Author: Satya
•4:13 PM
 விஷயம் ஒண்ணுமில்லையா? இல்ல என் மூளை ஒழுங்கா வேலை செய்யவில்லையா? [ரொம்ப வெகுளியாவே இருக்கேன் பாருங்க...32 வயசாகியும் இன்னமும் மூளை வேலை செய்யாதத திண்ணமா உணர முடியல ஹி ஹி ஹி ] பதிவு போட்டு பல நாள் ஆச்சு!! அப்படியே ஒரு பதிவு எழுதினாலும் அது திரை விமர்சனமா தான் இருக்கு...இது வேலைக்காகதுடியோவ்...பார்த்து பக்குவமா நடந்துக்க....இப்படியே போனா வர ஒன்னு ரெண்டு கம்மேண்டுக்கும் ஆப்பு வந்துடும்...

சரி நாம விஷயத்துக்கு வருவோம்...பல பேர் திட்டுற அளவுக்கு அப்படி ஒன்னும் வெளங்காத படம் இல்லைங்க நடுநிசி நாய்கள். கண்டிப்பாக கவுதம்மேனன் எடுத்துக்கொண்ட கதைக் களத்தை பாராட்டியே ஆகவேண்டும். ஆரம்பித்தது முதல் முடிவு வரை தொய்வே இல்லாத திரைக்கதை. தமிழில் ஒரு கிரைம் த்ரில்லர் திரைக்கு வந்து பல காலம் ஆகிறது...பல பதிவுகளில் இந்தப் படத்துக்கு பல எதிர்ப்புகள், வன்மையான விமர்சனங்கள் இருப்பதை என்னால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது...மகன் தந்தை உறவு, மகன் வளர்ப்புத் தாய் உறவு என முரண்பாடான உறவை திரையில் கண்டு முகம் சுளிக்கும் இந்த சமுகம், நிஜத்தில் இருப்பது தான் திரைக்கு வருகிறது என்பதை ஏன் எண்ணிப் பார்க்க மறுக்கிறது...இன்றுகூட 8 வயது சிறுமியை கற்பழிக்க முயன்று தோற்ற கோபத்தில் சொந்த மகளைக் கொன்று ரயில் தண்டவாளம் அருகில் புதைத்த தந்தையின் செய்தி ஒன்றை செய்திதாளில் கண்டேன். எனவே வக்கிரமாக உள்ளது என்பதை விட நாம் வாழும் இந்த சமுதாயத்தில் இப்படியும் பல கொடுமைகள் நடக்கிறது என்பதை திரையிட்டுக் காட்டிய கவுதம்மேனன் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது..

இன்னொரு கவனிக்கப் படவேண்டிய ஒரு சமாச்சாரம், பாடல்களுக்காகவே  பலமுறை பார்க்க தூண்டிய கவுதம்மேனன் படங்களுக்கு மத்தியில், பாடல்கள் மட்டுமல்ல , பின்னணி இசைக்கூட இல்லாமல் ஒரு படத்தை அதுவும் ஒரு த்ரில்லர் படத்தை படைத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்... 

வீராவாக நடித்த வீராவின் நடிப்பு பாரட்டும்படியுள்ளது...நாயகி சமிரா படம் முழுக்க அலறியபடியே ஓடுகிறார.மீனாட்சியம்மா இரண்டாவது பாதியில் மிரள வைக்கிறார்.. பாரதி ராஜாவின் 'சிகப்பு ரோஜாக்கள்' கூட இப்படத்தை ஒப்பிடமுடியாது...[யார் ஒப்பிட்டானு கேட்காதிங்க...காபி வித் கவுதம் லே கவுதம்மேனன் சொன்னார் ] அதில் கமலை வில்லத்தனமாக காண்பித்தாலும், கடைசியில் அவர் மீது பரிதாபம் தான் வரும்.. ஆனால் வீராவின்  மேல் சுத்தமாக பரிதாபம் ஏற்படவே இல்லை..மாறாக கோபம்தான் வருகிறது...தவிர 'சிகப்பு ரோஜாக்களில்' ஒரு அழகிய காதல் கதை இருந்தது. ஸ்ரீதேவியின் பாத்திரப் படைப்பிலும் ஒரு நளினம் இருந்தது...ஆனால் இதில் சமீரவிற்கு ஒன்னும் ஸ்கோப் இல்லை...
சொல்ல மறந்துட்டேனே...சில வாரங்களுக்கு முன் 'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியில் இதே படத்தைப் போன்ற குறும்படத்தை பார்த்தேன்...இதோ உங்கள் கண்களுக்கு அந்த குறும்படம்....கண்டிப்பாக ஆங்கில சைக்கோ கொலையாளிகள் படத்துக்கு இணையாக 'நடுநிசி நாய்கள் ' சொல்ல முடியாவிட்டாலும்  தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய  சைக்கோ படங்களில் இப்படமும் முன்னணியில் இருக்கும்... இந்த படம் உங்கள ரொம்ப [இல்ல கொஞ்சம் கூட]  இம்ப்ரெஸ் பண்ணலேனா வருத்தப்படாதீங்க...தமிழ் சினிமா இல்ல, உலக சினிமாக்கு ஒரு கலைபுயல், சினிபீறங்கி விரைவில் வெளிவர உள்ளது. அவுக கண்டிப்பாக பல உன்னத கலைப் பணிகளை செய்து உங்களை உற்சாகப் படுத்துவாக...இப்போதைக்கு யார்கிட்ட அச்சிச்டன்ட்டா சேரரது என்ற குழப்பத்தில் இருப்பதால் கொஞ்சம் லேட் ஆகுது...ஆனா முடிவெடுத்துட்டா என் பேச்சே நானே கேட்க மாட்டேன்... [அயோ களு கொடுத்துட்டேனோ?]
This entry was posted on 4:13 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On February 25, 2011 at 5:37 PM , bandhu said...

//ஆனா முடிவெடுத்துட்டா என் பேச்சே நானே கேட்க மாட்டேன்... [அயோ களு கொடுத்துட்டேனோ?]//பேரரசு?

 
On February 27, 2011 at 8:26 AM , Satya said...

ஐயோ bandhu அவசரப் படாதீங்க...நான் என்ன பத்தி தான் பேசினேன்...எவ்வளவோபண்ணிட்டோம் ... இதையும் பண்ணலாமுனு......