Author: Sathish
•1:50 PM
இந்திய சுற்று பயணத்தை முடித்து [பெரிய அயல்நாட்டு அதிபர்..டேய் டேய் போதும்டா...] அமெரிக்கா திரும்பிய ஒரு வாரத்தில் என் மேனேஜர் கால்பண்ணி, புது ப்ராஜெக்ட் ஒன்னு...2 வாரம் "Guatemala" போகனும்னார்... கோடேமல வா?? எனக்கு தெரிந்தது வைஜயந்திமாலா தானே!!! அத்திப்பட்டி மாதிரி Map லே கூட  அது எங்கே இருக்குனு கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டமுங்க...[உனக்கு எது தான் easy ???] ஒரு சின்ன Flashback....
ஸ்கூல்லே தொடர்ச்சியா அரபிக்கடலையும், வங்காள விரிகுடாவையும் மாத்தி மாத்தி போட்டு பிரபலமான காலம்...[தூ மானங்கெட்டவனே!!]...ஸ்கூல் inspection ...DEO கிளாஸ்க்கு வந்து எல்லோரையும் கேள்வி கேட்க, அவரிடமிருது மறைந்து வாழ்ந்த சமயம்...[பெருமை டா...] என்னோட வாத்தி என் அலாதி புவியியல் அறிவை உணர்ந்து, புத்திசாலிதனமாய் இந்த முறை, ஹிமாலய மலையை காட்ட சொல்ல...அசல் அஜித் ஸ்டைல்லே நானும் Map கிட்ட போய், வடக்கு பக்கமா குச்சியே வச்சி கோலம் போட்டேன்..DEO முதற்கொண்டு கிளாஸ்ல  எல்லோரும் சிரிச்சாங்க...என் வாத்தி கண்ணு மட்டும் விஜயகாந்த் கண்ணு மாதிரி செவப்பா ஆச்சு... என்னை தீவிரவாதிய பார்கற மாதிரி பார்த்தார்...கண்ணுல அவ்வளவு கொலைவெறி...என் சீட்டுக்கு போய், பக்கத்துல இருந்த என் நண்பனிடம், "என்னடா தப்பா?நான் வடக்கு பக்கம் தானே காட்டினேன்" னு பரிதாபமாய் கேட்க, அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, "நீ ஆப்ரிகாவோட வடக்குலே  காட்டினே" ன்னு சொன்னான்....இந்திய வரைபடம் வைக்காம, உலக வரைபடம் வச்சது என் வாத்தி தப்பு...நான் என்ன செய்ய? ஆனாலும், எனக்கு ஒரு சின்ன டவுட் இருந்தது...என்னடா இந்தியா பெருசா இருக்கே? கீழ வேற இலங்கையே காணோமேனு தோனுச்சு ஒரு டவுட்டோடதான் காட்டினேன்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......   சரி விடுங்க வெகுளித்தனமாவே இருந்திருக்கேன்...

சரி, நாம விஷயத்துக்கு வருவோம்.... Guatemala  வட அமெரிக்காவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் நடுவே உள்ள ஒரு சின்ன நாடு. கரிபியன் மற்றும் பசிபிக் கடல் சூழ்ந்த நாடக இருப்பதால், அழையா விருந்தாளியாக பூகம்பம், கடுஞ் சூறாவளி போன்றவைகள் வந்து போகும்; மேலும் ஆங்காங்கே எரிமலைகள் வெடித்து, அப்பபோ கொஞ்சம் தீக்கொழம்பு வெளியேறும்... மற்றபடி பயப்பட ஒன்றும் இல்லை.... [இதுக்குமேல என்னத்த பயப்படறது...]கொஞ்சம் சூடு அதிகமா இருந்தா சிக்கன் கொழம்புகே பயப்படற எனக்கு தீக்கொழம்பு  தேவையா? [என்ன கொடும சரவணா!!!] முன்பு  ஸ்பெயின் ஆதிக்கம் இருந்ததாம் ஆனால் இப்போது அங்கே mexicans தான் இருகிறார்கள்...ஸ்பானிஷ் தான் அங்கு பேசுகிறார்கள்...அபீசியல் language ஸ்பானிஷ் தான்..  எனக்கு தெரிஞ்ச ஒரே வார்த்தை 'அடியோ சாமிகோ' அதுவும் முதல்வன்லே சுஷ்மிதா சொன்னதால தெரியும்...அங்குள்ளவர்களுக்கு இங்கிலீஷ் அவ்வளவா வராது...சிலருக்கு அவ்வளவும் வராது ...சுருக்கமா சொன்னா விக்ரம் படத்துலலே வர 'சலாமிய' நாடு மாதிரி.. ஜனகராஜ் மாதிரி என் கூடவே ஒருதன் இருந்தான்....அவன் தான் என் translator . நான் அவன்கிட்ட இங்கிலீஷ் லே சொல்ல அத அவன் ஸ்பானிஷ்லே அவங்களுக்கு புரிய வச்சு, அவங்க சொல்றத எனக்கு இங்கிலீஷ் சொல்ல ஒரே காமெடி தான் போங்க...Client கூட நேருக்கு நேர்  பேசினாலே ப்ராஜெக்ட் முடிய லேட் ஆகும்,  இதுல இதுவேறைய???

வழக்கம் போலவே இந்த முறையும், தங்குவதற்கு ஹை கிளாஸ் ஹோட்டல்,,,நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப நல்லாவே இருந்தது....சகலமும் இருந்தது இந்த ஹோட்டல் லே...இந்த படத்துல நீங்க பார்க்கறது நான் தங்கி இருந்த ஹோட்டல், Barcelo   நான் இந்த ஊரை அமெரிக்காவின் அத்திப்பட்டினு சொல்வதற்கு காரணமுண்டு... முதல் நாள் வேலைக்கு சென்றதும், customer ஊர பத்தி பேசும்போது, ஆபீஸ் ஜன்னல் வழியா எரிமலைய காட்டினார்...அய்யோ இவ்வளவு கிட்ட இருக்கா? னு கேட்ட போது, என்ன இதுக்கு போய் பயபடுற; இந்த ஊர்லே இயற்க்கை உபாதைகள் அதிகம்...போன மாசம் கூட நிலநடுக்கம் வந்தது...நீ 2 வாரம் இருக்கலே கிளம்பறதுக்குள்ள ஒரு தடவ பார்க்கலாம்" என்றார்..அடப்பாவி , நிலநடுக்கம் வரர்த நமிதா வரமாதிரி சொல்றே நெனச்சிட்டு வந்துட்டேன்..  இப்போ இருக்க கோடேமலா version 3
இதுக்கு முன்னாடி ரெண்டு தடவ பூகம்பத்துல அழிந்து பிறந்த மூன்றாவது கோடேமலா தான் இது.... அடிக்கடி அழிந்து பிறப்பதால் நான் இதற்கு அத்திப்பட்டினு பேரு வச்சேன். [என்ன புத்திசாலித்தனம்] ஹி ஹி  ஹி ...இந்த படத்துல (இடப்பக்கம்) பார்க்கறது பழைய கோடேமலா sample ...பூகம்பத்தால் அழிந்துபோன, இத மாதிரி இடிஞ்சி போய் இருக்குற இடம் தான் அங்கே இப்போ tourist spot ...இந்த இடத்தோட பேரு 'AntiGua ' ... இந்த படத்துல இருக்கறது ஒரு restaurant பழமை அழியாம இருக்கணும்னு இங்கே இருக்க, இடிஞ்சிபோன  வீடுகளை கொஞ்சம் ஆல்டெர் பண்ணி ஹோட்டல் கட்டி இருக்காங்க.. "படுபாவிகளா... சாப்பாட்ல பல்லி விழுந்தாலே தாங்காதுடா என் பாடி...இங்கே உட்கார்ந்து  சாப்பிட்டா,  பில்டிங்கே சாப்பாட்லே விழுமே..." இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு சாப்பிட்டேன்... பின்னர் இரவு முழுவதும்  ஊரைச சுற்றி பார்த்தேன்...மேல உள்ள இன்னொரு படம், AntiGua பகல்லே எடுத்தது.. பின்னாடி பாருங்க எரிமலையை... ஆத்தாடி.... வித்தியாசமான அனுபவம்... இன்னொரு வித்யாசமான அனுபவம் என்னனா, நான் முதல்முறையா முழுக்க முழுக்க வெள்ளகார பசங்க அதுவும் டீன் ஏஜ் பசங்களோட வேலை செய்த அனுபவும்....அரசல் புரசலா சில விஷயத்த கேள்வி பட்டு இந்த ஊரு பசங்கலபத்தி, நெறைய தப்பான அபிப்பிராயம் இருந்தது... பழகின பிறகு, அடடா இவங்களும் நம்மள மாதிரி தான்னு தோனுச்சு...'உதாரணத்துக்கு...15 வயசுக்கு மேல இந்த ஊரு பசங்க, பொண்ணுங்கலாம் பெற்றோரை விட்டு தனியா பிரிஞ்சி வந்துடுவாங்க....பந்த பாசம்லா கொஞ்சம் கம்மி என்பதெல்லாம் நான் தப்பா எடுத்த சில விஷயங்கள்....வெகு சிலரே, அதுவும் கட்டயாமிருப்பின் பெற்றோரை பிரிந்து இருகிறார்கள்...மற்றபடி இவர்களும் தங்கள் பெற்றோர் மற்றும் கூட பிறந்தவர்கள் மீது வெகுவும் பாசமாகவே இருக்கிறார்கள்...என்ன நம்ம ஊரு பெற்றோர்கள் மாதிரி இங்கு ஊட்டி ஊட்டி வளர்க்கறது இல்ல..பிள்ளைகள ரொம்பவே தனிச்சையாய் முடிவுஎடுக்க விடறாங்க....அத சிலதுங்க தப்பா எடுத்து தறிகெட்டு அலையுதுங்க....வெள்ளகார புள்ளைங்களுக்கும் நம்ம ஊரு கலாசாரம் பத்தி நெறைய நல்ல விஷயங்களும் சொன்னேன்..[நீயான்னு கேக்காதீங்க..அப்பப்போ நான் நல்லவன்தான்] முக்கியமா பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கும் திருமணம், கூட்டுகுடும்பம் இதெல்லாம் ரொம்பவே ஆச்சர்யமா கேட்டாங்க...எல்லாத்தையும் கேட்டுட்டு கடைசியா ஒருத்தன் கேட்ட கேள்விய பார்த்து எனக்கு அழுகாச்சியே வந்த்டுச்சு..எப்படி ஒரு டெஸ்ட் டிரைவ் கூட பண்ணாம, உன் parents சொல்ற பொண்ணெல்லாம் கல்யாணம் பண்றீங்கன்னு? கேட்டான். அடப்பாவி இதென்ன ஹோண்டா காரா? ஓட்டி பார்த்து வாங்கறதுக்கு?

இந்த ஊர்லே நெறைய விஷயங்கள் நம்ம ஊர ஞாபக படுத்துத்து. 'Latin அமெரிக்கா'  என்பதால், இதுவும் அமெரிக்காவா என்றால் பல விஷயங்களில் 'நோ'.. உதாரணத்துக்கு, இங்கே Gallonக்கு பதில் லிட்டர் தான் use பண்றாங்க..கிலோமீட்டர் அளவுகளும் நடைமுறையில் உள்ளது. முக்கியமா trafficla நம்ம ஊர அப்படியே follow பண்றாங்க....ஒன்னையும் மதிக்கறதில்ல.... ரோடு எல்லாம், நம்ம ஊரு மாதிரி தான் இருக்கு, lanes இருந்தாலும் அதெல்லாம் சும்மா தமாஷுக்கு தான்..ஒரு சக்கரம் இந்த லேன் அண்ட் மற்றொன்று இன்னொரு லேன் தான்... இந்த படத்துல பார்த்தா தெரியும் நான் ஏன் நம்ம ஊர் போல தான் சொல்ற காரணம். நம்ம ஊரு பெட்டிகட மாதிரி ரோட்டோரமா நெறைய கடைகள்...

மற்றொரு சுவாரசியமான, கிளுகிளுப்பான  விஷயம்...பொதுவா இங்கு ஒருவரை அறிமுகப்படுத்தும் போது பசங்க கைகொடுகறாங்க சில சமயம் தழுவிக்கிறாங்க... ஆனால், பொண்ணுங்க ஒவ்வொரு சமயமும், கன்னத்தோடு கன்னம் வச்சு நச்சுனு ஒரு கிஸ் பண்றாங்க ...[அடடா....] இந்த deal எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...ரெண்டு வாரமா கன்னத்த  கழுவ மனசே வரலனா பார்த்துகூங்களேன்...

சாப்பாடு கொஞ்சம் கொடுமையான விஷயம்...ரெண்டு வாரமா சோறு இல்லாம grilled சிக்கன், பிச்சா,பர்கர்னு காலத்த ஓட்டினேன்...லஞ்சச்கு 4 கோஸ் இலைகளும், 4 துண்டு சின்ன காரட் , ஐஸ் டி யும் கொடுகரானுங்க....அப்போகூட எனக்கு வலிகளா, ஐஸ் டி பிடிக்காம கொஞ்சூண்டு வச்சதுக்கு, ஒருத்தன் fulla குடிங்க ஜீரணத்துக்கு நல்லது சொல்றான்...அடேய் ஒரு முழு ஆட்டையே பார்ட் பார்ட் பிரிச்சி மெய்யற ஆளுடா நான்...யானை பசிக்கு சோள பொரியா...

மற்றபடி ஊர சுத்தி பார்க்கலாம் னா எரிமலைய தவிர வேற ஒன்னும் இல்ல...ஆனா ஒண்ணுங்க, கோடேமலா சென்றுவந்த ஒரே இந்திய குடிமகன் நானாகத் தான் இருப்பேன்னு நினைக்கிறன்...ஒரிஜினல் அத்திப்பட்டிலே தல, 'நான் தனி ஆளு இல்ல, தனி ஆளு இல்ல' ன்னு  சொல்லுவார், ஆனால் அமெரிக்காவின் அத்திப்பட்டிலே இந்த (தரு)தல  'நான் தனி ஆளு' ன்னே சொல்லிட்டு திரிஞ்சேன்...ஸ்டார்ட் பண்ணதுல இருந்து திரும்ப வர வரை ஒரு இந்தியர்களையும் பார்க்கவே இல்ல[ இந்திய பாஸ்போர்ட் இருந்தா கோடேமல் செல்ல  விசா தேவை இல்லைன்னு சொல்லும்போதே நான் உஷார் ஆகி இருக்கனும்] பரவாலே போனதுக்கு பலனா 40 - 50 வெள்ளைக்கார பொண்ணுக கிஸ் கடச்சதுள்ளே... வாழ்க கோடேமலா !!!
This entry was posted on 1:50 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On April 11, 2010 at 2:43 PM , பிரதீப் said...

nice narration! innum photos eduthu porukkalam!

 
On April 11, 2010 at 5:04 PM , குலவுசனப்பிரியன் said...

உங்களுக்கு நல்ல எழுத்து நடை. தொடர்ந்து எழுதுங்கள்.

 
On April 17, 2010 at 7:43 AM , Sathish said...

நன்றி பிரதீப், குலவுசனப்பிரியன்...பிரதீப் தான் என் inspiration. அவர் தான் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துவார்...இன்று உங்களுடைய கமெண்ட் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது....தொடர்ந்து எழுதுகிறேன்...தொடர்ந்து படியுங்கள்.....