்பா அவன் இவன்னு ஒரு பெரிய லிஸ்ட் போட்டு, முடிஞ்சா அவங்களோட போட்டோ வேற போட்டு, ரெண்டு ஆர்டின் உள்ளே கல்யாணப் பொண்ணு மாப்பிள்ளையோட பழைய போட்டோ போட்டு வாழத்துக்கள தெரிவிப்பாங்க... மண்டபத்தோட வாசல் லே வரவேற்க்க ஏதோ ஆசைக்கு ஒன்னு வைக்கராங்கன்னா  கூட பரவாயில்ல... அவங்க வீட்டு கல்யாணத்துக்கு வாழ்த்து சொல்ல ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சி ஓட்டறது எதுக்குங்க? இந்த போஸ்டர் பத்தி பேசும்போது, எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருது...நான் பச்சைப்பன் கலைக் கல்லூரிலே படிக்கும் போதே என்னோட சீனியர் ஒருத்தன் படிக்கிற காலத்திலேயே கல்யாணம் பண்ணிகிட்டான்.. தலைவரு கல்யாணத்துக்கு அடிச்ச போஸ்டர்கள் போக, கொஞ்சம் புதுமையா இருக்கட்டும்ன்னு "கொடைக்கானலுக்கு தேனிலவு போய் வெற்றியுடன் திரும்பும் திருவை வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்' ன்னு அவன் சொந்தகாற பசங்க பேரெல்லாம் போட்டு அவன் தெரு புல்லா போஸ்டர் அடிச்சி ஒட்டி இருந்தான்... என்னோட வாய் தான் சும்மா இருக்காதே, 'என்ன சீனியர் கொடைக்கானலுக்கு ஹனிமூன் போனியே, பாக்க வேண்டியதெல்லாம் பார்த்தாச்சா? ன்னு கேட்டேன்...துரத்தி துரத்தி அடிக்க வந்துட்டான்..[சத்தியமா நான் கொடைக்கனால மனசுல வச்சி தான் கேட்டேன் ...ஹி ஹி ஹி ]... எதுக்கு ஓரார் வாய்க்கு அவல் போடற மாதிரி செய்திகள  போஸ்டர் லே  போடறது? பயபுள்ள அதுக்கப்புறம் போஸ்டர் போடறதில்ல லே ...

கல்யாணத்துக்கு மட்டுமில்ல...செத்தாலும் இதே மாதிரி தான்...செத்து போனவன் கண்ணுல இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் போட்டு இரங்கல் தெரிவிகிறார்கள்...மின்னேலாம் இந்த மாதிரி போஸ்டர்லே ரெண்டு பெரிய கண்கள் போட்டு அதுலே இருந்து கண்ணீர் வரும்...இப்போ இறந்தவர்கள் கண்ணுலே இருந்தே கண்ணீர் வர மாதிரி எதுக்கு போடறாங்க? ஐயோ ஐயோ.. சிறு பிள்ளைத் தனமா லே இருக்கு... நாம சுத்தம்மா இல்லாம சும்மா சினிமாகாரர்களையும் , அரசியல்வாதிகளையும் பழிக்கக் கூடாது...நெனச்சதுக்கெல்லாம் நாமும் போஸ்டரப் போட்டு ஊர அசிங்கப்படுதிட்டு அடுத்தவர்கள்   மேல சொல்லக் கூடாது.....இப்படி அடிக்கற டிஜிட்டல் போஸ்டர் லே நான் வன்மையா கண்டிக்கறது ஒன்னு தான்....'எங்கள் வீட்டு மகாலட்சுமி மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி" ன்னு சின்ன பொண்ணு போட்டோவ போட்டு ...ச்சே கொடுமைங்க இது...பாவம் அந்த புள்ள ஒழுங்கா ஸ்கூல்க்கு போயிட்டு வந்திருக்கும்....அத புடிச்சி  ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சி ...காளிபசங்க கிண்டல் பண்றதுக்கா? முட்டாள்தனமான போஸ்டர்லே முதல் இடமே இந்தமாதிரி சமாசாரத்துக்கு போஸ்டர் அடிக்கறது தான். நாம வாங்கற அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையா? கொஞ்சம் யோசிச்சி பாருங்க மக்களே!!!!
Author: Sathish
•1:49 PM
 சமீபத்தில் INCEPTION ன்னு ஒரு ஆங்கில  திரைப்படம் பார்த்தேன்...மனுஷங்க என்னமா யோசிக்கிறாங்க...திரைக்கதைக் கண்டு வியந்து போனேன்... படத்தோட கதை என்னென்னா, விஞ்ஞான வளர்ச்சியின் முதிர்ச்சியில், ஒரு குழு ஒருவனின் கனவுலகில் சென்று அவன் கனவில்,ஆழ் மனதில் தனக்கு தேவையான விஷயத்தை விதைப்பது தான் கதை... இப்படத்தில் Titanic புகழ் டிகாப்ரியோ ஹீரோவாக அசத்தி இருப்பார்...

Leonardo Dicaprio இப்படத்தில் பிறர் கனவுகளில் பயணித்து,கலந்துரையாடி அவர்கள்தம் ரகசியங்களை தெரிந்து கொள்வதில் பயிற்சி பெற்றவர். தனியாக பயணித்து ஆழ்மனதில் உள்ள விஷயங்களை வெளிக் கொணர்வதில் கைதேர்ந்த ஹீரோ, இதே போன்ற திறன் கொண்ட சக நண்பர்களின்  உதவியுடன் ஒரு டீம் ஆக கனவுகளில் பயணிப்பது, கனவுகளில் கனவு அதில் மற்றவர் நுழைவது என்று பல புதிய முயற்சிகளை கையாண்டுள்ளார் இயக்குனர் Christopher நோலன்;.Dark Knight , Bat Man series படங்களின் திரைக்கதையில் புகழ் பெற்றவர்...இதுபோன்ற படங்கள் தமிழில் வந்தாலே நமக்கு புரியாது...இங்கிலீஷ் லே வேறயா? சுத்தம்...ஆனாலும் விடாப்பிடியாக ரெண்டு மூணு தடவ போட்டு பார்த்து படத்த புரிஞ்சிட்டோமுல.....

படத்த முடிச்ச கையோட கனவுகள் பற்றிய சில தகவல்களை சேர்க்க ஆரம்பித்தேன். ரொம்பவே ஆச்சர்யப்படும்படி நெறைய விஷயங்கள் இருக்குங்க...கனவுகளின் ஆராய்ச்சி இன்னமும் தொடர்ந்துக் கொண்டிருகிறது...நெறைய விஷயங்கள கனவு ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்காங்க.. ஆனா நாம பல டுமீல்கள் சொல்றோம் ...அதுல சிலது கொஞ்சம் உண்மையும் இருக்கு... பொதுவாக கனவுகளில் கலர் இருக்கும்...நீல வானமும், பசுமையான நிலப்பரப்பும் கனவுகளில் வருவதன் மூலம் கலர் கனவுகள் தான் நமக்கு வரும் என்பதை நாம் உணரலாம்...ஆனால் சிலர் தமக்கு கனவுகள் black and white தான் வரும் என்று சொல்கிறார்கள்...அதுவும் உண்மை தான் ஆனால் 
70 % பேருக்கு கலர் கனவுகள் தான் வரும்...பொதுவாக கனவுகள் என்பது நிஜ உலகில் நாம் ச்நதித்த விஷயங்களின் பிம்பங்களே...இதுல ஆச்சரிய மூட்டுகிற விஷயம் என்னவென்றால், நாம் நம் வீட்டிலிருந்து பக்கத்துல இருக்க கடைக்கு போறோம், அதுக்கு 2 நிமிஷம் ஆகும் என்றால், கனவுலேயும் அதே நேரம் தான் ஆகுமாம். சும்மா டப்புன்னு போய் நிக்க முடியாது...எனக்கு இது ரொம்பவே ஆச்சரிய மூட்டுச்சு...அதே மாதிரி, பலபேர் எனக்கு நைட் fulla எனக்கு இன்னிக்கு கனவு சொல்றாங்க ..அது மாதிரி கண்டிப்பா இருக்க முடியாது...கனவின் காலம் 5 முதல் அதிகபட்சம் 20 நிமிஷங்களே...கனவுகளின் ஆராய்ச்சியில் கண்ட இன்னொரு உண்மை தூக்கத்தின் தொடக்க நிலையிலோ அல்லது முடிவிலோ தான் கனவு வருமாம்...ஆழ்ந்த தூக்கத்துல யாருக்கும் கனவு வராது...

நம்ம ஊர்லே கனவுகளுக்கு பல நம்பிக்கை இருக்கு...பகல் கனவு பலிக்காது, விடிகாலை கனவு பலிக்கும், கனவுல பாம்பு வந்தா கெட்ட சகுனம், அதே பாம்பு குத்தி ரத்தம் வந்தா நல்ல சகுனம்...இதெல்லாம் போதாத குறைக்கு, வீடு பற்றி எரியற மாதிர் கனவு கண்டா அந்த வீட்லே ஏதோ ஒரு பொண்ணு வயசுக்கு வரப் போகுதாம்...[ஸ்வபா முடிலே டா சாமி...] எங்கம்மாக்கு அந்த மாதிரி கனவு வந்ததும், சடங்கு செய்வதுக்கு பொருள் வாங்க ஆரம்பிச்சிடுவாங்க.... 

சில சமயம் நடக்கவிருக்கும் சம்பவங்கள் கனவுகளாக சிலருக்கு முன்கூட்டியே தெரிய வருவதும் உண்டு...அதற்குப் பெயர் 'Premonition' என்கிறார்கள். இதே மாதிர் சம்பவம், உரையாடல் இதற்கு முன்பு எப்போதோ நடந்தா மாதிரியே இருக்கே ன்னு நாம யோசிப்போம் பாருங்க அதான்  'Premonition'. எனக்கு சின்ன வயசுல சினிமா பாக்கற மாதிரி கனவு வரும்..சொன்ன நம்ப மாட்டீங்க, relay மாதிரி விட்ட எடத்துலே இருந்து அடுத்த நாள் படத்த continue கூட பண்ணி இருக்கேன்...ஆனா யாரும் நம்ப மாட்டேன்கறாங்க...ஆனா எப்போ அந்த மாதிரி கனவு வந்தாலும், விடிகாலை 4 மணிக்கு வீட்லே ஒரே பிரச்சனை தான்...படத்தோட இண்டர்வல் லே மூச்சா போறமாதிரி கனவுல வரும் நெஜத்துலேயும் போய்டுவேன்...[அட அசிங்கம புடிச்சவனே மூச்சா போனத மூனுக்கு போனா மாதிரி பெருமை அடிக்கறே....] ஈரமான பெட்ஷீட்ட என் பக்கத்துல தூங்குற என் தம்பி மேல போட்டு அவன் மேல பழி போட்டுடுவேன்... எங்கம்மா பாவம் அவன எழுப்பி ரெண்டு போட்டு அந்நேரத்துக்கு அவன குளிக்க வச்சு ஒரே ரகளை தான் போங்க ...ஹி ஹி ஹி 

கனவுகள் பற்றி ஆராயும் போது , சற்றே மனதை பாதித்த ஒரு விஷயம் 
பிறவியிலிருந்து கண் பார்வை இல்லாதவர்கள் கனவில் வெறும் குரல்கள் மட்டும் ஒலிக்குமாம். அவர்களால் உருவங்களை காண முடியாதாம்.....ச்சே பாவம் லே...கனவுல கூட அவங்களாலே நாம் அனுபவிக்கிற விஷயங்கள அனுபவிக்க முடிலே நெனைக்கும் போது மனம் சற்றே இறுக்கமாகி விட்டது...கனவுகள் இல்லாத ஜீவனில்லை... விலங்கினங்களும் கனவு காணும்...சில கனவுகள் அடிக்கடி வரும்...அதனை 'Recursive Dreams'  என்று சொல்கிறார்கள்.... ஒரு மனிதன் சராசரியாக 70 - 75 வருடங்கள் வாழ்கிறான் என்றால் 6 வருடகாலங்கள் அவன வாழ்க்கை கனவுகளில் கழிகிறது என்கிறது ஆராய்ச்சி...என்னோட சகா ஒருத்தன்  இருக்கான்...படுபாவி எப்போ பார்த்தாலும், பிதாமகன் விக்ரம் மாதிரி வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பான். என்னடா எப்போவுமே கனவுலகதுலே இருக்கன்னு கேட்டா, அப்துல் கலாம் தான் கனவு காண சொன்னார்னு சொல்லுவான்...அட கூருகெட்டவனே, அவர் சொன்ன கனவு வேற...அது வாழ்க்கையில் நீ அடைய விரும்பும் இடத்தை, வெற்றியை கனவு கான்...கனவு மெய்ப்படும்வரை விழித்திருன்னு சொன்னார்...அதையும் நம்ம ஆளுங்களால  மட்டும்தான்  இப்படி டைப் டைப்பா யோசிக்க முடியும்...என்ன கொடுமை சரவணா!!!
Author: Sathish
•4:13 PM
 விஷயம் ஒண்ணுமில்லையா? இல்ல என் மூளை ஒழுங்கா வேலை செய்யவில்லையா? [ரொம்ப வெகுளியாவே இருக்கேன் பாருங்க...32 வயசாகியும் இன்னமும் மூளை வேலை செய்யாதத திண்ணமா உணர முடியல ஹி ஹி ஹி ] பதிவு போட்டு பல நாள் ஆச்சு!! அப்படியே ஒரு பதிவு எழுதினாலும் அது திரை விமர்சனமா தான் இருக்கு...இது வேலைக்காகதுடியோவ்...பார்த்து பக்குவமா நடந்துக்க....இப்படியே போனா வர ஒன்னு ரெண்டு கம்மேண்டுக்கும் ஆப்பு வந்துடும்...

சரி நாம விஷயத்துக்கு வருவோம்...பல பேர் திட்டுற அளவுக்கு அப்படி ஒன்னும் வெளங்காத படம் இல்லைங்க நடுநிசி நாய்கள். கண்டிப்பாக கவுதம்மேனன் எடுத்துக்கொண்ட கதைக் களத்தை பாராட்டியே ஆகவேண்டும். ஆரம்பித்தது முதல் முடிவு வரை தொய்வே இல்லாத திரைக்கதை. தமிழில் ஒரு கிரைம் த்ரில்லர் திரைக்கு வந்து பல காலம் ஆகிறது...பல பதிவுகளில் இந்தப் படத்துக்கு பல எதிர்ப்புகள், வன்மையான விமர்சனங்கள் இருப்பதை என்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது...மகன் தந்தை உறவு, மகன் வளர்ப்புத் தாய் உறவு என முரண்பாடான உறவை திரையில் கண்டு முகம் சுளிக்கும் இந்த சமுகம், நிஜத்தில் இருப்பது தான் திரைக்கு வருகிறது என்பதை ஏன் எண்ணிப் பார்க்க மறுக்கிறது...இன்றுகூட 8 வயது சிறுமியை கற்பழிக்க முயன்று தோற்ற கோபத்தில் சொந்த மகளைக் கொன்று ரயில் தண்டவாளம் அருகில் புதைத்த தந்தையின் செய்தி ஒன்றை செய்திதாளில் கண்டேன். எனவே வக்கிரமாக உள்ளது என்பதை விட நாம் வாழும் இந்த சமுதாயத்தில் இப்படியும் பல கொடுமைகள் நடக்கிறது என்பதை திரையிட்டுக் காட்டிய கவுதம்மேனன் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது..

இன்னொரு கவனிக்கப் படவேண்டிய ஒரு சமாச்சாரம், பாடல்களுக்காகவே  பலமுறை பார்க்க தூண்டிய கவுதம்மேனன் படங்களுக்கு மத்தியில், பாடல்கள் மட்டுமல்ல , பின்னணி இசைக்கூட இல்லாமல் ஒரு படத்தை அதுவும் ஒரு த்ரில்லர் படத்தை படைத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்... 

வீராவாக நடித்த வீராவின் நடிப்பு பாரட்டும்படியுள்ளது...நாயகி சமிரா படம் முழுக்க அலறியபடியே ஓடுகிறார.மீனாட்சியம்மா இரண்டாவது பாதியில் மிரள வைக்கிறார்.. பாரதி ராஜாவின் 'சிகப்பு ரோஜாக்கள்' கூட இப்படத்தை ஒப்பிடமுடியாது...[யார் ஒப்பிட்டானு கேட்காதிங்க...காபி வித் கவுதம் லே கவுதம்மேனன் சொன்னார் ] அதில் கமலை வில்லத்தனமாக காண்பித்தாலும், கடைசியில் அவர் மீது பரிதாபம் தான் வரும்.. ஆனால் வீராவின்  மேல் சுத்தமாக பரிதாபம் ஏற்படவே இல்லை..மாறாக கோபம்தான் வருகிறது...தவிர 'சிகப்பு ரோஜாக்களில்' ஒரு அழகிய காதல் கதை இருந்தது. ஸ்ரீதேவியின் பாத்திரப் படைப்பிலும் ஒரு நளினம் இருந்தது...ஆனால் இதில் சமீரவிற்கு ஒன்னும் ஸ்கோப் இல்லை...
சொல்ல மறந்துட்டேனே...சில வாரங்களுக்கு முன் 'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியில் இதே படத்தைப் போன்ற குறும்படத்தை பார்த்தேன்...இதோ உங்கள் கண்களுக்கு அந்த குறும்படம்....



கண்டிப்பாக ஆங்கில சைக்கோ கொலையாளிகள் படத்துக்கு இணையாக 'நடுநிசி நாய்கள் ' சொல்ல முடியாவிட்டாலும்  தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய  சைக்கோ படங்களில் இப்படமும் முன்னணியில் இருக்கும்... இந்த படம் உங்கள ரொம்ப [இல்ல கொஞ்சம் கூட]  இம்ப்ரெஸ் பண்ணலேனா வருத்தப்படாதீங்க...தமிழ் சினிமா இல்ல, உலக சினிமாக்கு ஒரு கலைபுயல், சினிபீறங்கி விரைவில் வெளிவர உள்ளது. அவுக கண்டிப்பாக பல உன்னத கலைப் பணிகளை செய்து உங்களை உற்சாகப் படுத்துவாக...இப்போதைக்கு யார்கிட்ட அச்சிச்டன்ட்டா சேரரது என்ற குழப்பத்தில் இருப்பதால் கொஞ்சம் லேட் ஆகுது...ஆனா முடிவெடுத்துட்டா என் பேச்சே நானே கேட்க மாட்டேன்... [அயோ களு கொடுத்துட்டேனோ?]
Author: Sathish
•8:29 AM
தொடர்ச்சியாக தோல்வியை தழுவிக் கொண்டிருந்த "விஜய்" படங்கள் வரிசையில் காவலன் சற்றே வேறுபட்டாலும், பத்து வருஷத்திற்கு முன்பு வரவேண்டிய கதையை இப்போ தூசு தட்டி படமாக்கப்பட்டதாக தோன்றுகிறது....[என்னுடைய ப்ளாக் போலதான்..எப்போவோ வந்த படத்துக்கு இப்போ விமர்சனம் எழுதறேன் பாருங்க..ஹி ஹி ஹி ]ஒரே ஆறுதல் கதையே இல்லாம நடிச்ச தளபதி, பழசோ, புதுசோ இப்போ ஒரு கதை லே நடிச்சிருக்கார் என்று ரசிகர்கள் திருப்தி அடையலாம்...

ஆரம்ப காட்சிகள பார்த்து அடடா, இதுவும் பண்டல் தானோ னு தோனுச்சு எனக்கு...எடுத்தவுடன் ஒரு fight ...வடிவேலு நான் உங்க கிட்ட அசிஸ்டண்டா சேரனும் னு வரர்து [என்ன பண்ணார்னு அசிஸ்டன்ட் ...] .இதெல்லாம் பார்த்து, வடிவேலு பாணி லே ஐயோ ஐயோ னு நெனசசிட்டே இருக்கும் போது கதை மெல்ல சூடு பிடிக்க ஆரம்பிச்சது ... விஜய் இந்த படத்துக்கு கொஞ்சம் work பண்ணி இருக்கார்.. டிரஸ்ஸிங் லே இருந்து...எல்லாமே கொஞ்சம் ஓகே தான்... உண்மைய சொல்லப் போனால் நான் ஒரு விஜய் ரசிகன் தான்...காலேஜ் படிக்கும் போது எந்த ஒரு கல்ச்சுரல்ஸ் என்றாலும் தளபதி விஜய் பாட்டுக்கு 'தலைவாசல்' விஜய் மாதிரி  ஆடி [துக் கருமம் கருமம்] கலக்கிய நாட்கள் எத்தனை ! எத்தனை !!  ஆனால் நல்ல படம் கொடுக்காவிட்டாலும் நான் ரசிகனாக இருப்பேன் என்று சொல்லிக்கொள்ளும் வகையில் ரசிகனாக இருக்க நான் விரும்பவில்லை...[ஆமா ! இதப் பார்த்து விஜய் தேம்பி தேம்பி அழப் போறாரு...போடாங்ங்ங்ங்..] ஆனால், இந்த படம் மீண்டும் என்னை விஜய் ரசிகனாக மாற்றத்தான் செய்கிறது... அடுத்து வரும் படங்களிலும் சற்றே கவனமான் செயல் பட்டால் விஜய் மீண்டும் இழந்த இடத்தைப் பெறலாம்...[ டேய் டேய்...நீ ரொம்ப பேசற...சாரி எழுதுற...உன்ன வச்சித் தான் விஜய் வாழக்கை ஓட்ற மாதிரி பில்டப் கொடுக்கற...அடங்குடா...] 

பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் விஜய் பேட்டி பல டிவிகளில் ஒளிபரப்பானது ( சன் டிவி தவிர )...அதில காவலனுக்கு ஓவரான பில்ட்அப்  கொடுத்தாங்களோ னு தோணுது... என்னை பொறுத்த மட்டில் வித்யாசம் என்று சொல்வதற்கு ஒன்னும் இல்ல...விஜய் மீண்டும் ஜெயிக்க கையாண்ட உத்தி கொஞ்சம் பழசு தான் ...[இப்படி பழைய பாணி லே பிரவேசிக்கணும்னா  நம்ம சங்கவி, சுவாதி இவங்கெல்ல கூட்டி வந்திருக்கலாமே!!! ] எனக்கெனவோ 'காலமெல்லாம் காதல் வாழக - முரளி ' படத்த பார்த்தா மாதிரியே இருக்கு முதல் பாதி...

மலையாள படம் ரீமேக் என்பதை மீடியா சொல்லாமல் இருந்திருந்தாலும், மலையாளப் படத்தோட  டச்சை  பல இடங்களில் கண்டு பிடிச்சிருக்கலாம்... இந்த படத்தோட இன்னொரு ஹை லைட்  வடிவேல் காமெடி!!! ரசிக்கும் படியாதான் இருந்தது... படம் முழுக்க இந்த படத்தை வெற்றிப் படமாக்கியே தீரவேண்டும் என்ற விஜயின் ஆதங்கம் தெரிகிறது...பஞ்ச் டயலாக் இல்லாம, சாதரணமாக நடித்த விஜய்க்கு ஒரு சபாஷ்...படத்துல பஞ்ச் இருக்கலாம், தப்பில்லை...பஞ்ச்க்காக  செலவு பண்ணி படம் எடுக்கற வித்தையே மாற்றினாலே போதும், தல சாரி தளபதி நீங்க ஜெயிபீங்க....

படத்துக்கு முன்ன பின்ன அரசியல் என்ட்ரி லே அடக்கி வாசிச்ச விஜய் இப்போ மீண்டும்  அரசியல் பற்றியே பேச்சுகளில் அடிபடறது எனக்கென்னவோ சரியா படல... வாயத்தறந்து முழுசா ஒரு லைன் கூட அவரால பேச முடிலே....தெரிலே...அவர் பிரச்சாரத்துக்கு தவிக்கப் போறது, பிரசவத்துக்கு தவிக்கற மாதிர் தான் இருக்கும் நெனைக்கிறேன்... ... என்ன நடக்குது னு  பார்போம்...ஆனா எனக்கெனவோ விஜய் சனியன தூக்கி பனியன் லே போட்டுக்கிறார்  னு தோணுது... காவலனுக்கு காலம் தான் பதில் சொல்லும்.

Author: Sathish
•10:52 PM
எனக்கு இன்னமும் நல்லா நினைவிருக்கு...எங்கப்பா 1985 லே EC டிவி - கருப்பு வெள்ளை வாங்கினது...அப்போ ரொம்ப பெருமையா இருந்தது.. அப்பெல்லாம் டிவி ஒரு சில வீட்லே தான் இருக்கும்...என் பாட்டி வீட்டுலே டிவி கெடையாது.. அங்கே போகும்போது ஞாயிற்று கிழமை படம் பார்க்க, .பக்கத்துக்கு வீட்டுக்கு போவோம். அதுவும் free இல்ல.. 10 காசு கொடுத்து ஜன்னல் வழியா தான் எல்லாம் பார்ப்பாங்க...என் பாட்டி டீச்சர்,so  டீச்சர் பேரன் என்பதால் வீட்டின் உள்ளே உட்கார்ந்து படம் பார்ப்பேன், [பாக்ஸ் தியேட்டர் போல ] ஆனாலும் 10 காசு கொடுத்துதான் பார்ப்பேன்..

பிறகு 90 களில் BPL  கலர் டிவி வாங்கினார் என் அப்பா...அப்போ எல்லோர் வீடுகளிலும் டிவி இருந்தாலும் கலர் டிவி ஒருவித பெருமிதம்...அதன் பிறகு சோனி டிவி வாங்கி, இப்போ அது தான் எங்கள் வீட்டில் ஓடிக் கொண்டிருக்கிறது ...

இந்தியாவில் இருந்தவரை, நான் எலேக்ட்ரோநிக்ஸ் பொருள்களில் ரொம்பவும் கவனம் செலுத்தியதில்லை, அதற்க்கான வாய்ப்பும், நேரமும் கிடைக்கவும் இல்லை...இங்கே வெட்டியா சுத்தும்போது தான் அதன்மேல் ஆர்வம் அதிகமாகி ஒவ்வொன்றாக ஆராய்ந்தேன், வாங்கவும் செய்தேன்...

என்னுடைய பள்ளி கல்லூரி நாட்களில் நான் பார்த்தது அதிக பட்சம் 29" டிவி தான்..இப்போது பல பேர் வீடுகளில் [இங்கே] 46" டிவி சாதரணமாகி விட்டது...[என் வீடு உட்பட ஹி ஹி ஹி ]. அதில் வரும் picture quality நம்மை வெகுவாக  கவரத் தான் செய்கிறது...இங்கே உள்ள சொந்த வீட்டுக்காரர்கள் வீட்டில் 52 " டிவி தான்... ஆரம்ப காலத்தில் ரொம்பவும் ஆடம்பரமோ இப்பேற்பட்ட டிவிகள்  என்று தோன்றினாலும், ரசிக்கத் தொடங்கியதும் ஆடம்பரம் என்பதை மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது...



இங்கே los vegas ஷோ ஒன்றில் panasonic 205 " டிவி ஒன்றை கண்காட்சிப் பொருளாக வைத்துள்ளது...இங்கே வீடியோவில் காண்பது 152 " டிவி மட்டுமே ... 205 " கற்பனை செய்தால் ayooo ...செமைய இருக்கும் போல ...

வெறும் அளவில் மட்டுமல்லாமல், CRT யில், ஆரம்பித்து, பிளாஸ்மா, LCD என்று முன்னேறி இப்போது LED யில் கலக்கும் இந்த வளர்ச்சியை காணும்போது அடேங்கப்பா என்று பிரம்மிக்க வைக்கிறது... முன்பெல்லாம் டிவி என்றாலே பின்னால் ரெண்டு முழம் நீட்டுக்கு பெரிய பொட்டி  ஒன்னு இருக்கும்...இப்போ LED டிவி பென்சில் பாக்ஸ் அளவு மட்டுமே தடிமானம் இருக்குது...ச்சே பின்றாங்கப்பா...

இப்போ மார்க்கெட்லே படு வேகமா விற்ப்பனையவது  ரெண்டு...ஒன்னு 3D  டிவி மற்றொன்று  Google மற்றும் சோனி இணைந்து வெளியிட்டுள்ள Google டிவி...3D டிவி அதற்க்கென  பிரத்தியூகமா தயார்  பண்ண  கண்ணாடி  அணிந்து பார்த்தால்  வீட்டுக்குலேயே 3D அனுபவும் கிடைக்கும்...வியந்து போனேன் நான்...  3D  என்றதும் சின்ன வயசுலே பார்த்த  " மை டியர் குட்டிச் சாத்தான்", "சுட்டிக் குழந்தை" இந்த ரெண்டு படம் நினைவுக்கு வருது...இன்னிக்கு வீட்டுக்குலேயே 3D அனுபவும் கிடைக்கும் என்று யோசிக்கையில் ஆச்சரியமாக உள்ளது.. இப்பொழுது panasonic கண்ணாடி அணியாமல் பார்க்கக் கூடிய 3D டிவியை விரைவில் வெளியிட உள்ளது...

டிவி உலகத்தின் மற்றொன்று  விந்தை  Google டிவி...  டிவி யை கணினியாக பயன்படுத்தக்கூடிய அளவு உள்ளன அதன் பரிமாணங்கள்..அதனுடைய ரிமோட் சிறிய கிபோர்ட் போல இருக்கும்.. அதனுடன் வரும் Applications வலையுலகில் தன்னை இணைக்கும் திறன் வாய்ந்தது... அதனால் online நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள், செய்திகள் என்று பலவற்றையும் காண ஏதுவாக உள்ளது.. ஏற்கனவே டிவி மட்டும் வைத்திருப்பவகளுக்கு உதவும் வகையில் தனியாக இதற்க்கான அடப்ட்டர் மட்டும் மார்க்கெட்டில் கிடைக்கறது...அது BD எனப்படும் ப்ளூ ரே பிளேயர் உடன் கிடைக்கிறது...  பொழுதுபோக்கு பிறியர்களுக்கு இந்த கூகிள் டிவி ஒரு பெரிய வரப்பிரசாதம்... நானும் போன மாதம் வாங்கினேன்... ரொம்பவும் என்ஜாய் பண்றேன்.... இந்த ஊரில் எனக்கு இருக்க ஒரே பொழுதுபோக்கு என் டிவி தான்.... இந்த குளிர் காலத்துல வெளியேவும் போக முடியாத் நிலையில் நல்ல நல்ல படங்கள் தான் வெளிநாடு வாழ் இந்தியர்களின் ஒரே நண்பன் சொல்றதுலே ஒன்னு தப்பே இல்லீங்கோவ்..




Author: Sathish
•7:03 AM
திரை விமர்சனம் எழுதியே ரொம்ப நாள் ஆச்சுலே? [அட கூருகெட்டவனே!!! நீ ப்ளாக் எழுதியே ரொம்ப நாள் ஆச்சுனு திட்டாதீங்க...அழுதுடுவேன்.] திரை விமர்சனம் சொல்லிட்டு என்னடா சமையல் குறிப்பு டைட்டில் இருக்கேனு ஆச்சரியமா? எல்லாம் ஒரு வித்யாசமா இருக்கட்டுமேனு தான்...ஹி ஹி ஹி [வாங்குற அஞ்சுக்கும், பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையா? ]

விருதகிரி

முதன்முறையாக புரட்சிக் கலைஞர் திரைக்கதை, வசனம், இயக்கம் னு ஏதோ பண்ணி வெளிவந்திருக்கு. முன்பாதி முழுக்க அரசியல், பஞ்ச் டயலாக் அது இது னு பண்ணி நல்லபடி தூங்க வச்ச படம் பின் பாதிலே "TAKEN" என்கிற எனக்கு ரொம்பவும் பிடிச்ச விறு விருப்பான ஆங்கில படத்தை எந்த அளவுக்கு காப்பி அடிக்க முடியுமோ அந்த அளவுக்கும் காப்பி அடிச்சு சொதப்பி இருக்க படம் விருதகிரி...

 சத்தியமா சொல்றேன் "TAKEN " படத்த பார்த்தவங்க அனைவரும் இந்த படத்தை பார்த்தா விஜயகாந்த்க்கு வர கோவத்தை விட ரொம்ப கோவம் வரும்... ஸ்க்ரீன் முழுக்க அவருடைய முகமே தெரிது.....இதுலே வேற என் பொண்டாட்டி வெறுப்பேத்தற மாதிரி, "சின்ன சின்ன expression கூட விஜயகாந்த்துக்கு சரியா வரலையே"  என்று சொன்னபோது, "பெரிய முகம் இல்லையா? அதான் சின்ன expression  சரியா உன்னால பாக்க முடிலே..நீ அவரோட மூக்குல இருந்து left சைடு expression பார்த்துக்கோ நான் ரைட் சைடு நான் கவனிசிக்கறேன் " னு சொல்லி சமாதானம் பண்ணேன்..

கொடுமை கொடுமை னு முன்பாதி போனா, பின்பாதி லே கொடூரக் கொடுமையா அருண்பாண்டியன் வேறு!!! இவங்க தனித்தனியா நடிச்சாலே பாக்கறது இப்பெல்லாம் நெம்ப கஷ்டம்... இதுலே ரெண்டு பேரும் சேர்ந்து மிரட்டினா? முடிலே டா சாமி...

இதுல காமெடி பீஸ் என்னனா தலைவரோட இங்கிலீஷ் தான்..."இன்டர்நேஷனல்"  லே "இன்டர்நேசனல்" , ஸ்பெஷல் லே ஸ்பெசல் னு படம் முழுக்க தொரை இங்கிலீஷ் தான்...ஒரே ஒரு நல்ல சமாசாரம் சார் டூயட் லா இல்லாம படம் பண்ணி இருக்கார்..சோ அந்த லிப் movements கொஞ்சம் கம்மி :) இதுல முடிவுல making of விருதகிரி. கேமரா முன்னாடி தலைவரு நின்னு ...சாட் (ஷாட்) ரெடி ...கேமரா ரோல்லிங் சொல்றது தான் ஹைலைட்.....


சித்து +2  

பாக்யராஜ் சன் சாந்தனு வோட ரெண்டாவது படம் இது நெனைக்கிறேன்...நடிக்க ஆசைப் பட்டவங்க எல்லோரையும் கூப்பிட்டு படம் எடுத்திருக்காங்க...சாந்தனுவ தவிர ஒருத்தருக்கும் ஒண்ணுமே வரல...குறிப்பா படத்தோட கதாநாயகி... பக்கா recommendation  நெனைக்கிறேன்...சுத்தமா நடிப்புக் காண சுவடே தெரிலே..."Alice in Wonderland" லே வர அந்த பூனை மாதிரி எல்லா பல்லையும் காமிக்கிறார்களே  தவிர வேற ஒன்னும் இல்ல [அவசரப் பட்டு தப்பா எடை போடாதீங்க...நடிப்பு ஒன்னும் இல்ல னு சொல்ல வந்தேன்...]

வழக்கமான கதை தான்... +2 தேர்வில் தோல்வியடைந்து நாயகனும் நாயகியும் வெவேறு ஊர்களிலிருந்து ரெயில் நிலையத்தில் தற்செயலாக சந்தித்து நட்பாகி காதலாக உருவெடுக்கிறது...பின்னர் இடையே வரும் பிரச்சனைகளை சமாளித்து, எப்படி காதல் ஜோடி ஒன்று சேருகிறது என்பது தான் கதை...இன்னும் எத்தனை நாளைக்கு டா அப்பா  ப்ரோயஜெனமே இல்லை சொல்ற பசங்கள நாடு போற்றும் நல்லவனாக்கி காமிப்பீங்க? இந்த படத்தோட கிளைமாக்ஸ் லே கதாநாயகியோட அப்பா, பாட்டி, ஒண்ணுவிட்ட சித்தப்பா, பெரியப்பா, ஏரியா போலீஸ், மிலிடரி னு ஒருத்தர் விடாம ஹீரோவ பாராட்ட ["கேக்கறவன் கேனையா இருந்தா K .B .சுந்தரம்பாள் லே கேத் வின்ச்லடே ஆயா " னு சொல்வாங்க!!!], சினிமா லே அப்பா நேர்மை, கலங்கின கண்கள் னு சொன்னதும் நினைவுக்குவர ராஜேஷ் நெகிழ்ந்து மகனை அணைச்சிக்கரதோடா படம் முடிகிறது...

சாந்தனு நடிச்ச முதல் படம் போல இந்த படத்தையும் பேர் தவிர வேற ஒன்னும் முன்னமே பிளான் பண்ணலே நெனைக்கிறேன்...ஷாட் லே வந்ததும் இன்னிக்கு கதை இப்படி எடுக்கலாம்னு முடிவு பண்ணி அத ஷூட் பண்ணாங்க நெனைக்கிறேன்!! கண்டபடி போகுது கதை...இதே நெலமை தொடர்ந்தா  பொட்டியே கட்ட வேண்டியதுதான் தம்பி....


யாருமே இல்லாத கடைக்கு டி ஆத்த்றது போல சாந்தனு மட்டும் டான்ஸ், fight அது இதுன்னு தன்னால முயன்ற மட்டும் கதைய தூக்கி நிறுத்த முயற்சி பண்ணுறார்... ஆனாலும் பிரயோஜனமில்லை என்பது தான் உண்மை....சித்து +2 First Attempt இல்ல பல Attempt போனாலும் தேறுவது கஷ்டம்....