Author: Sathish
•10:45 AM
பிரபலமாயிட்டாலே இப்படிதான்...வாசகர்கள், நான் அடிக்கடி பதிவு எழுதணும்னு  ஆசைப் படுகிறார்கள்... நமக்குத்தான் நேரமில்லை...[உனக்கு வர ஒன்னு ரெண்டு கமெண்டுக்கு தேவையா இந்த விளம்பரம்? ஹி ஹி ஹி ]

இங்கே [US] வந்த அம்மா அடுத்த மாதம் தாயகம் திரும்புகிறார்கள்...அதனால, ஷாப்பிங் லே கொஞ்சம் பிஸி...ஒரு நாலஞ்சு வாரம் முன்னாடி, என்னோட தங்கச்சிக்கு ஒரு MP3 பிளேயர் வாங்கி இருந்தேன்...அதுல எதோ கோளாறு...இங்கே online லே வாங்கறது,அதோட return பாலிசி மிகவும் பாராட்டத்தக்கது...வாங்கிய பொருள் சரி இல்லையென்றால், 30 நாட்களுக்குள் திரும்ப கொடுத்துவிடலாம்...இதற்கு காரணம் கூட தேவை இல்லை...ஆனால், இதை நம்ம ஊரு மக்கள் படு மட்டமாக பயன்படுத்துகிறார்கள்...வாங்கி அதனை பத்து பதினைந்து நாள் பயன்படுத்திவிட்டு திரும்ப கொடுத்துவிடுவது அப்பட்டமானது...அதுவும் shortterm லே வரவங்க பெட், தலையணை எல்லாம் வாங்கி பயன்படுத்திவிட்டு return   கொடுத்துடரானுங்க... [ரூம் போட்டு யோசிப்பானுங்களோ?]  சரி, நாம விஷயத்துக்கு வருவோம்.... நான் வாங்கின MP3 பிளேயர்லே சின்ன பிரச்சனை கடைசிவரை ON பண்ணவே முடிலே ...ஹி ஹி ஹி ..return பண்ணுவதற்காக வாங்கின கம்பனிக்கு பேசினதும், அவங்க எல்லாம்  விசாரித்து விட்டு எனக்கு ஓரு 'Packaging ஸ்லிப்' அனுப்பி வைத்தார்கள்... நான் செய்ய வேண்டியதெல்லாம் ஓரு டப்பாலே என்னோட MP3 பிளேயர் போட்டு இந்த ஸ்லிப் அதன் மேல் ஒட்டி போஸ்ட் ஆபீஸ்லே கொடுக்கணும்....எல்லாம் ரெடி பண்ணிட்டு போஸ்ட் ஆபீஸ் கெளம்பலாம்னு வெளியே வந்தா இந்த ஊரு போஸ்ட் women அவங்களுக்கே உறிய ஒரு மினி வேன்லே வந்து இறங்கினாங்க...இந்த ஊர்லேதான் எல்லாம் ஈசியாச்சேனு அவங்ககிட்டயே கொடுத்தா, வாங்கி அத ஸ்கேன் பண்ணி மேட்டர் முடிசிட்டு  போய்டே இருக்காங்க...என்னோட வேலை படு சுலபமா முடிச்சுது...அப்போ எனக்கு நம்ம ஊரு போஸ்ட் Man ஞாபகம் வந்துடுச்சு... 

சார் போஸ்ட்... நான் சின்ன வயசில அதிகமா கேட்டிருக்கேன்...காக்கி கலர் uniform  லே, சைக்கிள் லே பெல் அடிச்சிட்டு வர எங்கே தெரு postman குரல் அது... இப்போ எங்கே போச்சி அந்த குரல்? கடைசியா நான் எப்போ லெட்டர் எழுதினேன்? எனக்கு எப்போ லெட்டர் வந்துச்சு? கணினி மயமாகிவிட்ட காலகட்டத்தால் மின் அஞ்சல் படு பிரபலமாகி விட்டது...பிறந்தநாள், திருமணநாள், தீபாவளி, பொங்கல் என அணைத்து பண்டிகை சுபகாரியங்கள் எல்லாவற்றிற்கும் மின்வாழ்த்துகளும், மின்அஞ்சல்களும் பரிமாறிக்கொள்ளும் காலமாகிவிட்டது... ஒருத்தன் மண்டைய போட்டா கூட மின் அஞ்சல் வழியாதான் ஆறுதல் சொல்றானுங்க....அதுதவிர,   கிராமபுரங்கள் உட்பட வீட்லே  நாலு பேரிருந்தாலும் குறைந்தது 6 செல் போன், [ கேட்டா official , பர்சனல் சொல்றாங்க...]தொலை தொடர்பு நவீனமயமாகிவிடதால் இந்த தபால் உலகம் சற்றே நலிந்துவிட்டதோ?  

கடிதம் எழுதுவது ஒரு கலை. அதுவும் தமிழ்லே எழுதுவது ஒரு அற்புதமான உணர்வு... தொலைவிலிருப்பவர்கலை அருகாமையில் காட்டும் அழகிய கண்ணாடி...நான் சின்னதுலே ஏன் பாட்டி வீட்டுக்கு, நாகப்படினதிளிருந்த என்னோட அக்காவுக்கு  கடிதம் எழுதுவேன், அதுதவிர என்னோட மாமா சிங்கப்பூர்லே இருந்தார்...அப்போ அடிக்கடி நான் கடிதம் போடுவேன்.... அக்காவுக்கு எழுதும்போது இண்டு இடுக்கு ஒரு இடம்விடாம எழுதி கடைசியா மடிக்கற இடத்துலேயும், பக்கத்துக்கு வீடு ஆன்டியெ மிகவும் கேட்டதாய் சொல்லவும்னு எழுதி முடிப்பேன். [அட கர்மம் புடிச்சவனே !! அந்த வீட்லே அங்கிள்லே இல்லையா? னு கிண்டல் பண்றவன பர்த்தி எனக்கு கவலை இல்லை ஹி ஹி ஹி ]

என் பேர் போட்டு வர கடிதங்கள் அனைத்தும் நான் பத்திரப்படுதியுள்ளேன்...அதில் பல Dr  சதீஷ் M.B.B.S. என போட்டு வரும்....இப்போ நினைத்தாலும் எனக்கு சிப்பு சிப்பாவருது...8th Standard வரை நான் நல்லதான் படிச்சேன்...இருந்தாலும் Dr  சதீஷ் னு சொல்றது எனக்கே ஓவரா தான் தெரியும்..[ இப்போ அந்த லெட்டர் போட்டவங்கள தண்டிக்க ஒரே வழி என்னோட 12th மதிப்பெண்களை xerox  எடுத்து அனுபறது தான்....] நான் சொன்னேன் லே என்னோட மாமா ஒருத்தர் சிங்கப்பூர் லே இருந்து அடிக்கடி கடிதம் போடுவார்னு....அந்த கடிதம் வர பேப்பர், ஸ்டாம்ப் எல்லாம் ரொம்ப அழகா இருக்கும் நான் அதை பள்ளிக்கு எடுத்து சென்று பசங்களுக்கெல்லாம் காமிச்சு பெருமை அடிச்சிப்பேன்.... என் friend னு சொல்லிக்கற enemy ஒருத்தன், எனக்கு போட்டியா அவனோட அத்திம்பேர் மயிலாப்பூர் லே இருந்து எழுதிய கடிதத்த கொண்டுவருவான்...ரொம்பவும் வெகுளியான நான் மயிலாப்பூர, சிங்கப்பூர் மாதிரி ஒரு வெளிநாடுனு நெனச்சி பல தடவ ஏமாந்திருக்கேன்...[தூ...ரொம்ப பெருமை...பப்ளிக்கா சொல்ற விஷயமா டா இது...]...

ஆள் வளர, வளர சோம்பேறித்தனமும் கூடவே வளர்ந்து, நாளடைவில் கடிதம் எழுதறது ரொம்பவே குறைந்துவிட்டது...கல்லூரி இரண்டாம் ஆண்டுக்குப்பிறகு தமிழில் எழுதற சந்தர்ப்பமும் ரொம்பவே குறைந்து விட்டது.....என் தலையெழுத்து நல்ல இருக்கோ இல்லையோ...என் கையெழுத்து நல்லாவே இருக்கும்.....ரொம்ப நாள் எழுதாததால என் கையெழுத்து சின்னாபின்னமாகி இருக்கும்னு நெனச்சேன், ஆனால் என் கையெழுத்து அப்படியேதான் இருக்கு...அதை maintain பண்ண  நானும் பல தடவ டைரி எழுதனும்னு ஆரம்பிச்சு, பல டைரியெ ஜனவரி 1 லெ  ஆரம்பிச்சு  பொங்கலுக்குள்ள ஏறக்கட்டி இருக்கேன்...கொஞ்ச நாளா தொடர்வது இந்த மின் திரட்டுக்கள்தான்... இதுவாவது தொடர்ந்தால் சரி....ஆனால், நான் ஒன்றில் மட்டும் படுத் தெளிவாய் இருக்கேன்....கோடானகோடி தமிழ் வாசகர்களுக்காகவும், என் ப்ளாக்ன்  ரசிகர்களுக்ககவும் தொடர்வேன் என் கலைப் பணியை....அள்ளி தர நான் ரெடி ....துள்ளிப் பி[ப]டிக்க நீங்க ரெடியா?  [நோ ...நோ badwords...]


Author: Sathish
•9:09 AM
வழக்கம் போல Sep 8th காலை எழுந்து thatstamil.com அலசுகையில் அதிர்ச்சியான செய்தி...நடிகர் முரளி மாரடைப்பால் இறந்தது...அவருடைய ரசிகன் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு சக மனிதர், நன்கு பரிட்ச்யப்பட்ட நபர் திடீரென இறந்தது மனதை வெகுவே பாதித்தது...

ஒரு சில வாரங்கள் முன்புதான் Coffe with Anu நிகழ்ச்சியில் அவரையும். அவரது மகன் பேட்டியும் பார்த்தேன்...சின்ன வயசு, ஆரோக்யமான உடல் வாகு...அவருக்கா மாரடைப்பு? பூவிலங்கில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, மணிரத்தினத்தின் முதல் படமான, பகல் நிலவில் பலரது உள்ளங்களை கவர்ந்தவர் முரளி...அதன் பிறகு சில தொய்வு அவரது திரை உலக வரலாற்றில் இருப்பினும் மீண்டும் புது வசந்தம் மூலம் திரையுலகில் தனக்கோர் இடத்தைப் பிடித்தார் முரளி.

மைக் என்றால் மோகன் என்பதுபோல் கல்லூரி மாணவன் என்றல் நினைவுக்கு வருவது முரளி தான்....காதல் கதைகளில் சற்றே புதுமையான, வித்யாசமான கதைகள் கொண்ட படங்களை தமிழுக்கு தந்தவர் முரளி... இதயம் படத்தை ரசிக்காத தமிழ் இதயம் இருக்குமா? அவருடைய எதார்த்தமான நடிப்பும், அழகான சிரிப்பும் இன்னும் நம் கண்முன்னே நிற்கிறது...

திரை உலக வாழ்வில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் வாழ்ந்தவர்களில் முரளியும் குறிப்பிடத்தக்கவர். தன் மகன் அறிமுகமாகி அவரது வளர்ச்சியை காண மனுஷன் எவளவு ஆசை பட்டிருப்பார். அதற்குள் இந்த திடீர் சம்பவம் திரை உலகத்தினரை மட்டும் அல்ல பலரது உள்ளங்களையும் கசக்கி இருக்கும்....அவரது குடும்பத்தாருக்கு அவரது இழப்பை தாங்கிக் கொண்டு அதிலிருந்து மீண்டு வரும்  தைரியத்தை தமிழ் நெஞ்சங்கள் தரட்டும்....முரளி அவர்களின் ஆத்மா சாந்தி பெறட்டும்... 
Author: Sathish
•9:12 PM
 சால்ட்...
அம்மா US  வந்த பிறகு நானும் என் மனைவியும் தியேட்டர் சென்று ஆங்கிலப் படம் பார்க்க சந்தர்பம் இல்லை..2 மாதத்திற்குப் பிறகு நாங்கள் பார்த்த (ரசித்த) படம் சால்ட்.... பொதுவாகவே ஏஞ்சலீனா ஜுலி படம் என்றாலே ஆக்க்ஷன் தான்...சால்ட் இல் அது கொஞ்சம் கூட என்றே சொல்லலாம்...முதல் சீன்லே கொரியன் போலிசாரால் இண்டேரோகட் இல் கடுமையாகத் தெரியும் ஏஞ்சலீனா அடுத்த சீன்லே , கணவர் உதவியுடன் விடுதலையாகி வெளியே நடந்துவரும் பொழுது ததும்பி அழ முற்படுகையில் சாதாரண பெண்ணாக தெரிகிறார்...அமெரிக்காவில்  CIA agent ஆக  பணிபுரிவதாய் நகரும் கதையில், விசாரணைக்காக வரும் ரஷ்ய உளவாளி, அமெரிக்கா வரும் ரஷ்ய அதிபரை கொலை செய்யும் பொருட்டு ரஷ்யாவை சேர்ந்த பெண் உளவாளி அமெரிக்காவில் ஊடுருவி இருப்பதாகவும், அது ஏஞ்சலீனா என்றும் கூறுகிறான்...அப்போது சூடு பிடிகிறது கதை...அடிதடி சேஸிங் னு அம்மணி எல்லாத்துலேயும் பின்னி எடுக்கறாங்க...தான் ஒரு டபுள் agent என்ற குற்றச்சாட்டு, இதற்கிடையில் கடத்தப்பட்ட தன் கணவரை காப்பாற்ற எடுக்கும் முயற்சி னு கதை வேகமாக நகருகிறது...ஆங்காங்கே சில twist and turns...

ஏஞ்சலீனா சற்றே வயதாகி தெரிகிறார்...கடைசியாக தியேட்டர் சென்று நான் பார்த்த ஏஞ்சலீனா படம் Wanted .... 2yrs இருக்கும் அந்த படம் பார்த்து...அதுலே அக்கா சூப்பர் figure .. [ வடிவேலுக்கு பிறகு இந்த dialgue சொல்றது நான்தான்...ஹி ஹி ஹி ] இந்த கதபாத்திரதிற்காக  ஏஞ்சலீனா நிஜ உலக CIA agents  உடன் பழகினாராம்...அவர்களுடன் பழகிய அனுபவத்தை பேசுகையில், "அவர்களிடம் எடுத்த குறிப்புகளில் மிக முக்கியமானதாக நான் கருதுவது, தன் வேலைப் பற்றி சொந்த குடும்பத்தாரிடம் கூட  பேச முடியாத அளவு அவர்கள் தனிமைப் பட்டிருகிறார்கள்..அவர்களின் தியாகம் குறிப்பிடப் படவேண்டிய விஷயம்" என்று கூறியுள்ளார்...சால்ட்.. ஆக ஓஹோ னு சொல்லக் கூடிய படமாக இல்லாவிட்டாலும், நன்றாக, விறு விருப்பாகத்  தான் இருக்கிறது...

எந்திரன் ஆடியோ ரிலீஸ்...

தலைவரோட எந்திரன் ஆடியோ ரிலீஸ் function மலேசியாவில் அரங்கேறியதை online லே பார்த்தேன்...பாட்டு அசத்தல்... A .R ரஹ்மான் இசை இளமை ததும்ப ததும்ப இருக்கு...பாட்டில் மட்டும் இல்ல தலைவரோட stills கூடத்தான்...simplela  வந்திருந்தாலும், தலையோட டிரஸ்  சூப்பர் இருந்தது...விவேக் சில எடத்துல மொக்கை போட்டாலும் நல்ல தான் ப்ரோக்ராம் ப்ரெசென்ட் பண்ணார்...ஐஸ்வரிய அழகு...decentaa டிரஸ் பண்ணி இருந்தாங்க...ஒருவருடைய நடை உடை எவள்ளவு முக்கியம் பாருங்க அவங்கள பர்த்தி பேச....ஷங்கர் பக்கத்துல ஒரு அவதாரம் உட்கார்ந்திருத்தது...[ஸ்ரேயா...] உள்ள போடவேண்டியதோட  saree கட்டி வந்திடுச்சு...கருமம்...அத எவன்யா முன்னாடி உட்கார வச்சான்....

கலாநிதிமாறன்...முதல் முறை பார்த்தேன்..எவளவு பெரிய நிறுவனத்தின் தல ....ரொம்ப சின்ன வயசு.....A .R ரஹ்மான் , ஐஷு, ஷங்கர்,வைரமுத்து  எல்லாரும் பேசினாங்க ...டீம் ரொம்ப ஹர்ட்வோர்க் பண்ணி இருக்காங்க...பெரிய ஹிட் என்பதில் சந்தேகமில்லை...

stills , தலையோட hairstyles , டிரஸ் னு செமைய இருந்தது...Trailor பார்த்து அசந்துட்டேன்... சின்ன வயசில இருந்து நான் ரஜினி யோட வெறித்தனமான ரசிகன்...இன்னும் எனக்கு நல்லா நினைவிருக்கு...மனிதன் படம் பார்த்து...கடைசி சீன்லே தல குண்டு தொங்கவிட்டு ஒரு leather டிரஸ் போட்டு வருவார்...அந்த டிரஸ் வேணும்னு [குண்டோட ]அடம் பண்ணி எங்கப்பாவ தெனரடிசிருக்கேன்...பல தடவை socks உள்ள pant போட்டு டியூஷன் சார் கிட்ட  அடி வாங்கி இருக்கேன்...ரெண்டு மூணு டம்ளர் தண்ணியே ஷர்ட் லே ஊத்திகிட்டு கைகளை மேல தூக்கி "ராமன் ஆண்டாலும் ராவண ஆண்டாளும்" பாட்ட பாடி ஆட்டம் போட்டிருக்கேன்...இவ்வளவு பண்ணிட்டு US வந்தஉடன் தல படத்த எப்படி மிஸ் பண்றது? இந்த படத்துக்கு நான், என் மனைவி அம்மா first டே போக பிளான் பண்ணி இருக்கோம்....தலைவரோட படத்துக்கு நான் பக்கத்துக்கு state போக வேண்டியிருக்கு...இருந்தாலும் பரவா இல்லை...தலை படத்த பார்த்துடுவேன்...
Author: Sathish
•10:32 AM
சமீபத்தில் நான் படித்த கல்லூரி பற்றிய செய்தியை கேட்டதும் ஆடிப் போனேன்...உலகின் நம்பர் 1  Chess Player   "Nitin .S ", ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நான் படித்த SSN  பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுத்து அதுல சேர்ந்திருக்கிறாராம். அண்ணா பல்கலை கழகம் போன்ற முன்னணி கல்லூரிகள் இருந்தும், முதல் இடத்தில இருக்கும் (விளையாட்டில் ) ஒரு மாணவன் தனியார் கல்லூரியை தேர்ந்தெடுத்தது, Single Window (Sport Quota )வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த விஷயத்தை கேள்வி பட்டதும், எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது.. என் கல்லூரியின் வளர்ச்சிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் நான் இந்த நேரத்தில் இந்த பதிவின் மூலமாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  

SSN கல்லூரி வாழ்க்கை என் வாழ்வின் வசந்த காலம். முதன்முதல் அங்கு அடிவைத்த நாள் முதல் கடைசியாக கல்லூரி படிப்பை முடித்து வெளிவந்த நாட்கள் அனைத்தும் தேன் துளிகள். குறிப்பாக நான் படித்த கணினித்துறை....என்னுடைய seniors கொஞ்சம் படிப்பாளிகள்; கெடைக்கற நேரத்துல ஒன்னு படிப்பானுங்க இல்ல கடலை...சும்மா வரு வருன்னு தீய தீய வறுத்துத் தள்ளுவானுங்க..பிரச்சனை அது இதுன்னு போகாம silentaa  காலத்த ஓட்டி கெலம்பிட்டாங்க...ஆனா நம்ம  batch பசங்க ஒன்னுனுளையும் பின்னி பெடேலேடுப்பாங்க....படிப்பு, வெளையாட்டு, சண்டை,  culturals மற்றும் கடலை உட்பட (நம்ம division ஆச்சே....)தப்போ ரைட்டோ முப்பது பேரும் சேர்ந்துதான் செய்வோம்.... வாத்திகளும்  சரி,  நாங்க பண்ற அட்டுழியத்தை கண்டிச்சாலும் எங்க batch அவங்களுட favourite தான்...

எங்க டைரக்டர் க்கு நான் ரொம்பவும் செல்லம்..செல்லம் னா அப்படி இப்படி இல்ல, கைலே துப்பாக்கி இருந்தால் சுட்டு தள்ளி இருப்பார்... First semesterle ஆரம்பிச்ச பிரச்சனை..இன்னிக்கும் நான் அவரை எங்கு பார்த்தாலும், ஒரு MN நம்பியார், வீரப்பா, அசோகன் இவங்கள பார்க்கற மாதிரியே பார்ப்பார்...ஆனா அதெல்லாம் பெருசா எடுக்காம, நான் பாட்டுக்கு என்னோட அலப்பறை, ரௌசு, அடிதடின்னு காலத்தை ஓட்டி, டைம் கெடைக்கும் போது அப்பன், ஆத்தா ஆசைக்கு கொஞ்சூண்டு படிக்கவும் செஞ்சேன்..
சாதாரணமாவே ரௌசு அதிகம் பண்ணுவோம்; இதுல மத்தவங்க கவனம் செளுத்துனா கேட்கவா வேண்டும்? சினிமா லே வர கல்லூரி கலாட்டாக்கள் லே முக்கால்வாசி நான் பண்ணிட்டேன்...(ரொம்ப பெருமை...த்து....  ) இன்ஜினியரிங் காலேஜ் என்பதால் எல்லோரும் formals லே  வரும்போது, என்னோட batch லே எல்லாரும் அரசியல்வாதி மாதிரி, வெள்ளை வேட்டி,சட்டை லே போனது, பஸ் டே கலாட்டா, ராகிங் , ஸ்போர்ட்ஸ் டே அடிதடி னு ஒன்னு விடல...

போனமுறை இந்தியா சென்றபோது என் கல்லூரிக்கு சென்று, நான் வழக்கமா போற ரூட் 7  பஸ், கான்டீன், hostel, லைப்ரரி (அங்கே ஏன் நீ போனேன்னு நெனைபீங்க...தடியா ரெண்டு புக் கைலே வச்சா scenaa இருக்கும் னு பேர் கூட பார்க்காம பல தடவ எடுத்திருக்கேன்...ஹி ஹி ஹி ) லேப் எல்லா இடங்களிலும் போய் பார்த்தேன்...என்னோட சகா செந்தில் உடன் வந்திருந்தான்...நான் பண்ண ரௌசு எல்லாத்துலேயும் இவன் பங்கும் இருக்கும்....எவ்வளவு தான் படிச்சாலும், டெஸ்ட் / assignment  எதுவானாலும் சொன்ன தேதிலே கொடுக்காம திட்டு வாங்கி வேற date லே கொடுக்கறதுல பேர் போனவங்க நாங்க...இன்ஜினியரிங் departments மத்தியிலும் சரி எங்க juniors மத்தியிலும் சரி நாங்க ஒரு ஹீரோககளாகவே  வாழ்ந்த காலம் அது.....இனிமையான நினைவுகள், இனிமையான உறவுகள்...தனிமை எனும் வெயிலில்  காயும் போது, நடபு எனும் நிழலின் அருமை தெரிகிறது....மீண்டும் வருமா அந்த காலம்??
Author: Sathish
•10:11 PM
ஆடிக்கு ஒருமுறை ஆவடிக்கு ஒருமுறை சீ....அமாவாசைக்கு ஒருமுறை ப்ளாக் எழுதற உனக்கெல்லாம் ப்ளாக் ஒரு கேடான்னு திட்டாதீங்க ப்ளீஸ்...எங்க ஆபீஸ் இப்பெல்லாம் முன்ன மாதிரி இல்ல...வேலை செஞ்சாதான் சம்பளம் சொல்றாங்க...அதில்லாம சின்னதா ஒரு promotion கொடுத்து Sr ப்ராஜெக்ட் Leader வேற ஆக்கிடாங்க..Promotion வந்ததுல Motion போக கூட டைம் இல்ல....அதான் கொஞ்சம் busy ...

ஆண்பாவம்....ரொம்ப நாளா எழுதனும்னு நெனச்சிருந்த தலைப்பு...சந்தர்ப்பம் கெடைக்கல... இப்போ 10th 12th ரிசல்ட் வந்த சமயத்துல ஆரம்பிச்சா கரெக்டா இருக்கும்னு நினைக்கிறேன்.[துறை ரிசல்ட் பத்தி லாம் பேசுது....] பத்தாவது ரிசல்ட் லே ஜாஸ்மின் னு ஒரு பொண்ணு 495 / 500 [என்ன கொடுமை சார்...என்ன விட சுமார் 300 அதிகமோ ] ரெண்டாவது இடத்துலேயும் மூணு பொண்ணுங்க..493 / 500 .நல்ல வேலை ஒரு பையனும் அதே மார்க் எடுத்து ரெண்டாவது இடத்துல  வந்தான்...ஒவ்வொரு பசங்க வீட்லேயும் இத சொல்லியே ரெண்டு மூணு வாரம் திட்டி இருப்பாங்க... வழக்கம் போல இந்த தடவையும் பொண்ணுங்க percentage பசங்கலவிட அதிகம்....இதற்கு என்ன காரணம்....[சின்னதா ஒரு Flashback ...Tortoise சுருள சுத்துங்கப்பா...] நான் படிச்ச காலத்துல [நீ எங்கே படிச்சே?] கஷ்டப் பட்டது இன்னும் நெனைவுல இருக்கு...எத்தனை மேட்ச், எத்தனை அடிதடி , எத்தனை கலாய்ப்புகல், எத்தனை நைட் study [அதே அதே..ஹி ஹி ஹி] இன்னும்கூட தெளிவா ஞாபகம் இருக்கு...சென்னை சூளைமேடு...அந்த மூணு மாடி வீடு ...என்னோட சகா கிரி....சுருக்கமா கிரிராஜசிம்மன் வீடு. ஒரு இரவது பேரு...டெய்லி நைட் study என்ற பேரில், செஞ்ச கலாட்டா...நைட் ஹோட்டல் மூடர சமயத்துல போய் பரோட்ட சால்நாக்கு சண்டை போட்டு தின்போம்..ஹோட்டல் பேருகூட ஞாபகம் இருக்கு ராமலிங்க விலாஸ்...[இத ஞாபகம் வசிக்க படிப்ப மறந்துடு.]ஹ்ம்ம்..எங்கப்பாவோட வெகுளித்தனத்த நெனச்சா...ஐயோ பாவம்....டாக்டர் ஆகணும்னு first குரூப் சீட்  வாங்கினாங்க....என் மார்க்குக்கு  compounter கூட ஆகா முடிலே... சரி விஷயத்துக்கு வருவோம்.பொண்ணுங்களுக்கு இந்த பிரச்சனைலாம் கெடையாது...வீடு ஸ்கூல்... அப்போ நல்ல மார்க்தானே வரும்...சும்மாவே இந்த சமுதாயம், மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்..இதுல அவங்க தான் நல்ல percentage என்றால், இன்னும் சுத்தம்...பசங்களுக்கு மதிப்பிலாமல் போய்டுச்சு...

படிப்புலே ஆரம்பிச்சு எல்லாத்துலேயும் பசங்களுக்கு அடி மேல அடி...ஒன்னும் இல்ல ஒரு சின்ன விபத்துன்னா கூட கீழ விழுந்த பையன தூக்கிவிட ஆளிருக்காது; ஆனா அங்கு விழுந்த பொண்ண தூக்க பல பேரு வருவாங்க...இந்த காமெடி இந்தியாலே மட்டுமில்ல உலகம் முழுவதும் இதே சீன தான்...இந்த பாதிப்புக்கு ஆளானவனில் நானும் ஒருவன்...போன winter லே நானும் என் மனைவியும் ஸ்கீயிங் போய் இருந்தோம்... New  Hamphsire இல் பனிச்சறுக்கு ரொம்ப பிரபலம்... பனிச்சருக்கின் போது ரெண்டு பேரும் ஒண்ணா தான்  விழுந்தோம்..அதுல நான் கை கால்லாம் ஏடகூடமா முறுக்கிக்கிட்டு விழுந்தேன்...என் பொண்டாட்டி சாதரனமா தான் விழுந்தா... அவளை தூக்க வெள்ளகார பசங்க ரெண்டு மூணு பேர் queue லே நிக்குறானுங்க...அங்கே அம்போன்னு விழுந்த என்னை தூக்க ஒருத்தனையும் காணோம்... சண்டாள பாவிகளானு சிரிசிட்டே திட்டிட்டு தட்டு தடுமாறி எழுந்தேன்...

சரி..இதெல்லாம் சின்ன வயசுல வர துக்கடா பிரச்சனைகள்...இத போய் பெருசு படுத்துற னு நீங்க நெனைக்கலாம்...வளர்ந்து பெரியவங்களான பிறகு, சின்ன சின்ன ஆசைகள்னு காதலிக்கும் போதும், காதலித்த பிறகும் [கல்யானத்த தாங்க சொன்னேன்....என்  பொண்டாட்டி இத படிக்க கூடாதுடா சாமி...] ஆரம்பிச்சு...யம்மாடியோவ் முடிலேடா யப்பா... அவங்க டிரஸ்க்கு மாட்சிங்கா நாம டிரஸ் பண்ணனும், கை பிடிச்சிட்டே நடக்கணும், அவங்க பக்கத்துல மட்டும் தான் உட்காரனும், phone பண்ணா ரெண்டு ரிங்க்லே எடுக்கணும், ரொம்ப நேரம் பேசணும் இத மாதிரி நெறைய விஷயங்கள்...இதுல ஏதாவது ஒன்ன மறந்தா...அட முகம் சுளிசிட்டு செஞ்சாலும் போச்சு...ஒளி மயமான எதிர்காலம் தான் அவனுக்கு...லேடீஸ்...ப்ளீஸ் தப்பா எடுக்காதீங்க....உங்கள குறை சொல்வது என் நோக்கமல்ல....ஜஸ்ட் மனசுல படரத சொல்றேன் அவ்வளவுதான்....இத தைரியமா சொன்னா male domination சொல்றாங்க...என்ன செய்ய?

அந்த காலத்துல, பெண்கள கொஞ்சம் பூட்டி வச்சி கொஞ்சம் அடிமைதனமோட நடத்தினதென்னவோ உண்மைதான்...ஆனால் இன்றைய தேதிக்கு அது காணாம போச்சு..நல்ல விஷயம்... வரவேற்கத்தக்க விஷயம்...ஆனால் இன்னமும் பெண்ணடிமை, ஆண் ஆதிக்கம்னு சொல்லிட்டு திரிஞ்சா அத கண்டிப்பா ஒத்துக்க முடியாதுங்கோவ் ....."மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் " என்று பாடிய பாரதி இன்றிருந்தால், "Man கள் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் " என்றே பாடியிருப்பார்.....சரி சரி ஓவரா பேசிட்டேன்...என் பொண்டாட்டி டூ டைம்ஸ் குரல் கொடுத்துட்டா நான் வாறேன்....



Author: Sathish
•9:47 PM
 சனியன்...சனியன்..தூ..கர்மம்...சீ..உஹ்வே..இதுக்கு மேல விமர்சனம் தேவையா?
Author: Sathish
•9:46 AM
Town House என்று சொல்லப் படும் அந்த மூன்றடுக்கு மாடியில் இருந்த Garage கதவு, சத்யம் தியேட்டர் திரை மாதிரி மெல்ல உயர, உள்ளிருந்து பளிச்சென்று ஒரு கருப்பு கார் சீறிக்  கொண்டு வெளிப்பட்டது..."பார்த்து...பொறுமையே கெடையாது..." செல்லமாய் ஒரு அதட்டு அதட்டும் மனைவியை கண்ணாடி வழியே பார்த்தான் பிரஷாந்த். கொஞ்சம் குண்டா இருந்தாலும் சுசி sexy தான் என நினைத்தபடி வழக்கம் போல சீட்ல, கார் டாஷ்போர்ட்ல garage ரிமோட் தேடி சலிப்பாய் கீழிறங்கி manual லாக் செய்து திரும்ப கார்ல ஏறினான். சாயந்திரம் வேலை முடிச்சு வந்ததும் ரிமோட்ஐ தேடி பிடிச்சி ஒழுங்கா டாஷ்போர்ட்ல வைக்கணும்னு சொல்லிக் கொண்டான்...மீண்டும் சுசியைப பார்த்து போய்வரட்டுமா என்று தலை அசைத்து வீட்டின் முன்னே இருக்கும் லெட்டர் பாக்ஸ் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்த்த வீடு நர்மதா "குட் மார்னிங்..ஆபீஸ்  கெளம்பியாச்சு போல...எங்களுக்கு இன்னிக்கு கல்யாண நாள்..அதான் சுசிய பார்த்து ஸ்வீட் கொடுக்கலாம்னு.." சொல்லிக்கொண்டே போனாள்....இவள் ஒரு மின்னல்..அவளே கேள்வி கேட்டு அவளே பதில் சொல்லி...கடைசி வரை என்ன பேசவே விடல என நினைத்தவாறு மீண்டும் புறப்பட தயாராக "Wow ..Nice கார்" ன்னு மூணு ஸ்கூல் பொண்ணுங்க கமெண்ட்....தேங்க்ஸ் கூறிக்கொண்டே காரை ரோட்டினுள் இறக்கினான் பிரஷாந்த்...

அமெரிக்காவில்  ஒரு பிரபல  தனியார் அலுவலகத்தின் மேனேஜர் பிரஷாந்த். அவனது ஆபீஸ்  வீட்டிலிருந்து 35 மைல்...சுமார் 40 நிமிடமாகும்...போக 40 வர  40 ..இந்த 80  நிமிடங்கள் தான் பிரஷாந்த்தின்  தனிமையான் நேரம்...பல முக்கிய முடிவுகள், யோசனைகள் இளையராஜாவின் இசையில் இந்த நேரத்தில் உதிக்கும்...தனக்குதானே பேசிக்கொள்வான்; சிரித்துக்கொள்வான்...

"Wow ..Nice கார்" மீண்டும் ரீங்காரமிட்டது பிரஷாந்த்தின் மனதில்... சந்தோஷமாயிருந்தது.  "29,000  டாலர் செலவு பண்ணி புது கார் அவசியமா? இந்த வருடம் உங்களுடைய செலவ நெனச்சி, நீங்களே முடிவு பண்ணிகோங்க..." என்று சுசி சொல்லியும், புத்தம் புது கார் எடுத்தான்... "கார், வீடு, பொண்டாட்டி இதெல்லாம் ஒரு தடவ அமையற விஷயம் டா... நல்லதா அமஞ்சாதான் மனசு நெறைவா இருக்கும்....ம்ம்ஹம்ம்ம் பொண்டாட்டி விஷயத்துல ரொம்ப யோசிக்காம விட்டுட்டேன்... அட்லீஸ்ட் கார் விஷயத்துளையாவது கொஞ்சம் கவனமா இருக்கேன்" என்று கிண்டல் செய்யும்போது அவளின் செல்ல கோவத்தை மீண்டும் நினைத்து தனக்குதானே சிரித்துக் கொண்டான்...வழக்கமாக தான் நிறுத்தும் "STAR BUCKS" கடையின் முன்னிறுத்தி... ஒரு "Caffe Latte"  வாங்கிக்கொண்டு மீண்டும் காரை விரட்டினான்... அடுத்த சிந்தனை அவன் நினைவை  தட்டியது...  இன்று ஒரு முக்கியமான நாள்... புது contract விஷயமாக ஜெர்மனி லிருந்து வரும் கஸ்டமர்களுக்கு முக்கியமான presentation .... நான்கைந்து மாதங்களாக இதற்கான வேலைதான் ஓடியது... இந்த contract கெடச்சுட்டா 2 வருடம் ஒரு பிரச்சனையுமில்லை... வேலை சுமுகமாக போகும்...." என் ப்ளூ file ..." அதில்லல்லவா அனைத்தும் இருக்கிறது...எடுத்து வைத்தேனா? திடீர் கேள்வி பிரஷாந்தின் மனதில்... தான் highwayல் இருப்பதை சற்றும் யோசிக்காமல் கார் பெல்ட் கழட்டி பின்சீட்டில் இருக்கும் தன் லேப்டாப் பேகை  இழுக்க முற்படும் அதே சமயம், கார் சற்றே நிலைதடுமாறியது...பிரஷாந்த் சுதாரித்துக் கொள்ளுமுன், நிலைதடுமாறி ஓடிய கார், பலத்த சத்தத்துடன் அருகே சென்றுகொண்டிருந்த பெரிய truck ல் மோதி தூக்கி எறியப்பட்டது ...ஆ....என்று அலறினான் பிரஷாந்த்....

"என்னாச்சு ...என்னாச்சுங்க.." சுசியின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் பிரஷாந்த்... வேர்த்துக் கொட்டியிருந்தது .....இன்னும் அதிர்ச்சியிலிருந்து அவன் மீளவில்லை... "எப்போ பார்த்தாலும் அடிதடி, thrillerனு படம் பார்த்தா இப்படிதான் கெட்ட கெட்ட கனவு வரும்...தண்ணி குடிச்சிட்டு படுங்க..." கொஞ்சம் எரிச்சலாய் சொன்னாள் சுசி.. மணி பார்த்தான் பிரஷாந்த் 2 : 20 ...ச்சே என்ன பயங்கரமான கனவு...நாளைய மீட்டிங் நினைத்துக்கொண்டே படுத்திருப்பேன்.. அதான் இப்படி... இன்னமும் தனக்கு வேர்த்து கொட்டுவதையும், முச்சு வாங்குவதையும்  நினைத்துக்கொண்டே சற்றே கண் அசர்ந்தான் பிரஷாந்த்..

பிரஷாந்த் Tie கட்டிகொண்டே, கட்டிலில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் சுசி அருகே சென்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.."என்ன! சீக்கிரம் கிளம்பியாச்சு...." நெளிந்துக்கொண்டே எழுந்த மனைவியை ரசித்தான் ... "முக்கியமான மீட்டிங் இன்னிக்கு அதான்.. Evening லேட் ஆகலாம்..பயப்படாதே" சொல்லிக்கொண்டே கிளம்பினான்.....பிரஷாந்த்.

Garage கதவு, சத்யம் தியேட்டர் திரை மாதிரி மெல்ல உயர, உள்ளிருந்து பளிச்சென்று கருப்பு கார் சீறிக்  கொண்டு வெளிப்பட்டது..."பார்த்து...பொறுமையே கெடையாது..." செல்லமாய் அதட்டும் மனைவியை கண்ணாடி வழியே பார்த்தான் பிரஷாந்த். கொஞ்சம் குண்டா இருந்தாலும் சுசி sexy தான் என நினைத்தபடி வழக்கம் போல சீட்ல, கார் டஷ்போர்ட்ல garage ரிமோட் தேடி, சலிப்பாய் கீழிறங்கி manual லாக் செய்து திரும்ப கார்லே  ஏறினான். சாயந்திரம் வேலை முடிச்சு வந்ததும் ரிமோட்ஐ தேடி பிடிச்சி ஒழுங்கா டஷ்போர்ட்ல வைக்கணும்னு சொல்லிக் கொண்டான்...மீண்டும் சுசியைப பார்த்து போய்வரட்டுமா என்று தலை அசைத்து வீட்டின் முன்னே இருக்கும் லெட்டர் பாக்ஸ் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போது, எதிர்த்த வீடு நர்மதா "குட் மார்னிங்..ஆபீஸ்  கெளம்பியாச்சு போல...எங்களுக்கு இன்னிக்கு கல்யாண நாள்..அதான் சுசிய பார்த்து ஸ்வீட் கொடுக்கலாம்னு.." சொல்லிக்கொண்டே போனாள்....பிரஷாந்தின் கண்களில் பயம்...உடலெங்கும் நடுக்கம்...