•7:52 PM
நம்ம ஊருக்கு வந்தாலே போதும்! நேரம் போறதே தெரியாது...இப்போ தான் வந்த மாதிரி இருக்கு அதுக்குள்ளே நாள் ஓடுது... அமெரிக்காவில என்ன தான் ஆடம்பர வாழ்கையும், பிரம்மாண்டமான வசதி வாய்ப்புகள் இருந்தாலும் நம்ம ஊரோட, நம்ம மக்களோட இருக்குற ஒரு மனநிம்மதி அங்க இல்ல என்பத அமெரிக்க வாழ் இந்தியர்கள் கண்டிப்பாக மறுக்க முடியாத உண்மை.
ஆனாலும் சில நேரத்துல, நம்ம மக்கள் நடந்துக்கிற சில விஷயங்கள் ரொம்ப கஷ்டமா இருக்கு. படிச்சவன், படிக்காதவன் எல்லோருமே சில விஷயங்களில் ஒரே மாதிரி இருப்பது மனசு ஏத்துக்க மாட்டேங்குது..ஏண்டா, US போய்வந்தா இப்படி தான் பேசுவியானு சொல்ற நண்பர்களே, இந்த பதிவு மூலமா நான் பேசறது நான் ரொம்ப நாளா வெறித்தனமா யோசிக்கிற, நடைமுறை படுத்தனும்னு நெனைக்கிற ஒரு விஷயம்.
நம்மில் பலருக்கு "சுயஒழுக்கம்" சற்று மங்கி போய்டுச்சோனு எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்..சுயஒழுக்கம் என்றால் தம் அடிகறதும், தண்ணி அடிக்கறதையும் தவறு என சொல்லி 'குடி' மக்களிடம் அடி,உதை வாங்க நான் தயாரா இல்ல...அடுத்தவனுக்கு தொல்ல இல்லாம நீ என்ன வேணும்னா பண்ணுங்கறது தான் என்னோட கூற்று...தம் அடிச்சு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம புகைய குறிபார்த்து பக்கத்துல நிக்கறவன் மூஞ்சில உடறத பார்த்தா அந்த சிகெரேட்டே அவன் வாயில இருந்து புடுங்கி, திருப்பி நெருப்பு இருக்க பக்கத்த அவன் வாயில் திரும்ப வைக்க வேண்டும் என்று வெறித்தனமா யோசிக்குது மனசு...அதே மாதிரி பொது எடத்துல தண்ணியடிச்சிட்டு விழுந்து கெடகிறவன் பார்த்தாலும், சமயத்துல கோவம் அதிகமா வருது...அது அவர்களோட அறியாமைங்கறதா, இல்ல திமிருன்னு சொல்றதானே தெரில. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுயஒழுக்கத்தை அரசாங்கம் கற்றுக் கொடுக்கணும் நெனைக்காம நாம் ஏன் சில நெறிமுறைகளை பின்பற்றி அதனை வரையறுத்து ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியாதுங்கறது தான் என்னோட கேள்வி. நான் தம் அடிகல, தண்ணி அடிக்கலனு மார் தட்ரவங்க எல்லாம் ஒழுங்கா நடந்துக்கராங்கனு அர்த்தம் பண்ணிக்க கூடாது...இது தப்புன்னு தெரியாமலேயே நெறைய தப்பு நடக்குது..உதாரணதிற்கு, நான் என்னோட தாய்மண்ணே வணக்கம்...( பாகம் 1 ) பதிவுல சொல்லி இருப்பேன்...விமான நிலையத்துல ஒவ்வொரு காருக்கு பின்னாடியும், பெட்டிய தூக்கி வர உதவுற கார்ட் நிக்குது...அங்க வர முக்கால்வாசி பேரு படிச்சவனாவோ அல்லது உலக அனுபவம் உள்ளவனாவோ தான் இருப்பான். ஆனால் அவங்களுக்கும் இது ஒரு தவறான விஷயமாவே தெரிலே... அத கொண்டுபோய் உறிய எடத்துல வைக்கணும்னு ஏன் தோனமாட்டேங்குது? சும்மா அரசாங்கத்தையும் மற்ற இலாக்காகளையும் குறை சொல்வதை விட்டுவிட்டு ஏன் நாம ஒழுங்கா நடந்துக்க கூடாது? சின்ன விஷயங்கள ஆரம்பிக்கலாமே, நாளடைவில அதுவே பல விஷயங்கள திருத்துற ஒரு முதற்படியாக இருக்குமே... ஒன்னுமில்லேங்க சென்னை லே இருந்த நேரத்துலே நான் கவனித்த ஒரு விஷயம், டிராபிக் சிக்னலே நம்ம ஆளுங்க தமாஷா எடுக்கறாங்க....ஒரு நாள் நான் சிக்னலே நிக்கறேன்...எனை கடந்து எத்தன வண்டி போகுது...அதிலும் சில பேரு ஒரு லுக் வேற விடறானுங்க...அடேய் ரெட் சிக்னல் டா...நில்லுங்கப்பா....ஒரு PTC பஸ் பின்னாடி வந்து ஹோர்ன் அடிசசு கெட்ட வார்த்தைலே திட்டறான்..எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வந்துடுச்சு...உண்மைய சொல்லப்போனா என்ன மாதிரி யோசிக்கிறவங்க நெறைய பேர் இருக்கோம்...ஆனா அதற்கான முயற்சிய எங்கே, எப்படி ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சியே நாளா கடத்துறோம்....இன்னும் சில பேர் சொல்ற காரணத்துக்கு எனக்கு, என்ன பதில் சொல்றதுன்னு புரியல...என்னோடநெருங்கிய நண்பன் "பிரதீப்"...ஹைதராபாத்லே இருக்கான்...ரொம்ப நல்ல பையன்..நல்ல திறமைசாலி...[அப்புறம் உனக்கு எப்படி நண்பன்..ஹி ஹி ஹி ] "மச்சி இது பொது பிரச்சனைடா நீ ஒழுங்கா இரு...உன்ன பார்த்து மற்றொருவன் ட்ராபிக் ரூல்ஸ் மதிப்பான் சொன்னா..." போட லூசுப்பயலே ! நான் மட்டும் நின்னா அடிச்சி தூக்கிடுவான்..அப்புறம் எப்படி இன்னொருவன் என்ன பார்த்து நிப்பான்னு" கேக்கற கேள்விக்கு சத்தியமா எனக்கு பதில் தெரிலே...சின்ன சின்ன விஷயத்துல ஆரம்பிக்கிற தப்பு தான் நாளைக்கு பழக்கமாகவே மாறுது. சின்ன சின்ன நல்ல விஷயங்கள கடைபிடிப்போமே....அதை பழகிப்போமே!!! நான் என் நண்பர்களோட நீண்ட நாட்களாக ஒரு பொதுவான விஷயத்தை பேசிக்கொண்டிருகிறேன்...ஒரு நல்ல ஒழுக்கமான சமுதாயம் உருவாக முதலில் தனிமனித ஒழுக்கம் - "சுயஒழுக்கம்" ரொம்ப அவசியம் என்பது என்னோட கருத்து...சுயஒழுக்க கோட்பாடுகள் சிலவற்றை வரையறுத்து, அதை கடைபிடிக்கும் ஒரு குழு ஒன்று ஆரம்பிக்க வேண்டும். அதுல இன்னிக்கு அஞ்சு பேரு, ஆனால் அந்த ஆஞ்சு பேரும் 100% அந்த கோட்பாடுகளை மதிப்பவராக இருக்க வேண்டும்...அவர்கள் இந்த குழுவின் நோக்கங்களை மற்றவர்களுக்கு எடுத்துசொல்லி ஐந்தை, ஐநூறாக, ஐந்தாயிரமாக உயர்த்த முயற்சிக்க வேண்டுமென்பது என்னோட குறிக்கோள்...நான் இதை பற்றி யார்கிட்டே பேசினாலும்...எல்லோரிடமும் ரொம்ப ஆர்வம் இருப்பது சந்தோஷமா இருக்கு...அவங்களுக்குள்ள இருக்க ஆசையும், ஆக்கமும் நல்ல சமுதாயம் வராதா என்ற ஏக்கமும் என்னால் உணர முடிகிறது...சும்மா orkut , Facebook னு வச்சிக்கிட்டு போட்டோ பிடிச்சிபோடவும் கடலை போடவும் நேரத்தை வீணாக்குவதிற்கு பதில் அதே மாதிரி ஒரு community நல்ல பொது விஷயத்திற்கு பயன்படுத்த ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என்பது என்னோட ஆசை..பார்போம் எவ்வளவு சீக்கிரம் அதை நடைமுறை படுத்துகிறேன் என்று ...
மற்றபடி...வழக்கமான செண்டிமெண்ட் காட்சியுடன் என் வீட்டாரிடமும், நண்பர்களிடமும் இருந்து விடை பெற்று..US திரும்பினேன்...ம்ம்ம் இனி அதே மேனேஜர், அதே ப்ராஜெக்ட், வால்மார்ட், இந்தியன் grocessory ன்னு நாள கடத்தனும்..US திரும்பும்போதும் அதே விமானம்தான், அதே வசதிதான் ஆனால் கண்களில் சந்தோஷம் இல்லை கண்ணீர் தான்!!!
2 comments:
US திரும்பும்போதும் அதே விமானம்தான், அதே வசதிதான் ஆனால் கண்களில் சந்தோஷம் இல்லை கண்ணீர் தான்!!!
ஒவ்வொரு தடவையும் .. ம்ம்
Good one..
-/Ag
சத்யா!
சாத்தியமாகும்
சத்தியமா!