Author: Satya
•7:30 AM
நேரம் : இரவு 9:35பெல்ட் அணிந்துகொண்டே பீரோ கண்ணாடி வழியே, கோபமாய் தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் கமலாவைப் பார்த்து சிரித்தான் சங்கர்; வடபழனி R 8 காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர்  ஆக பணிபுரிகிறான். கல்யாணமாகி 2 வருடமாகியும், இரவு நேர ரோந்துப் பணிக்கு எப்போது கிளம்பினாலும் "உம்ம"மென்று இருப்பது கமலாவின் வாடிக்கை."கோபத்துல்ல தாண்டி செல்லம் நீ ரொம்ப அழகா இருக்கே" என்று கூறிக் கொண்டே சுவற்றோரம் நின்று கொண்டிருந்த கமலாவின் அருகில் சென்றான் சங்கர்." விடிகாலையில் தான் வருவீகளா?" என்று தயக்கமாய் கேட்டாள் கமலா. "ஆமா..அடுத்த வாரம் அயோத்தி பிரச்சனை தீர்ப்பு. So சிட்டிலே பாதுகாப்பு அதிகப்படுத்த சொல்லி கமிஷனர் உத்தரவு போட்டிருக்கார். உள்பக்கம் 
தாப்பாள் போட்டு நீ ஒழுங்கா தூங்கு. ஓகே?" என்று சொல்லிக் கொண்டே கமலாவின் மிக அருகில் நெருங்கி, சேலை வழி தெரிந்த அவளது இடுப்பில் எதையோ தேடியது அவனது கைகள். சிலிர்த்து கண்மூடி நின்றாள் கமலா. அவள் உதடுகள்  ஏதோ முணுமுணுத்தது.
நேரம் : இரவு 10:35


அவசர அவசரமாக அந்த கேசுவாளிட்டி வார்டில் நுழைந்த சீப் டாக்டர்  "எத்தனை பேரு?" என்று கேட்டுகொண்டே க்ளௌஸ் அணிந்தார். "மொத்தம் 18 பேரு டாக்டர். அடல்ட்ஸ் 13 , 5 குழந்தைகள். ஆக்ஸிடென்ட் ஆன போது, டிரைவர் சீட் பக்கமா உட்கார்ந்திருந்த 7 பேர் ரொம்ப அடிபட்டு சீரியசா இருக்காங்க." என்று பதிலளித்தாள் நர்ஸ். அது ஒரு அரசு மருத்துவமனை..கழிப்பறைகள் சுத்தமா இருக்குதோ இல்லையோ, பினாயில் வாசம் பஞ்சமில்லாமல் மருத்துவமனை முழுவது வீசிக் கொண்டிருந்தது. அந்த கேசுவாளிட்டி வார்டில் சுமார் 10 பெட் இருக்கும். ரத்த கரையும், வலியின் புலம்பல்களும் மிகுதியாக இருந்தது அறை முழுவதும்.  


கடைசி பெட்டில் இருந்த காமினி, மெல்ல கண்விழித்தாள் அவளை சுற்றிலும் வயர்கள். பயத்தில் அவளின் ரோஸ்மில்க் நிற முகம் மேலும் சிவந்தது.. "டா... டாக்டர்...  டாக்டர்.." என்று முனகிக் கொண்டிருந்த காமினியின் அருகில் சென்றார் டாக்டர்; நிழலாய் தொடர்ந்தாள் நர்ஸ்.." ஒன்னும் பயப்படாதேமா..உனக்கு ஒன்னும் இல்லை...யு ஆர் எ லக்கி கேர்ள். ஒன்னும் பெருசா அடிபடலை. அதிர்ச்சிலே கொஞ்சம் மயக்கமாயிட்டே அவளவுதான்.. . நர்ஸ் 30 மினிட்ஸ் கழிச்சு ஆக்சிகேன் மாஸ்க்கை எடுத்துடுங்க" என்று சொல்லிக் கொண்டே அடுத்த பேஷன்ட் அருகில் சென்றார். தலையில் உள்ள கட்டு இருக்கமாய் இருப்பதை உணர்ந்த காமினி, சுற்றும்   முற்றும் பார்த்தாள். தன் வலக்கைப் பக்கமாய் இருந்த பழுப்பு நிற இரும்பு மேஜையின் ஓரத்தில் தன் ஹேன்ட் பேக்கை கண்டதும் காமினி ஒரு பெரு மூச்சு விட்டாள்...அவள் நினைவு முழுவதும் சிவா நிரம்பியிருந்தான்.

"ஆக்ஸிடென்ட் கேஸ், FIR காபி எல்லாம் ஒழுங்கா  கலெக்ட்  பண்ணி ரிசெப்ஷன் லே கொடுத்துடுங்க" என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினார் சீப்.  டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். அந்த விபத்து சிகிச்சை பிரிவின் வராண்டாவில் நான்கைந்து போலீஸ்காரர்கள், அடிப்பட்டவர்களின் உறவுக்காரர்கள் என்று ரொம்ப பிஸியாக இருந்தது அந்த ஹாஸ்பிடல்.  யார் கண்ணுலேயும் படாமல்  வெளியேறிய காமினி, தன்னை கடந்த ஆட்டோவைப் பார்த்து  "ஆட்டோ" என்று குரல் கொடுத்தாள்.  அடுத்தவரைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் "சர்ர்ர்" என்று ப்ரேக் போட்டு நின்றது அந்த ஆட்டோ. "எங்கே மா போகணும்" என்று ஒரு கர கரப்பான குரலில் கேட்ட ஆட்டோ டிரைவரிடம் "மொதல்ல இங்கிருந்து கெளம்புபா" என்று கூறி ஓரமாய் கிழிந்திருந்த அந்த ஆட்டோ குஷன்னில் தன்னைப் பொதிந்தாள் காமினி. அவள் குரலில் அவசரம் தெரிந்தது. நன்கு நனைந்த சிகரெட் பாக்கெட்டின் வாசம் அந்த டிரைவர் மீது வர, குமட்டிக்கொண்டு வந்தது காமினிக்கு...மீண்டும் ஒருமுறை தன்  ஹேன்ட் பேக்கை திறந்து பார்த்தாள்..அந்த பௌர்ணமி வெளிச்சத்தில் உள்ளிருந்த கிறிஸ்டல், வெள்ளை ஒளியை அவள் கண்ணில் பாய்ச்சியது...


நேரம் : இரவு 11:05


"என்ன சிவா ஏதாவது பிரச்சனையா இருக்குமோ? இன்னும் கால் வரல" என்று தன் வழுக்கை தலையில் இருக்கும் வியர்வையை கர்ச்சிப்பால் துடைத்துக்கொண்டே கேட்டார் பரந்தாமன். "அதான் எனக்கும் தெரிலே ...வழக்கமா 8 மணிக்கு ஆபீஸ் லே இருந்து கெளம்பிடுவா...இன்னிக்கு கண்காட்சியோட கடைசில் நாளு கொஞ்சம் லேட் ஆகும்,  வெளியெ வந்ததும் கால் பண்றேன் சொன்னா.. நான் கால் பண்ணி பாக்கவா?" என்று கேட்டான் சிவா.. " கொஞ்சம் பொறு சிவா..பார்ப்போம் " என்று கூறி சுற்றில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தை பார்த்தார் பரந்தாமன். பெரிய முள்ளும், சின்ன முள்ளும் பொறுமையாய் நகர்வந்தைக் கண்டு கடுகடுத்தது அவரது முகம்.

ஆடம்பரமாய் வளர்ந்திருந்தது  அந்த நான்கடுக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்.. அதன் நான்காவது மாடியில் தான் பரந்தாமனும் சிவாவும் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்..அவர்களின் அமைதியை கலைத்தது அந்த டெலிபோன்..பரந்தாமன் அவசர அவசரமாக ரிசிவரை எடுத்து  "ஹெலோ...டாக்டர் பரந்தாமன் ஹியர்" என்று நிதானமாக கூறினார். "டாக்டர் காமினி பேசறேன்...கிறிஸ்டல் என் கிட்ட பத்திரமா இருக்கு..நம்ம பிளான் படி, நாளைக்கு நீங்க சர்ஜரிக்கு ரெடி பண்ணிடுங்க...எல்லாம் நல்லபடி முடிஞ்சா போதும்..." என்றாள் காமினி மறுமுனையில்..."காமினி ஒன்னும் பயப்படாதே...என்னோட ஆராய்ச்சி கண்டிப்பா வெற்றி பெரும்...உன் கிட்ட இருக்கறது சாதாரன கிறிஸ்டல் இல்லை. மருத்துவ குணம் கொண்ட அபூர்வ கிறிஸ்டல். அதுலே இன்ப்ரா ரெட் லைட் செலுத்தி அதிலிருந்து வரும் ஒளியின் மூலம் சிவாவோட கணையப் புற்று நோயை கண்டிப்பா குணப் படுத்திடலாம்..." நீ சிவாவ அழைசிகிட்டு நேரா கிளினிக் வந்திடுமா " என்றார் பரந்தாமன். "சரிங்க டாக்டர்...நான் இன்னும் ஒரு மணி நேரத்துல சிவா அழைச்சிட்டு வந்துடறேன்" என்றதும் பரந்தாமன் ரிசிவரை வைத்தார்.

"சிவா காமினி இப்போ உனக்கு ட்ரை பண்ணுவா பார்" என்று பரந்தாமன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "அடடா மழைடா அட மழைடா" என்று சிவாவின்  நோக்கியா பாடியது..."ஹே காமினி. என்னாச்சு? இஸ் எவரிதிங் ஆள் ரைட்?" என்றான் சிவா. மறுமுனையில் காமினி "நான் வந்த பஸ் பெரிய ஆக்சிடென்ட் ஆயிடுச்சு...பட் எனக்கு பெருசா ஒன்னும் இல்லை..ஐயம் ஓகே.ஏகப்பட்ட போலீஸ் ஹாஸ்பிடல்ல...சமாளிச்சு வர லேட் ஆயிடுச்சு..நீங்க எங்கே இருக்கீங்க? " என்றாள். "நான் இன்னும் வீட்லே தான் இருக்கேன். ஜஸ்ட் உன்னோட காலுக்கு தான் வெயிட்டிங். இன்னும் டென் மினிட்ஸ் லே  திருவான்மியூர் RTO பஸ் ஸ்டான்ட் லே இருப்பேன் டா ...பாய் டியர் டேக் கேர் " என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது பரந்தாமன் அவன் கையில் ஏதோ ஒன்றை திணித்தார்.."சா ...சார் ..." என்றான் சிவா நடுக்கத்துடன் ...அவனது கையில் துப்பாக்கி... 

நேரம் : இரவு 11:25


அடையார் IIT அருகே, வயர்லெஸ் ஏதோ முனுமுனுக்க அதனை கவனிக்காமல்  சங்கர் தனது காரை மெதுவாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். இரவின் அமைதியில் எங்கும் நிசப்தம் நிரம்பி இருந்தது...தூரத்தில் தெரு நாய்களின் சத்தம்...ரோட்டோரத்தில் ஓர் வெள்ளை மாருதி அதன் முன்னே கருப்பு நிற ஸ்கார்பியோ நந்தியாய் நின்று கொண்டிருந்ததை பார்த்து, சங்கரின் கவனம் அங்கே திரும்பியது...ஏதோ தப்பு நடப்பதாய் உணர்ந்த சங்கர், தன் காரில் இருந்த ஒலி பெருக்கியில், "ஹலோ வெள்ளை மாருதி TN 9318 என்ன அங்கே?  கருப்பு ஸ்கார்பியோ வண்டி எடு" ன்னு அறிவித்துக் கொண்டிருக்கும் போதே, கையில் பெரிய அருவாளுடன் ஒருவன் ஓடிச் சென்று ஸ்கார்பியோவில் தொற்றிக் கொள்ள, விருட்டென்று கார் சீறிப் பாய்ந்தது.

வேகமாக காரை விட்டு கீழெ இறங்கிய சங்கர் மாருதி காரில் ரத்த வெள்ளத்தில் ஒருவன் பிணமாகியிருப்பதை கண்டான். சற்றும் தாமதிக்காமல், ஓடிசென்று   தன் காரை கிளப்பிய அதே சமயம், அவனது கை வயர்லசை தேடி எடுத்தது. "ஹலோ கன்ட்ரோல் ரூம் ...R8     ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் சங்கர்.."அடையார் IIT கிட்டே 45 வயசு ஆள அசால்ட் பண்ணிட்டு அக்கிஸ்ட்டு கருப்பு நிற ஸ்கார்பியோ லே தப்பிச்சு போறாங்க...ஐ நீட் மெடிக் அட் IIT...ஆள் இருக்கான போயிட்டான பாருங்க...நான் அக்கிஸ்ட்டுகல பாளோ  பண்றேன்..ரெண்டு போலீஸ் பற்றோள அடையார் ஏரியா லே ரெடி பண்ணுங்க  ஓவர் " என்று சொல்லிக்கொண்டே சைரன் ஆன் செய்தான்...சைரன் ஒலி நகரையே உலுக்க ஸ்கார்பியோவை  துரத்தியது சங்கரின் போலீஸ் கார்.

நேரம் : இரவு 11:55


திருவான்மியூர் RTO பஸ் ஸ்டான்ட். சாலை சற்றே வெறிச்சோடிக் கிடந்தது.  சாலையோரம் இருந்த டீக்கடையில் இருந்த ஒன்றிரண்டு பேர் நடுவே சிவா, ஒரு கையில் கிங்க்ஸ் சிகரெட் மற்றொரு கையில் டி. கடைக்காரிடம் இருபது ரூபாய் கொடுத்து மீதி சில்லறையை சரி பார்க்காமல் தன் ஜீன்ஸ் பான்டில் நுந்திக் கொண்டே சற்று தொலைவில் இருந்த வெள்ளை நிற ஹோண்டா சிட்டியை நெருங்கினான் சிவா. டிரைவர் சீட் ஜன்னல் வழி தலை விட்டு "சார் உங்களுக்கு டி சொல்லட்டுமா?" என்று கேட்டான் சிவா. " வேண்டாம் சிவா.. அவ வர நேரம்..சீக்கிரம்  மேட்டர முடிச்சிட்டு கெளம்பலாம். அப்புறம் சொன்னது நினைவிருக்குள? அவ கொண்டு வரர்து அவளை பொறுத்தவரை ஒரு சாதாரண  கிறிஸ்டல், ஆனால் நமக்குத் தான் தெரியும் அதன் மதிப்பு. அலெக்ஸான்ரிட் - டைமண்டை விட பல மடங்கு மதிப்பு வாய்ந்த ஒரு அபூர்வ கல். புரிஞ்சுதா? புத்திசாலித்தனமா நடந்துக்க" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆட்டோ ரோட்டோரம் வந்து நின்றது.

ஆலிவ் நிற பூனம் சேலையில் உள்ளிருந்து இறங்கினாள் காமினி. ஈரம் சுமந்த காற்று அவள் மேல் வீச, காதோரம் இருந்த அவள் கூந்தலை பின்னுக்கு தள்ளிக்கொண்டே அவள் கண்கள் யாரையோ தேடியது."ஹாய் காமினி...இங்கே " என்ற சிவாவின் குரல் கேட்ட திசை நோக்கி நடந்தாள். "ஹாய் சிவா, உடனே கிளினிக்கு  கெளம்பலாம்...நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன். நமக்காக அவர் வெயிட் பண்ணுவார்.." என்று மட மடவென பேசிய காமினியை இடை மரித்த சிவா "ஹே வெயிட் வெயிட் ...கிறிஸ்டல் எங்கே?" என்றான். "பத்திரமா ஹேன்ட் பேக்லே இருக்கு டா...உனக்கு உடம்பு நல்லபடி ஆகணும்னு தான் நான் இவ்வளவு ரிஸ்க் எடுத்தேன். சர்ஜெரி முடிஞ்சதும், யாருக்கும் தெரியாம  திரும்ப இந்த கிறிஸ்டல கொண்டு போய் எடுத்த இடத்துலேயே வைகக வரை எனக்கு டென்ஷன் தான்" என்று சொல்லிக் கொண்டே கூழாங்கல் போலிருந்த அந்த கல்லை கையில் எடுத்தாள் காமினி. "எல்லாம் சரிதான்..ஆனால் திரும்ப வைக்கணும்ங்கற நெனப்ப விட்டுடு காமினி. எனக்கு அது வேணும். அது வெறும் கல் இல்லை வைரம்..வைரத்தை விடவும் உயர்ந்தது  " என்று சொல்லிக் கொண்டே அவனது கைகள் முதுகு பக்கமாய் போவதைக் கண்டாள் காமினி அவள் கிறிஸ்டலை மீண்டும் ஹேன்ட் பேக்லே போட்டாள்.  .அடுத்த வினாடி சிவாவின் கையில் துப்பாக்கி,  “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. கலங்கிப் போனாள் காமினி. " சிவா என்ன விளையாட்டு இது. உன் மேல் கொண்ட காதலால் நான் எவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த கிறிஸ்டல கொண்டு வந்தேன் தெரியுமா? எத்தனை போலிசை சமாளிக்க வேண்டியிருந்தது தெரியுமா? " என குரல் தழு தழுக்க கூறிய காமினியின் கண்கள் கலங்கிப் போய் இருந்தது.  அவர்களின் சற்று நேர அமைதியை கலைக்கும் வண்ணம், காரை விட்டு இறங்கிக் கொண்டே  “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன். "டா... டாக்டர்...நீ..நீங்களா?" மேலும் அதிர்ச்சி அவள் கண்களில், இருக்கமாய் அவளது கைகள் ஹேன்ட் பேக்கை பிடித்தவண்ணம் தார் ரோட்டை விட்டு ஓரமாய் இறங்கினாள் காமினி. தூரத்தில் சைரன் ஒலி கேட்க திகைத்து போயினர் மூவரும்...சடாலென்று பரந்தாமன் காரில் ஏறி "சிவா..பேக்கை பிடிங்கிட்டு அவளை போட்ரு..." என்று சொல்லி முடிப்பதற்குள், நிலை தடுமாறி அங்கு வந்து கருப்பு நிற ஸ்கார்பியோ சிவாவுடன் ஹோண்டா சிட்டி யையும் அடித்து தூக்கியது... "ஐயோ..."  என்ற அலறல் சைரன் ஒலியை மீறி ஒலித்தது... 

நேரம் : இரவு 12 :05


"ஹலோ கன்ட்ரோல் ரூம் ...R8     ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் சங்கர். திருவான்மியூர் கிட்ட ECR  ரோட்லே ஆக்சிடென்ட்" என்று சங்கர் அறிவித்துக் கொண்டிருக்க இருட்டில் சென்று மறைந்தாள்  காமினி..இருக்கமாய் அவளது கைகள் ஹேன்ட் பேக்கை பிடித்திருந்தது.....
Author: Satya
•11:21 PM


இவன் பேரை சொன்னதும், பெருமை சொன்னதும் கடலும், கடலும் கை தட்டும்...இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டவன் நிலவு நிலவு தலை முட்டும்....அட்ரா ...அட்ரா இது தலைவருக்கான வரிகள் என்பதில், சிறு சந்தேகமும் இல்லை...படம்யா...இது படம்யா...தலைவா...பின்னிட்டே...அட்டகாசம்...கன கச்சிதம ஒன்னொன்னும் யோசிச்சு அசத்தியிருக்கு எந்திரன் டீம்....கொஞ்ச நெஞ்ச எதிர்ப்பார்ப்பா இருந்தது இந்த படத்திற்கு...கலாநிதிமாறனுக்கு கூட இவ்வளவு டென்ஷன் இருந்திருக்காது...எனக்கு அவ்வளவு டென்ஷன்...200 % அனைவரது எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை...

படத்தோட கதை என்ன என்பதை அனைவரும் அறிவர்...ப்ளாக் லே, reviews   எல்லாத்துலேயும் இந்நேரத்துக்கு போட்டு முடிச்சத திரும்ப நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...ஒரு ரசிகனா, தலைவரோட வெறியனா என் கண்ணோட்டத்துல எந்திரன் எப்படி இருக்குனு பகிர்ந்துக்கணும்...அதற்காகத் தான் இந்த ப்ளாக்...

இப்போ முளைச்ச சின்ன பயலுங்க, விடலை பசங்கல்லாம் இமேஜ், ஹீரோ அறிமுகம், பஞ்ச் டயலாக் அது இதுன்னு முக்கியத்துவம் கொடுக்கற காலத்துல...நம்ம தலைவரோட அறிமுகம் படு சிம்பிள் இதுல...ச்சே ...சான்ஸ் இல்லை...தலைவர் நெனச்சிருந்தா "எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு, இன்ட்ரோ லே மாஸ் வேணும் ... இப்படித்தான் வேணும் அது இதுன்னு சொல்லி ஸ்கிரிப்ட் லே, direction   லே  பல இடங்களில் தலை இட்டிருக்கலாம்...100 % ஒரு இயக்குனரின் சொல்படி நடந்திருக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார்...மனசு வேணுமையா...சின்னப்ப்சங்கல்லம் நாலஞ்சு இங்க்லீஷ் படத்த காமிச்சு இத மாதிர் ஷாட் வை அத மாதிரி வைன்னு அட்வைஸ் பண்ற காலத்துல இப்படி ஒரு மனிதரா? சத்திமா தலைவர தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்க முடியாது...

பொதுவா ரெண்டு ஹீரோ இருக்க சப்ஜெக்ட் லே உன்னை யார் மேலோங்கி இருப்பது என்பதுல நெறைய பிரச்சனை வரும்...அந்த போட்டிலே டைரெக்டர் தல தான் உருளும்...தலைவர் பல படத்துல சக நடிகர்களிடம், விட்டுக் கொடுத்து நடிப்பது ஊரன்ரிஞ்ச விஷயம்....இப்போ மனிஷங்களையும் மீறி ரோபோ கராச்டருக்கு விட்டு கொடுத்து நடிசிருகிறார்...ஒரு எடத்துல கூட விஞ்ஞானி ரஜினி தன் ஹீரோ தனத்தை காமிக்கவே இல்லை...எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அந்த யதார்த்தம்...ஒரு சீன் லே கலாபவன் மணி இடம் விஞ்ஞானி ரஜினிக்கு ஒரு சண்டை காட்சி வைத்திருந்திருக்கலாம்..ஆனால் கதைக்கு தேவை இல்லை என்பதால் அதுவும் தவிர்க்கப் பட்டிருக்கு....டைரெக்டர்களை ஆட்டி வைக்கும் இக்காலகட்டத்தில் இப்படி ஒரு முன்னணி நடிகரா?

விஞ்ஞானி ரஜினியிடம் தெரிகிற முதிர்வு, ஒரு பயம் கலந்த ஒரு பணிவு,   சிட்டி ரோபோவை பார்க்கும் போது தெரியவில்லை...நடை, ஸ்டைல், body language ..நல்ல வித்தயாசத்தை காமிச்சிருக்கார்...இந்த வயசுல இப்படி ஒரு சுருசுருப்பா? தல பின்றீங்களே.....காதல் அணுக்கள் பாட்டில் தலைவர் ஒரு நடை நடப்பார். வாவ்.....சம நடைங்க அது...ஐயோ அணு அணுவா ரசிச்சேன் நான்...A .R .ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை...

ஷங்கர் சார் hats ஆப் .... ஒரு Sci -Fi படத்தை, மக்களுக்கு புரியற மாதிரி, தெளிவா, தலைவரோட usual படம் போல மசாலா தடவாம, கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகத் தெளிவா பண்ணி இருக்கீங்க...கடைசி இருபது நிமிட க்ராபிக்ஸ் சிம்ப்ளி சூப்பர்ப்...ஐஸ்வர்யா அழகு, நளினம் எல்லாம் நெறஞ்ச ஒரு நிறைகுடம்...நல்ல முதிர்ச்சியான நடிப்பு...படத்துல தேவை இல்லாத விஷயம் என்றால், சந்தானம் கர்னாஸ்...காமெடி சொல்லும் அளவுக்கு ஒன்னும் இல்லாத போது, அசிஸ்டண்டா வேற யாரவது போட்டு தள்ளி இருக்கலாம்...தேவை இல்லாத மற்றொருவர் கலாபவன் மணி....

இவ்வளவும் சொல்லிவிட்டு நான் படம் போன அனுபவத்தை பற்றி சொல்லாம எப்படி? என் வீட்டிலிருந்து சுமார் 200 km தூரம் போய் பார்த்த படம் இது...so மொத்தம் 400 km இன்னைக்கு  நான், என் மனைவி அம்மா travel  பண்ணோம்..அங்கே தியேட்டர் லே நம்ம பசங்க தலைவரோட படம் போட்ட tshirt போட்டு கலக்கினானுங்க...நாம வழக்கம் போல விசில் பின்னி எடுத்தோம்..தியேட்டர் சும்மா அதிருசு லே......தலைவருக்கு, தலைவர் படத்துக்கு A , B ,C ன்னு கிளாஸ் எல்லாம் இல்லை...எல்லோருமே அமைதியாகச் சென்று ஆரவாரத்துடன் தான் படம் பார்ப்போம்...

படம் 100 %  ஹிட் ...சூப்பர் ஸ்டார் படம், ஸ்டைல் , அரசியல், பஞ்ச் டயலாக் அது இதுன்னு எதிர்ப் பார்க்காம தலைவர் நடிச்ச ஒரு science and fiction படம்னு போங்க..உங்க எதிர்ப்பார்ப்பு கொஞ்சமும் குறையாம படத்த ரசிப்பீங்க ... தமிழ் சினிமா வரலாற்றில் எந்திரன் ஒரு மைல் கல்....ஒரு புதிய அனுபவம்...