Author: Sathish
•11:40 AM
உலகநாயகன் என்பதின் அர்த்தத்தை மீண்டும் உணர்த்தியுள்ள படம் விஸ்வரூபம்...பத்து பைசாக்கு பிரயோஜனமில்லாத படத்தையே பத்து தடவ பாக்கற ஜாதி நான்...(அய்யய்யோ ...அப்புறம் எதாவது ஜாதி சங்கம் என் ப்ளாக் தடை செஞ்சிடப்  போறாங்க...) கமல் படம் ரிலீஸ் ன்னா  சும்மாவா..அடிச்சி புடிச்சி ப்ரிமியர் ஷோ டிக்கெட் வாங்கியாச்சு  லே ....

படம் ஆரம்பம் முதல் முடிவு வரை செம வேகம்..." என் ஆம்படிய கொஞ்சம் வேற மாதிரி" என பூஜா சொல்லிக் கொண்டிருக்கும் போதே கமலின் அறிமுகம் விஸ்வநாதனாக... வயதின் முதிர்ச்சி தெரிந்த போதும்,  கதக் நடன நளினத்தை நாட்டியத்தில் மட்டும்மல்லாமல்   நடை உடை பாவனைகளிலும் காட்டுவது கமல் என்ற ஓர் உன்னதக் கலைஞனால் மட்டுமே முடியும்.... ச்சே மனு(ஷி?)ஷன் என்னமா நடிச்சி இருக்கார்....

முதல் 30 நிமிஷம் கதக் கதக் ன்னு போன கதை, அப்புறம் ஒரே சதக் சதக் ன்னு ரத்தமும் ரத்தமுமா சிவப்பை கொப்பளித்தது... "நிஞ்சா அசாசின்ஸ்" படத்துக்கு அப்புறம் இவ்வளவு ரத்தத்தை இப்படத்தில் தான் பார்த்தேன்.. தவறில்லை கதை களம் அப்படி..."அல் -கொய்தா" வை மையமா வச்சி படம் எடுக்கும் பொது ரத்தம் இல்லாம பின்ன முத்தம்மா இருக்கும்? [ அட ஆமா... கமல் வாய் கவிதை சொன்னதே தவிர வேற ஒன்னும் பண்ணலையே... ஹி ஹி.. ஹி...]

அவ்வளவு நேரம் பிராம்ஹணன் என்று சித்தரிக்கப்பட்டு,  மென்(பெண்)மையான மனிதனாயிருந்த Wiz (விஸ்வநாதன்) பாத்திரம் ஒரு இஸ்லாமியர் என்ற அதிர்ச்சியிலிருந்து பூஜா ( நாமும் தான் )மீளும் முன், கமல் ஒரு உளவுத்துறை அதிகாரி  என்று கதையோட்டம் நகர, நான் என்னை இருக்கையின் நுனியில் காண முடிந்தது.... அந்த முதல் தடாலடி சண்டை அட்டகாசம்.. அமர்க்களம்.,.. ஆப்கனிஸ்தான் சுரங்கங்கள், மார்கெட்டில் வெடிப் பொருட்களும், வெடி மருந்துகளும் காய்கறிகள் போல் அசால்டா   விற்கப்படுவது போன்றவை தமிழ் சினிமாவிற்குப் புதிது... இதைப் போன்ற கதைக்களம் கமல் என்ற ஒருவரால் மட்டுமே நினைக்க முடியும்...

ஹோலிவுட் படத்திருக்கு இணையான கதையை சிந்திக்க மட்டுமில்லாமல் அதனை அப்படியே படைத்த கலைஞனுக்கு ஒரு சபாஷ் போடாமல் தடை போட்ட நெஞ்சங்களை எண்ணி நான் மிகவும் வருத்தப்பட்டேன்....  எழுத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் என்று புரட்சிப் பேச, அதக்காக குரல் கொடுக்க பலர் இருக்க, அதே விஷயத்தைப் பேச நான் வரவில்லை... இஸ்லாம் ஒரு மதம், மார்க்கம்.. 2 மணி 20 நிமிடத்தில் ஒரு இனத்தின் அடையாளத்தை ஒரு சினிமா மாற்றிவிடுமா? தவிர,   இஸ்லாமியர்களை கெட்டவர்களாக சித்தரிக்கப்பட்டாக தடை என்றால், கதையின் நாயகன் ஒரு இஸ்லாமியன், நல்லவன், போராளி...  என்று ஏன் தடை கேட்டவர்கள்  எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே என் வாதம்...

சரி விடுங்க....கமலுக்கு சர்ச்சைகளோ, சண்டைகளோ புதிதல்ல...அதனால் தான் என்னவோ "யார் என்று புரிகிறதா" என்ற விஸ்வரூபம் பாடலில்   "தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா? " என்ற வரிகள் உள்ளன போலும்?? 
ஆங்காங்கே கதையில் சின்ன சின்ன தேக்கங்கள் இருப்பினும் அவை சுட்டிக் காட்டும் அளவுக்கு இல்லை.....மேலும் கதையின் கிளைமாக்ஸ் விஸ்வரூபம் 2 உருவாக உள்ளதாக எண்ண செய்கிறது...[வேண்டாம் அழுதுடுவேன் ன்னு.. வடிவேல் டயலாக்ஐ  கமல் சொல்லுவாரு...கொஞ்சம் அடங்கு...] எனவே தெளிவில்லாத கேள்விகளுக்கு பாகம் 2 தெளிவு படுத்தும் என்பதே என் கருத்து.... 

வெகு நாட்களுக்குப் பிறகு நான் முழுவதும் ரசித்துப் பார்த்த படம் விஸ்வரூபம்....கண்டடிப்பாக  தடை நீங்கி விரைவில் தமிழகத்தில் இந்தப் படம் திரையிடப் படும்.... பார்த்து என்ஜாய் பண்ணுங்க... என்ன, அண்ட்ரியா, பூஜா என்று இரண்டு கதாநாயகிகள் இருந்தும் கமல் கமலாக இல்லாமல் போனது கொஞ்சம் "வடை போச்சே"ன்னு எண்ணச் செய்கிறது.. .ஹி... ஹி...ஹி...


Author: Sathish
•8:59 PM
வெகு நாட்களுக்குப்  பிறகு பல தமிழ் நெஞ்சங்களை ஒரு கூரைக்குள் பார்த்த திருப்தி 01/12/2013 (சனிக்கிழமை ) அன்று கிடைத்தது...அமெரிக்கா வந்த புதிதில் ஒரு இந்தியனை பார்த்தாலும் நம் உறவினரை பார்த்த மகிழ்ச்சி மனதில் தோன்றி மறையும்...நாளடைவில் பல இந்தியர்களை ஆங்காங்கே காண்பதினால் என்னவோ அவ்வுணர்வு சாதரணமாகி விட்டது.. ஆனால் தமிழர்களை காண நேர்கையில் இன்னமும் உடன்பிறந்தாரை கண்ட சந்தோஷம் தான் .... இந்தியன் என்ற உணர்வு இருப்பினும், தமிழன் என்ற உணர்வு சற்றே மேலோங்கி இருக்கத்தான் செய்கிறது...

நான் இருந்த இடம் , வள்ளுவன் தமிழ் மையம் சார்பாக நடை பெற்ற தமிழ் திருநாள் கொண்டாட்டம் அரங்கேறிய பள்ளி வளாகம். தமிழ் கற்க, கற்பிக்க இவ்வளவு ஆர்வளர்களா என்று எனக்கு மிகுந்த  ஆச்சரியம்... நான் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் குழந்தைகளும் பெற்றோர்களும் கூடி இருந்தனர். நம் கலாச்சார உடை அணிந்து, ஆங்கங்கே தமிழ் ஒலிக்க, "ஆட்டோகிராப்"  படப்பாடல் ஒன்றில் தமிழ் எழுத்துக்கள் கதாநாயகியை சுற்றி சுற்றி வருவது போல் எனைச் சுற்றி வந்தன.... அந்த நேரத்தில் எங்கள் குடும்ப நண்பர், விஜய் அர்த்தனாரிக்கு என் மனம் நன்றி தெரிவிக்க மறக்கவில்லை... விஜய்யின் மகன் வள்ளுவன் தமிழ் மையத்தில் மழலை நிலையில் தமிழ் பயிலவே, அவர் மூலம் இந்நிகழ்ச்சி பற்றிய தகவல் தெரிந்தது...

முன்னதாக விழாவை முன்னிட்டு பல நிலைகளில் உதவிக்கு தன்னார்வாளர்கள்  தேவை என்று  தமிழ் மையத்தின் சார்பில் அறிவிக்கப் பட்டிருந்தது;  நான் விழா  அரங்க பொறுப்பாளர் உதவிக்கு என் பெயரை பதிவு செய்திருந்தேன். (இந்த மாதிரி நல்ல விஷயம் கூட நீ பண்ணுவியா ???) என் வேலை, விழா அரங்கத்தில் திண்பண்டங்களை எடுத்து செல்வதை அனுமதிக்காமல் இருத்தல், குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான வசதிகளை அரங்கத்தினுள் செய்தல் என சின்ன சின்ன அலுவல்கள் மட்டுமே என்று நினைத்திருந்தேன்...உண்மையில் அதில் உள்ள கடினம் அங்கு தான் உணர்ந்தேன்..சின்ன குழந்தைகள் கையில் தின்பண்டங்களை வைத்துக் கொண்டு அரங்கத்தினுள் செல்ல முர்ப்படுகையில், தடுத்து நிறுத்தும் போது  பாவமாக பார்க்கும் அதன் கண்களை பார்ப்பது ரொம்ப கஷ்டம் ங்க .....பல குழந்தைகள் அந்த தின்பண்டங்களை"இந்தாங்க நீங்க வச்சிக்கோங்க" என்று என் கிட்ட கொடுக்கும்...அடப்பாவி சின்ன பசங்களோட பிஸ்கட் புடுங்கி தின்ற ன்னு பேர் எடுக்க போற ன்னு மனசு பத பதைக்கும் .... இந்த குட்டீஸ் கூட்டத்துல ஒன்னு என் கிட்ட ஒரு விவகாரமான கேள்வி கேட்டது ..."உள்ளே போய் சாப்பிட்டதானே தப்பு...நான் பாக்கெட் பிரிக்கவே இல்லயே.. " [எம காதகப் பைய...வெஷம்...வெஷம்...வெஷம்...அம்புட்டும் வெஷம்... ] நான் படும் பாட்டைப் பார்த்து என் மனைவி தூரத்தில் நின்று ரசி[சிரி] த்துக்கொண்டிருந்தாள்.. 

 தமிழ் - தமிழன் இரண்டுக்குமே ஒரு தனித்துவம் இருப்பதை மீண்டும் உறுதி செய்தது இந்த தமிழ் திருநாள் கொண்டாட்டம்...நான் தமிழனாக இருப்பதால் இதனை சொல்லவில்லை ...அன்னியனாய் இருந்திருந்தாலும் இதைத்தான்  சொல்லி இருப்பேன்...மொழி என்பது வெறும் ஊடகம் மட்டுமல்லாது ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடு என்பதனை அங்கு நடைப் பெற்ற கலை நிகழ்ச்சிகளில் காண முடிந்தது....குழந்தைகள் ஒன்று கூடி ஆடிய  நடனங்கள், பாடல்கள், நாடகங்கள் மற்றும் மாறுவேட நிகழ்ச்சி அனைத்திலும் தமிழ், தமிழர் பண்பாடு, தமிழ் மூதாதையர்கள் என்று அனைத்திலும் தமிழ் பறைச்சாற்றியிறுந்தது;  விழா  முழுவதும் எம்மவரின் உணர்வும், நளினமும், எளிமையும்  இருந்தது...

பல்வேறு இனங்கள் ஒன்று கூடி வாழும் அயலகச் சுழலிலும் தமிழ் நிலைத்திருந்தது... இருப்பினும், சில பெற்றோர்கள் இங்கும் அந்நிய மொழியை  ( ஆங்கிலத்தை ) தன்  குழந்தைகளிடம் பயன் படுத்தாமல் இல்லை என்பது ஒரு சிறு குறை... திருக்குறளை  ஆங்கிலத்தில் எழுதி "தங்க்லீஷ் -இல் " மேடையில் படித்த குழந்தைகளையும் காண முடிந்தது; வரவேற்ப்பில் ஒரு வெள்ளை நிற துணி விரிக்கப்பட்டு, வந்திருந்த அனைத்துக் குழந்தைகளையும் தன்  பெயரை தமிழில்  எழுதும் வண்ணம் விழா  குழுமம் ஏற்ப்பாடு செய்திருந்தது... தன் பிள்ளை  தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் போது "She can write her name..but I don't know how to write mine" என்று சொன்ன பெற்றோரின் தலையில் நங்கென்று ஒரு கொட்டு கொட்ட கை துடித்தது...அடக்கி கொண்டு "அப்போ நீங்களும் நிலை 1 லே சேர்ந்து தமிழ்  கற்றுக் கொள்ளலாமே " என்று விளையாட்டாய் சொல்வது போல் உணர்த்தாமல் இல்ல நான்...  வந்திருந்த கூட்டத்திலே வெறும் வெகு சிலரே இவ்வண்ணம் இருப்பதை பார்த்தேன்.. அந்த விகிதம் மிக  மிகக் குறைவு தான்; இருப்பினும் நான் தோள் தட்டிக்கொள்ளவில்லை, என்னைச் சமாதனப் படுத்திக்கொள்ளவில்ல. .. அமெரிக்காவில் ஆங்கிலம் கற்றுக் கொள்வது ஒன்னும் கடினமன்று...பள்ளியில், ஏனைய குழந்தைகளிடம் விளையாடும் பொழுது என்று பல சூழலில் ஆங்கிலம் மட்டுமே பேச நேரிடுகிறது..அதனால் வீட்டில் தமிழில் மட்டுமே பேசினால் குழந்தைகளிடத்து தமிழ் மென்மேலும் வளரும் என்பதில் ஐயம் இல்லை...




Author: Sathish
•9:59 AM
 நாள் : DECEMBER 31, 2012 நேரம் : விடிகாலை 4.53

நிசப்த்தமான அந்த அடுக்குமாடி குடியிருப்பின் அமைதியை குலைக்கும் வகையில், குடியிருப்பை ஒட்டிய அந்த ரோட்டில்  காற்றை விட வேகமாய் ஒரு கார் சீறிப் பாய்ந்தது... திடுக்கென்று பயந்து எழுந்தான் நம்  நாயகன்... "காதல் மன்னன்" படத்தில் அஜித் க்கு  எழுதிய வரிகள் - "அழுக்கு சட்டை போட்டாலும் அழகாய் தெரியும் ஆணழகன்...." இவனுக்கும் பொருந்தும்... தூங்கி எழுந்த முகம், கலைந்த தலை...இருப்பினும் அழகாய் தான் இருந்தான்... 

அந்த 15 X 17 சதுர அடி உள்ள அறை முழுவதும் இருள் பரவிக் கிடந்திருந்தது... மெல்ல தன் இடது கையை போர்வையின் வெளியே நீட்டி, கட்டிலின் side table ல் எதையோ தேடியவன் கையில் சிக்கியது iPhone 5; phone ன் பொத்தானை அமுக்கிய அடுத்த நொடி கண்ணைப்பறிக்கும் வெளிச்சத்தில் மணி 4.55 என்று காண்பித்தது. இனி தூங்கினா மாதிரி தான் என்று சலித்துக்கொண்டவன் மனதில் ஆயிரம் ஓட்டங்கள் ....நாளை புது வருடம் பிறக்கிறது..நாள் எவ்வளவு வேகமா ஓடுது...இப்போதான் அமெரிக்க வந்தாப்போல இருக்கு அதுக்குள்ள  5 வருடம் ஓடிவிட்டது... இந்த 5 வருஷத்துல எவ்வளவு விஷயம் நடந்திருக்கு...எவ்வளவு இனிய தருணங்கள் ...எவ்வளவு கசப்பனா விஷயங்கள்.. சொல்லப்போன  இப்போதான் 2011 பிறந்தாப்போல இருந்தது  அதுக்குள்ள அடுத்த வருஷப்பிறப்பு...ம்ம்ஹ் என்று ஒரு பெருமூச்சு விட்டு, மீண்டும் ஒருமுறை மணி பார்த்தான். phone -ன் வெளிச்சத்தில் பக்கத்தில் நன்கு தூங்கிக்கொண்டிருக்கும் தன்  மனைவி ப்ரியா வை பார்த்து 'இவளுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி தூக்கம் வருதோ என்று யோசித்து முடிக்கும் முன், "என்ன மாமா தூங்கலையா? அப்படி என்ன யோசனை காலையே? " என்றாள் ப்ரியா .

"ஒன்னும் இல்ல ப்ரியா நீ தூங்கு; But  தூங்கறதுக்கு முன்னாடி ஒரு சின்ன கேள்வி" என்றான்..."காலிலே 5 மணிக்கு என்ன டவுட் உங்களுக்கு? சரி கேளுங்க" என்றாள் ப்ரியா சலிப்புடன்.."New  Year Resolution க்கு  தமிழ் லே என்ன? நான் Blog  update பண்ணனும் " என்று கேட்ட அடுத்த நிமிடமே ப்ரியாவின் கண்கள் அந்த இருட்டையும் மீறி சிவப்பை கொப்பளித்தது ; அவ்வளவு கொலை வெறி...."அப்படி என்ன கேட்க கூடாத கேள்வியே கேட்டுட்டோம் என்று யோசித்தான்  நம்ம ஹீரோ....அது வேற யாரும் இல்ல நான் தாங்கோவ் ...ஹி...  ஹி... ஹி ....

"கொஞ்ச நாளா (இல்ல மாசமா...) இல்லாம இருந்த பிரச்சனை திரும்ப ஆரம்பிடிச்சிடா ... .ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்கு பட் பினிஷிங் சரி இல்லையே பா" ன்னு நீங்க சொல்றது புரிது...

 இப்படிதான் போன வருஷம் december 31 லே "த்து" ன்னு  ஒரு பதிவு எழுதி, நீயே உன்னை நல்லா திட்டி, அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி காரி துப்பிகொண்டது மட்டுமில்லாம,  இந்த புது வருடப் பிறப்புக்கு தொடர்ச்சியா பதிவுகளை படைத்திட உறுதி மொழி எடுக்கிறேன்.. ன்னு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம சொல்லிட்டு மொத்தம் நாளே நாலு பதிவு போட்டதுமில்லாம, காலை 5 மணிக்கு கட்டின பாவத்துக்கு பக்கத்துலே படுத்து நல்லா தூங்கற பொண்டாட்டியை எழுப்பி ."New  Year Resolution க்கு  தமிழ் லே என்ன? நான் Blog  update பண்ணனும் " சொன்னா கொலை வெறியா லுக் விடாம; Romantic  லுக்கா விடுவா?

சரி விஷயத்துக்கு வருவோம்...(அடப் பாவி 6 paragraph இடை விடாம எழுதி இருக்க; இன்னும் விஷயத்துக்கே வரலையா? ஒரு உண்மையான பதிவருக்கு உண்டான தகுதியே வச்சிக்கிட்டு ஏன்டா நெறைய எழுத மாட்டேன்கர???....)  உண்மைய சொல்லப்போன எனக்கு New  Year Resolution அது இது ன்னு எந்த நம்பிக்கையும் இல்ல...யாரவது அப்படி எடுத்தாலும் "எதையாவது பண்ணனும் ன்னு முடிவு பண்ணா உடனே பண்ணு அதென்ன New  Year  வரை  ஒரு சாக்கா வச்சி காலம் கடத்தறது? ன்னு கேட்பேன்...கேட்கும் போது easy யா இருக்கு...நடைமுறையில் தான் எவ்வளவு சிக்கல்?... ஒன்னும் இல்ல பதிவு எழுதணும் ...நெறைய எழுதணும் ... ரசிகர்களின் ஆதரவை பெற்று சினிமா அரசியல் ன்னு முன்னேறனும் (அடங்க மாட்ட????) இது என்னோட போன வருஷ உறுதி மொழி ...அதுக்கு 1. நேரம் கிடைக்கணும்  2. பதிவுக்கு களம், கருத்து  கிடைக்கணும் (டேய் டேய் நீ எழுதின எதிலும் அது இல்லையே ??? )     3. கிடைச்ச பதிவு களத்துக்கு நல்ல தலைப்பு கெடைக்கணும்....இப்படி பல சிக்கல்கள்...போதா குறைக்கு நடைமுறையில் நாம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தையை கையாளுவது....Resolution க்கு, உறுதிமொழி தான் தமிழாக்கமா? சத்தியமா எனக்கு தெரில்லே..ஆனா கண்டிப்பா வேற ஒன்னு இருக்குன்னு மட்டும் தெரியும்... அத யோசனை பண்ணா அடுத்த வருஷம் பொறந்திடும்...சரி நமக்கு தான் தமிழ் ஞானம் பத்தல ன்னு என் மனைவியே கேட்டா கண்ணு சிவக்க முறைக்கிறா ...இப்ப சொல்லுங்க நான் பாவம் இல்லையா??

யோசிச்சு பார்த்தா உண்மையில் இதெல்லாம் சிக்கல்கள் இல்லை...சும்மா சாக்கு போக்கு சொல்லி தப்பிக்க பயன்படுத்தும் யுக்திகள்...செய்யணும் ன்னு  முடிவு பண்ணிட்ட களத்துல எறங்கி செய்யணும்... யோசிச்சிட்டே இருந்தா காலம் கடத்தலாமே தவிர ஒன்னும் உருப்படியா பண்ண முடியாது... (டேய் இப்போ என்னதான் சொல்ல வர?)
  
ஆக மொத்தத்துலே இந்த ஊர், பக்கத்துக்கு ஊர் அண்ட் உலகலாவிய என் ரசிக பெருமக்களுக்கு நான் சொல்ல வவரர்து  என்ன நா... இந்த வருஷம் கண்டிப்பா நெறைய எழுத முயற்சி பண்ணனும் என்பது தான் என்னோட உறுதிமொழி... பார்போம்...ஆனா ஒன்னு...மறுபடியும் 2014 லே அடுத்த பதிவு போட்ட மவனே...... No...  No... எழுதுறதுல எனக்கு  மன நிறைவு இருக்கு; ரொம்ப பிடிச்சிருக்கு...அதுக்காக கொஞ்சம் கூட மனசாட்சியே  இல்லாம  காதல் மன்னன் அஜித், உலக நாயகன் கமல் ன்னு கதை லே கூட உன்ன நீயே சொன்னே ...படவா பிச்சி புடுவேன் பிச்சி ...