Author: Sathish
•11:15 PM
சிங்கார சென்னையிலே...

சென்னைக்கு வந்துட்ட போதும்....சாப்பாடு பின்னி எடுக்கும்...சாதரணமாவே எங்க வீட்லே ரெண்டு வகை குழம்பு, ரெண்டு வகை பதார்த்தம் இருக்கும். இதுலே பல நாள் சென்னை சாப்பாடு இல்லையா...சோ அம்மா நான் எப்போ us லே இருந்து வந்தாலும் நடப்பன, பறப்பன, ஊர்வன என சகலமும் என் தட்லே செஞ்சி வச்சிடுவாங்க ...

ஒரு ஞாயிற்றுகிழமை நல்லா மூக்கு முட்ட தின்னுப்புட்டு எங்க வீட்லே எல்லோரும் பேசிக்கிட்டிருகோம்...அப்போ எனக்கு ஒரு போன்....என்னோட சகாசெந்தில்.... "காலேஜ்  அலும்னிடா!! நீ  வந்த நேரத்துல  கரெக்டா வந்திருக்கு... போலாம் மாப்ளே" என்றான்... "நீ வீட்லே இருந்தாலே எவனுக்காவது மூக்குல வேர்க்கும்.... ஊர சுத்திக்கிட்டே இருன்னு"  அம்மாவோட பொலம்பல்..[இதெல்லாம் கேட்டு  எவ்வளவு நாளாச்சு ...] இன்னொரு பக்கம் நான் கட்டிகினவ....விஜகாந்த் மாதிரி கண்ணு ரெட்டாகி, தீவிரவாதிகள பார்கற மாதிரி ஒரு பார்வை...எல்லோரையும் சமாளிச்சு கார் எடுத்துகிட்டு கெளம்பியாச்சு...

மனசு ரொம்பவே என்ஜாய் பண்ணுச்சு....SSN காலேஜ், கேளம்பாக்கம்...இன்னமும் entrance exam எழுதின நாள் நினைவிருக்கு...இதே செந்திலும் நானும் தான்...மச்சீ admission கெடச்சா சேருவியா ன்னு அவன் கேட்க போ மாப்ளே இங்கேயானு கேட்டவன் நான்...ஒரே காரணம் என் வீட்லே இருந்து 140 கிலோமீட்டர் ஒரு நாளைக்கு போகணும்..வேலைக்கே ஆகாது....எனக்கெனவோ அண்ணா university oxford னு வரிசைலே நிக்கற மாதிரி ஒரு தெனாவட்டு....கடைசில எங்கேயும் சீட் கெடைக்காம இங்கே அடிச்சிபுடிச்சி ஓடி வந்தேன்... அன்று பார்த்த காலேஜ்க்கும், இப்பவும்  நிறைய மாறுதல்கள்....பட்டைய கெளப்பி இருக்காங்க...நெறைய ப்ளாக்குகள், இன்டோர் ஸ்டேடியம் னு அசத்தி வச்சிருக்காங்க...
இப்போ சிட்டிலே டோப்மொஸ்ட் காலேஜ் னு பேரு...US லே இருக்க நம்ம ஊர் மக்களுக்கு SSN சொன்னா ஒஹ்ஹ சீட் கெடைக்கறது ரொம்ப கஷ்ட்டம் ஆச்சே ன்னு சொல்லும் போது.."ஆமா ஆமா Entrance , GD ன்னு ரொம்ப இருக்கு" நல்ல ஸ்கோர் பண்ணனும் " னு ஒரே பந்தா விடுவேன். [எனக்கு மட்டும் தானே தெரியும்..காலேஜ் தெறந்த புதுசு லே 35 பேரு எழுதி 30 பேருக்கு சீட் கெடச்ச ரகசியம்...ஹி ஹி ஹி ] என்னோட வகுப்புக்கு சென்றதும் இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு...நேராக கடைசி சீட்டில் சென்று உட்கார்ந்தேன்... என்னோட சீட்....சற்றே கண்மூடி பழைய நினைவுகள்.. என் வலப்பக்கம் என்னோட நண்பன் ஷ்யாம் ...எவ்வளவு கலாட்டா, ஆர்பாட்டம், சண்டைகள், சமாதானங்கள் ....எழுந்து வர மனமில்லை......முத்தமிட்டேன்...என் மேஜையை!!! ஒவ்வொருவருக்கும் பள்ளிப் பருவமும், கல்லூரிப் பருவமும் தான் வாழ்கையின் வசந்த காலங்கள் என்பதை மீண்டும் நினைவுகூர்ந்தேன்..... நான் படித்த கல்லூரியின் வளர்ச்சி என்னை ரொம்பவே ஆச்சரிய படுத்தியது.....இந்த நேரத்தில், என் கல்லூரிக்காக பணி புரிந்த, புரிந்துகொண்டிருக்கிற ஒவ்வொருவருக்கும் என் பணிவான வணக்கங்களை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் இருக்கும்போது கண்டிப்பாக பள்ளியையும் கல்லோரியையும் வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று பார்க்கவேண்டும்!!!
அடுத்து, என் juniors ...எவ்வளவு தான் அடிச்சாலும் வலிகலன்னு சொல்லற பசங்க...படிக்கற காலத்துல ராக்கிங்லே படுத்தின பாட்ட இன்னமும் மறக்வில்லை!!! எல்லோரும் ரொம்ப நல்லாவே செட்டில் ஆகி இருக்காங்க....பாசக்கார பசங்க இன்னமும் மரியாதை கொடுக்கறாங்க!!! எல்லோரும் சேர்ந்து staffs பிளாக் பக்கம் போனோம்.... சத்யம் பண்ணாலும் நான் US லே வேலை செய்யறதா ஒருத்தரும் நம்ப மாட்டேன்கறாங்க...அந்த ரேஞ்சுக்கு படிச்சோம் லே!! என்னோட mam ஒருவரும் வரல [நான் வரேன்னு தெரிசிருகுமோ!!!] ராம்கி சார்!! பசங்களோட ரொம்ப friendly பழகற சார்..எப்போவாவது கிளாஸ்க்கு வரதால என்னோவோ எனக்கு அவர ரொம்ப பிடிக்கும்....நல்ல அரட்ட அடிச்சோம்.... படிக்கிற காலத்துல நான் பண்ண அயோக்கியத்தனம், முள்ளமாரிதனம் எல்லாத்தையும் இன்னுமா மறக்காம சொல்லி காட்டனும்.....படிக்கிற காலத்தில எனக்கு நல்லா வர ஒரே விஷயம் காது கிழியற மாதிரி விசில் அடிக்கறது..முன் சீட்லே உடகர்ந்திருகிற பொண்ணுங்க எல்லாம் சும்மா அலறியடிச்சி ஓடுவாங்க....டான்ஸ் என்ற பேர்லே விஜய் பாட்டுக்கு போட்ட ஸ்டெப்பா போட்டு டான்ஸ் ஆடறது, ஸ்போர்ட்ஸ் என்ற பேர்லே கிரௌண்ட் லே சண்ட போடறதுன்னு....சினிமா லே காலேஜ் னு காமிச்சு பண்றத எல்லாம் உண்மையாவே பண்ணது எங்களோட செட் [பொல்லாத ஷேவிங் செட்...] நெறைய விஷயங்கள்...பேசிகிட்டா இருந்ததுல நேரம் போனதே தெரில....அடுத்த முறை சென்னை வரும்போதும் கண்டிப்பாக கல்லூரி சென்று பார்க்கவேண்டும் என்ற முடிவுடன் சற்றே இறுகிய மனதுடன் வீடு திரும்பினேன்.





This entry was posted on 11:15 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: