•10:32 AM
சமீபத்தில் நான் படித்த கல்லூரி பற்றிய செய்தியை கேட்டதும் ஆடிப் போனேன்...உலகின் நம்பர் 1 Chess Player "Nitin .S ", ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் நான் படித்த SSN பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுத்து அதுல சேர்ந்திருக்கிறாராம். அண்ணா பல்கலை கழகம் போன்ற முன்னணி கல்லூரிகள் இருந்தும், முதல் இடத்தில இருக்கும் (விளையாட்டில் ) ஒரு மாணவன் தனியார் கல்லூரியை தேர்ந்தெடுத்தது, Single Window (Sport Quota )வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த விஷயத்தை கேள்வி பட்டதும், எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது.. என் கல்லூரியின் வளர்ச்சிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் நான் இந்த நேரத்தில் இந்த பதிவின் மூலமாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
SSN கல்லூரி வாழ்க்கை என் வாழ்வின் வசந்த காலம். முதன்முதல் அங்கு அடிவைத்த நாள் முதல் கடைசியாக கல்லூரி படிப்பை முடித்து வெளிவந்த நாட்கள் அனைத்தும் தேன் துளிகள். குறிப்பாக நான் படித்த கணினித்துறை....என்னுடைய seniors கொஞ்சம் படிப்பாளிகள்; கெடைக்கற நேரத்துல ஒன்னு படிப்பானுங்க இல்ல கடலை...சும்மா வரு வருன்னு தீய தீய வறுத்துத் தள்ளுவானுங்க..பிரச்சனை அது இதுன்னு போகாம silentaa காலத்த ஓட்டி கெலம்பிட்டாங்க...ஆனா நம்ம batch பசங்க ஒன்னுனுளையும் பின்னி பெடேலேடுப்பாங்க....படிப்பு, வெளையாட்டு, சண்டை, culturals மற்றும் கடலை உட்பட (நம்ம division ஆச்சே....)தப்போ ரைட்டோ முப்பது பேரும் சேர்ந்துதான் செய்வோம்.... வாத்திகளும் சரி, நாங்க பண்ற அட்டுழியத்தை கண்டிச்சாலும் எங்க batch அவங்களுட favourite தான்...
எங்க டைரக்டர் க்கு நான் ரொம்பவும் செல்லம்..செல்லம் னா அப்படி இப்படி இல்ல, கைலே துப்பாக்கி இருந்தால் சுட்டு தள்ளி இருப்பார்... First semesterle ஆரம்பிச்ச பிரச்சனை..இன்னிக்கும் நான் அவரை எங்கு பார்த்தாலும், ஒரு MN நம்பியார், வீரப்பா, அசோகன் இவங்கள பார்க்கற மாதிரியே பார்ப்பார்...ஆனா அதெல்லாம் பெருசா எடுக்காம, நான் பாட்டுக்கு என்னோட அலப்பறை, ரௌசு, அடிதடின்னு காலத்தை ஓட்டி, டைம் கெடைக்கும் போது அப்பன், ஆத்தா ஆசைக்கு கொஞ்சூண்டு படிக்கவும் செஞ்சேன்..
சாதாரணமாவே ரௌசு அதிகம் பண்ணுவோம்; இதுல மத்தவங்க கவனம் செளுத்துனா கேட்கவா வேண்டும்? சினிமா லே வர கல்லூரி கலாட்டாக்கள் லே முக்கால்வாசி நான் பண்ணிட்டேன்...(ரொம்ப பெருமை...த்து.... ) இன்ஜினியரிங் காலேஜ் என்பதால் எல்லோரும் formals லே வரும்போது, என்னோட batch லே எல்லாரும் அரசியல்வாதி மாதிரி, வெள்ளை வேட்டி,சட்டை லே போனது, பஸ் டே கலாட்டா, ராகிங் , ஸ்போர்ட்ஸ் டே அடிதடி னு ஒன்னு விடல...

போனமுறை இந்தியா சென்றபோது என் கல்லூரிக்கு சென்று, நான் வழக்கமா போற ரூட் 7 பஸ், கான்டீன், hostel, லைப்ரரி (அங்கே ஏன் நீ போனேன்னு நெனைபீங்க...தடியா ரெண்டு புக் கைலே வச்சா scenaa இருக்கும் னு பேர் கூட பார்க்காம பல தடவ எடுத்திருக்கேன்...ஹி ஹி ஹி ) லேப் எல்லா இடங்களிலும் போய் பார்த்தேன்...என்னோட சகா செந்தில் உடன் வந்திருந்தான்...நான் பண்ண ரௌசு எல்லாத்துலேயும் இவன் பங்கும் இருக்கும்....எவ்வளவு தான் படிச்சாலும், டெஸ்ட் / assignment எதுவானாலும் சொன்ன தேதிலே கொடுக்காம திட்டு வாங்கி வேற date லே கொடுக்கறதுல பேர் போனவங்க நாங்க...இன்ஜினியரிங் departments மத்தியிலும் சரி எங்க juniors மத்தியிலும் சரி நாங்க ஒரு ஹீரோககளாகவே வாழ்ந்த காலம் அது.....இனிமையான நினைவுகள், இனிமையான உறவுகள்...தனிமை எனும் வெயிலில் காயும் போது, நடபு எனும் நிழலின் அருமை தெரிகிறது....மீண்டும் வருமா அந்த காலம்??
0 comments: