•10:11 PM
ஆடிக்கு ஒருமுறை ஆவடிக்கு ஒருமுறை சீ....அமாவாசைக்கு ஒருமுறை ப்ளாக் எழுதற உனக்கெல்லாம் ப்ளாக் ஒரு கேடான்னு திட்டாதீங்க ப்ளீஸ்...எங்க ஆபீஸ் இப்பெல்லாம் முன்ன மாதிரி இல்ல...வேலை செஞ்சாதான் சம்பளம் சொல்றாங்க...அதில்லாம சின்னதா ஒரு promotion கொடுத்து Sr ப்ராஜெக்ட் Leader வேற ஆக்கிடாங்க..Promotion வந்ததுல Motion போக கூட டைம் இல்ல....அதான் கொஞ்சம் busy ...
ஆண்பாவம்....ரொம்ப நாளா எழுதனும்னு நெனச்சிருந்த தலைப்பு...சந்தர்ப்பம் கெடைக்கல... இப்போ 10th 12th ரிசல்ட் வந்த சமயத்துல ஆரம்பிச்சா கரெக்டா இருக்கும்னு நினைக்கிறேன்.[துறை ரிசல்ட் பத்தி லாம் பேசுது....] பத்தாவது ரிசல்ட் லே ஜாஸ்மின் னு ஒரு பொண்ணு 495 / 500 [என்ன கொடுமை சார்...என்ன விட சுமார் 300 அதிகமோ ] ரெண்டாவது இடத்துலேயும் மூணு பொண்ணுங்க..493 / 500 .நல்ல வேலை ஒரு பையனும் அதே மார்க் எடுத்து ரெண்டாவது இடத்துல வந்தான்...ஒவ்வொரு பசங்க வீட்லேயும் இத சொல்லியே ரெண்டு மூணு வாரம் திட்டி இருப்பாங்க... வழக்கம் போல இந்த தடவையும் பொண்ணுங்க percentage பசங்கலவிட அதிகம்....இதற்கு என்ன காரணம்....[சின்னதா ஒரு Flashback ...Tortoise சுருள சுத்துங்கப்பா...] நான் படிச்ச காலத்துல [நீ எங்கே படிச்சே?] கஷ்டப் பட்டது இன்னும் நெனைவுல இருக்கு...எத்தனை மேட்ச், எத்தனை அடிதடி , எத்தனை கலாய்ப்புகல், எத்தனை நைட் study [அதே அதே..ஹி ஹி ஹி] இன்னும்கூட தெளிவா ஞாபகம் இருக்கு...சென்னை சூளைமேடு...அந்த மூணு மாடி வீடு ...என்னோட சகா கிரி....சுருக்கமா கிரிராஜசிம்மன் வீடு. ஒரு இரவது பேரு...டெய்லி நைட் study என்ற பேரில், செஞ்ச கலாட்டா...நைட் ஹோட்டல் மூடர சமயத்துல போய் பரோட்ட சால்நாக்கு சண்டை போட்டு தின்போம்..ஹோட்டல் பேருகூட ஞாபகம் இருக்கு ராமலிங்க விலாஸ்...[இத ஞாபகம் வசிக்க படிப்ப மறந்துடு.]ஹ்ம்ம்..எங்கப்பாவோட வெகுளித்தனத்த நெனச்சா...ஐயோ பாவம்....டாக்டர் ஆகணும்னு first குரூப் சீட் வாங்கினாங்க....என் மார்க்குக்கு compounter கூட ஆகா முடிலே... சரி விஷயத்துக்கு வருவோம்.பொண்ணுங்களுக்கு இந்த பிரச்சனைலாம் கெடையாது...வீடு ஸ்கூல்... அப்போ நல்ல மார்க்தானே வரும்...சும்மாவே இந்த சமுதாயம், மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்..இதுல அவங்க தான் நல்ல percentage என்றால், இன்னும் சுத்தம்...பசங்களுக்கு மதிப்பிலாமல் போய்டுச்சு...
படிப்புலே ஆரம்பிச்சு எல்லாத்துலேயும் பசங்களுக்கு அடி மேல அடி...ஒன்னும் இல்ல ஒரு சின்ன விபத்துன்னா கூட கீழ விழுந்த பையன தூக்கிவிட ஆளிருக்காது; ஆனா அங்கு விழுந்த பொண்ண தூக்க பல பேரு வருவாங்க...இந்த காமெடி இந்தியாலே மட்டுமில்ல உலகம் முழுவதும் இதே சீன தான்...இந்த பாதிப்புக்கு ஆளானவனில் நானும் ஒருவன்...போன winter லே நானும் என் மனைவியும் ஸ்கீயிங் போய் இருந்தோம்... New Hamphsire இல் பனிச்சறுக்கு ரொம்ப பிரபலம்... பனிச்சருக்கின் போது ரெண்டு பேரும் ஒண்ணா தான் விழுந்தோம்..அதுல நான் கை கால்லாம் ஏடகூடமா முறுக்கிக்கிட்டு விழுந்தேன்...என் பொண்டாட்டி சாதரனமா தான் விழுந்தா... அவளை தூக்க வெள்ளகார பசங்க ரெண்டு மூணு பேர் queue லே நிக்குறானுங்க...அங்கே அம்போன்னு விழுந்த என்னை தூக்க ஒருத்தனையும் காணோம்... சண்டாள பாவிகளானு சிரிசிட்டே திட்டிட்டு தட்டு தடுமாறி எழுந்தேன்...
சரி..இதெல்லாம் சின்ன வயசுல வர துக்கடா பிரச்சனைகள்...இத போய் பெருசு படுத்துற னு நீங்க நெனைக்கலாம்...வளர்ந்து பெரியவங்களான பிறகு, சின்ன சின்ன ஆசைகள்னு காதலிக்கும் போதும், காதலித்த பிறகும் [கல்யானத்த தாங்க சொன்னேன்....என் பொண்டாட்டி இத படிக்க கூடாதுடா சாமி...] ஆரம்பிச்சு...யம்மாடியோவ் முடிலேடா யப்பா... அவங்க டிரஸ்க்கு மாட்சிங்கா நாம டிரஸ் பண்ணனும், கை பிடிச்சிட்டே நடக்கணும், அவங்க பக்கத்துல மட்டும் தான் உட்காரனும், phone பண்ணா ரெண்டு ரிங்க்லே எடுக்கணும், ரொம்ப நேரம் பேசணும் இத மாதிரி நெறைய விஷயங்கள்...இதுல ஏதாவது ஒன்ன மறந்தா...அட முகம் சுளிசிட்டு செஞ்சாலும் போச்சு...ஒளி மயமான எதிர்காலம் தான் அவனுக்கு...லேடீஸ்...ப்ளீஸ் தப்பா எடுக்காதீங்க....உங்கள குறை சொல்வது என் நோக்கமல்ல....ஜஸ்ட் மனசுல படரத சொல்றேன் அவ்வளவுதான்....இத தைரியமா சொன்னா male domination சொல்றாங்க...என்ன செய்ய?
அந்த காலத்துல, பெண்கள கொஞ்சம் பூட்டி வச்சி கொஞ்சம் அடிமைதனமோட நடத்தினதென்னவோ உண்மைதான்...ஆனால் இன்றைய தேதிக்கு அது காணாம போச்சு..நல்ல விஷயம்... வரவேற்கத்தக்க விஷயம்...ஆனால் இன்னமும் பெண்ணடிமை, ஆண் ஆதிக்கம்னு சொல்லிட்டு திரிஞ்சா அத கண்டிப்பா ஒத்துக்க முடியாதுங்கோவ் ....."மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் " என்று பாடிய பாரதி இன்றிருந்தால், "Man கள் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் " என்றே பாடியிருப்பார்.....சரி சரி ஓவரா பேசிட்டேன்...என் பொண்டாட்டி டூ டைம்ஸ் குரல் கொடுத்துட்டா நான் வாறேன்....
0 comments: