Author: Sathish
•8:04 AM
கடந்த சில ப்ளாக் ஆரம்பிக்கும் போதே என்னை நான் திட்டிக் கொண்டும், மாதத்திற்கு ஒன்னு எழுதற உனக்கு எதுக்கு ப்ளாக் அப்படி,இப்படின்னு ஆரம்பிச்சு உங்கள முகம் சுளிக்க வைக்க கூடாது என்ற நல்ல எண்ணத்துல, என்னை திட்டிக் கொள்ளாமல் துடங்குகிறேன்.. டைட்டில் பார்த்ததுமே எல்லோருக்கும் ஒரு பொறி [அவல், வேர்கடலை...அடேய் போதும் டா ...முடியல...] தட்டி இருக்கும்.. Yes ...ஆமா.. This is about our country... இது நம்ம நாட்டை பற்றியது...[எல்லோரும் குரல் வச்சி மிமிக்ரி பண்ணுவாங்க நீ எழுத்த வச்சி...மேஜர் சுந்தர்ராஜனை ஞாபக படுதுடியப்பாவ் ....] கடந்த 5 வாரமா நான் சிங்கரா சென்னையில் இருந்தேன். அதான் ப்ளாக் கிட்ட கூட வர முடியல அதற்காக என் ரசிகர்களை ஏமாற்ற முடியாது என்ற ஒரே காரணத்தால்  இந்த ப்ளாக்ஐ மூன்று பாகங்களாக எழுதி தள்ளி உங்களை இரட்டிப்பு [முரட்டிப்பு ...மூணு லே அதான்...] சந்தூஷதில் மூழ்கடிகப்போகிறேன்..[ யாரும் தப்ப முடியாது சொல்லிபுட்டேன்]

என் தாயகப்  பயணம் வழக்கம் போல கத்தார் airways இல் துடங்கியது. அப்பாவின் முதல்வருட நினைவு தினம், சொந்த வேலையாக கடந்த நான்கைந்து மாதமாக சென்னையில் இருந்த என் மனைவியை திரும்ப அமெரிக்க அழைத்து வருவது என பல்வேறு காரங்களுக்கான பயணமிது...சாதரணமாக துடங்கிய பயணம் Doha வில் கலை கட்டிடுச்சு... அடிக்கடி கத்தார் ஏராகப்பல் லே போனதால தோஹா டு சென்னை பிசினஸ் கிளாஸ்க்கு என டிக்கெட் மாற்றினார்கள். free யா [பின்ன காசு கொடுத்து போற பரம்பரையா  நீ???] ஒரே விமானத்துல இவ்வளவு வேறுபாடா?? Economy கிளாஸ் லே விமானம் கெளம்பி அரைமணி நேரம் பொறுத்துதான் ஏதாவது கொடுப்பாங்க...இங்கே சீட்லே உட்காரர்த்துக்கு முன்னாடியே, ஒரு அம்மணி [அழகான, இளமையான, எடுப்பான தோற்றத்துடன் ....] பலவகையான ஜூஸ் ஒரு தட்ட்லே வச்சி நிக்கறா...சீட்லே உடகார்ந்து பெல்ட் போட்டு..செட்டில் ஆகற வரை பக்கத்துலேயே நிக்கறா...நான் decentaana ஆளா ...சோ 10 - 15 நிமிஷத்துல சீட் பெல்ட் போட்டு ஜூஸ் எடுத்து அனுப்பிட்டேன்... ஹி ஹி ஹி ..இங்கே இருந்து retire ஆகற கேஸ் தான் economy கிளாஸ் கு போறாங்க நினைக்றேன்... அங்கே ஒன்லி ஆயாஸ் available...ஹ்ம்ம்... சீட் நல்ல  இடவசதியோட சூப்பெரா இருந்தது.. பணம் எனென்ன வேலை செய்யுது? சகல வசதியுடன் சென்னை வந்து இறங்கினேன். எப்போதுமே கடைசியாக உட்கார்ந்து [ஸ்கூல் லே ஆரம்பிச்சது...] விமானத்துல இருந்து வெளியே வரவே அரை மணி நேரமாகும். 18 மணிநேரம் அமைதியா பயணம் செய்றவன் இந்த அரைமணி நேரம்தான் நான் முன்னாடி, நீ முன்னாடி னு அடிச்சிகிட்டு இறங்குவனுங்க....இந்த முறை முதல் ஆளா நான்தான் விமானத்த விட்டு வந்தேன்...ஸ்கூல் லே  கடைசி பீரியட் முடிஞ்சி வெளியே முதலா வர சந்தோஷம்... 

விமானத்தை விட்டு விமானதளத்திற்கு போகும் நடை பாதையின் பாதி வழியில், என தம்பி, தங்கை, மச்சான் மூணு பேரும் வழியில் நின்று வரவேற்கிறார்கள். எனக்கு சரியான ஆச்சர்யம்...இவளவு தூரம் எப்படி வந்தார்கள்??? செக்யூரிட்டி பிரச்சனைகள் வரதா? எப்படி இவளவுதூரம் விமானத்திற்கு அருகில் அனுமதிகிறார்கள்??? யோசிப்பதற்குள் காவல் துறையில் பனி புரியும் என cousin வாங்க வாங்க என வரவேற்கிறான்... பணத்திற்கு பிறகு இரண்டாவதாக நான் கவனித்த விஷயம் Recommendation ...என்ன..ஷங்கர் படம் மாதிரி அங்கங்கே ஒரு பஞ்ச், பாஸ் னு நினைகறீன்களா? வரும் ப்ளாக் லே அதை பற்றி நிறைய பேசுவோம்...

வெளியே வந்ததும் நம்ம மண்வாசனை..background லே சுவர்க்கமே என்றாலும் ...அது நம்மோர போல வருமா? " னு ராஜாவின் குரல் கேட்ட  ஒரு பீலிங்...மனசுக்குள் இனம் புரியாத ஒரு கிளர்ச்சி....அடுத்த நொடி..என்னோட அப்பாவின் கவனம்...என்னை வரவேற்க எப்போதுமே வந்து ஆவலோட காத்துக்கொண்டிருக்கிற ஜீவன் இப்போ என் கிட்ட இல்ல...வெளியே காட்டிக் கொள்ளவில்லை நான்....

ரொம்ப நாளுக்கு பிறகு எங்க எஸ்டீம் காரை பார்த்து ஒரு ஹாய்..ஒவ்வொரு காருக்கு பின்னாடியும் பெட்டிகளை நகர்த்தி வர உதவும் கார்ட்; ஆங்காங்கே நின்று கொண்டிருப்பதை பார்த்து சின்னதா ஒரு எரிச்சல்...என் தம்பி கிட்ட இந்த கார்ட் எங்கே விடறதுன்னு கேட்டு முடிகறதுக்குள்ள அவன் பக்கத்துக்கு கார் பின்னாடி தள்ளி விட்டான். அவனை ஒரு அதட்டு அதட்டிவிட்டு கொண்டு போய் அத விட வேண்டிய எடுத்துல விடு சொன்னா " நீங்களே போய் பார்த்து விடுங்க " னு சொன்னான். நானும் கார்ட் எடுத்து பார்கிங் லாட் லே முழுக்க தேடி கடைசில "புறப்பாடு" போர்டு கிட்ட போய் விட்டேன். இங்கே வால்மார்ட் முதற்கொண்டு எல்லா கடைகளிலும் ஒவ்வொரு வரிசையில்லும் கார்ட் கலெக்டர் இருப்பது போல் ஏன் இங்கு வைக்க கூடாது? சின்னதா ஒரு கோவம்...இப்போ நான் படுற கோபமாகட்டும், எரிச்சல்லாகட்டும் எல்லோருக்கும் அமெரிக்காவிலிருந்து வந்து சீன போடுறான்னு தோனும்...சோ தருணம் வரும் வரை காத்திரு ன்னு என்னகே சொல்லிக்கொண்டு...மீண்டும் குடும்ப மற்றும் நண்பர்கள் கதைக்கு என் கவனத்தை திருப்பிக் கொண்டேன்....
வீட்டை நெருங்கி விட்டாச்சு...கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் வீடு...வழக்கம் போல ஆரத்தி எடுத்து கட்டித் தழுவிய அம்மா, சந்தோஷதில் மனைவி, என உடன்பிறப்புகள், மாமா என மழலையோடு கூப்பிட்டு, என்னை அள்ளி அணைத்த என தங்கையின் குழந்தை ப்ரீத்தி...மகிழ்ச்சி களிப்பில் மூழ்கினேன். 18 மணி நேர களைப்பு மறைந்தது நொடிப்பொழுதில்... கதவோரம் நின்று என்னை பார்த்துக் கொண்டிருந்த என மனைவியை பார்த்து ரொமாண்டிக் லுக் ஒன்னு வேறு...[டேய்..டேய்...போதும்டா.... இந்த நேரத்துல நாய் சேகர் ரொமாண்டிக் லுக்கா னு கிண்டலு, ஏகதாளம், நையாண்டி பண்றவங்களை வன்மையாகக ண்டிக்கிறேன்..]....நிறைய நிகழ்வுகள்... அனுபவங்கள்...முடிவுகள் என பல விஷயங்கள் இனி வரும் பதிவுகளில்..... தாய்மண்ணே வணக்கம்..பாகம் 2 ...விரைவில்.....[கண்டிப்பாக 2 மாத்தமாகாது....]

This entry was posted on 8:04 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: