•2:18 PM
ரொம்ப நாளாவே குறும்படம் மோகம் அதிகமா இருக்கு...நெறைய படம் பார்க்கிறேன்; நல்ல ரசிகனாவும் இருக்கிறேன்...நமக்குதான் ஒரு விஷயம் ரொம்ப பிடிச்சா, நாம ஏன் ட்ரை பண்ணக் கூடாது ன்னு தோணுமே...அதே யோசனையா திரிஞ்சதனால என்னோவோ....அப்பப்போ ஏன் மேல கௌதம் மேனன், முருகதாஸ், செல்வராகவன் ன்னு வித விதமா இயக்குநர்கள ஏவி விட்ட மாதிரி feelings வேற...அந்த ஒரே காரணத்தால இந்த ட்ரை...
ஒரு கணம்...
காட்சி 1
ஒரு கணம்...
காட்சி 1
மொட்டை
மாடி ஆபீஸ் கான்டீன்-இல் உள்ளே நுழைய முற்படுகிறான் சாம். மேலே பரந்த புறாவின் எச்சம் அவன் மேல் விழ இருக்கும் தருவாயில், லாவகமாக தப்பித்து,
புறாவை நோக்கி "ஹ்ம்ம்ம்... எனக்கேவா" என்று சொல்ல, கான்டீன் உள்ளிருந்து
காப்பியுடன் வெளிவரும் பையனுடன் மோதி கொஞ்சம் காபி இவன் மேல்
படுகிறது....
சாம்: டே....ம்ச்ஹ்ஹ என்று முகம் சுளிகிறான்...
பயம்கலந்த
முகத்துடன் பையன் "சாரி நா.." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
கான்டீன் முதலாளி, "அறிவுகெட்டவனே கண்ண எங்கேடா வச்சிருக்க" னு தலையில்
போட, பையன் மீதமிருந்த காபியையும் சாம் மேல் கொட்டுகிறான்...
எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி...கேமரா
Freeze ...சாம் மேலே பார்க்க புறா மீண்டும் பறக்றது...கேமரா
Freeze....அப்பொழுது தோழிகளுடன் நின்று கொண்டிருக்கும் நித்யா " கல கல"
வென சிரிக்கிறாள்...கேமரா Freeze....
Background
voice --- "இப்படி தாங்க...எந்த நேரத்துல யாருக்கு என்ன நடக்கும் என்பது,
யாராலும் யூகிக்க முடியாது. தற்ச்செயலா நடக்கிற இந்த சம்பவங்கள் சில
நேரத்துல காமெடி பீஸ் சில நேரத்துல tragedy பீஸ்...
காட்சி 2
Conference ரூம் .Client மீட்டிங்...
APM :I like to introduce subbarao. our new employee. He good in IT. Scored good marks in BE IT AP University.
Sam : துரை இங்கிலீஷ் லே பேசறாரு டோய்... ( நக்கலடிக்க...)
PM (சுப்பாராவை பார்த்து...மனவாட?
SR : ஆங் சார்.. குண்டூர்..
அசட்டு சிரிப்புடன்
PM : welcome டு our டீம். coming to the point..புதுசா வந்த இந்த requirement நமக்கு கொஞ்சம் தலைவலி...இம்பக்ட் அனலிசிஸ் முடிச்சு "We need to respond the client today"...
ஆபீஸ் மாடி.
சாம் நண்பன் : டே..எவ்வளவு நாளாடா உனக்கு அவள தெரியும்...அதுக்குள்ள இந்த முடிவுல இருக்க?.
சாம்: கொஞ்ச நாள் பார்த்ததே அவ கூட ரொம்ப நாள் வாழ்ந்த மாதிரி இருக்கு மாமு..
சாம் நண்பன் : அடடடா...இவன் அளப் பர தாங்க முடியல da ...
சாம்: முடிவு பண்ணிட்டேன் மச்சி...நாளைக்கு அவள நான் propose பண்ணத்தான் போறேன்...
சாம் நண்பன் : ரொம்ப வேகமா போரேட...கொஞ்சம் யோசிச்சிகோ ...அவ்வளவுதான் சொல்லிட்டேன்...
சாம்: பழசா இருந்தாலும் திரும்பவும் சொல்றேன்.. ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சே மட்டும் இல்ல யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன்...[background லே 'முத்தமிழ்..நு போக்கிரி மியூசிக் லே சாம் slow motion
சீரியசான மீட்டிங் நடுவே, சாம் அருகிலிருக்கும் தன நண்பனிடம்....
சாம்: டேய்...யாருடா அவ..பெக பெக ன்னு சிரிச்சு...அவமானமா போச்சு டா...
நண்பன்: விடு மச்சி..அவமானப் படுவது நமக்கு புதுசா? [சாம் முறைப்பதை சுதாரித்துக் கொண்டு....] சரி...சரி...அவ third floor லே இருக்க BPO company லே வேலை செய்யறான்னு மட்டும் தெரியும்...
PM : என்ன சாம்? உங்க ரெண்டு பேர் குள்ளேயே பேசினா எப்படி? What is your opinion on this?
Sam: hmmm...Well!!! naan enna nenaikirenaa? "பெட்ரமாஸ் lighte தான் வேணுமா? இந்த தீப்பந்தம் லா வேலைக்காகதா?... PM முகத்தில் அதிர்ச்சி...கேமரா
Freeze ...
காட்சி 3
ஆபீஸ் லிப்ட்..
ஆபீஸ் லிப்ட்..
சாம்: என்னடா எத்னிக் டே அது இது ன்னு சொல்லி..வேட்டி வெங்காயம் கட்ட சொல்லறீங்க...இடுப்புலே நிக்க மாட்டேங்குது..கையில்ருக்கும் பேக்கை நண்பனிடம் கொடுத்து..வேட்டியை சரி செய்ய ஷர்ட் தூக்கி அட்ஜஸ்ட் செய்கிறான். லிப்ட் மூன்றாம் மாடியில் நிற்க...நித்யா, அரைகுறை ஆடையில் இருக்கும் சாம் ஐ பார்த்து மீண்டும் சிரிக்கிறாள்...
சாம், நித்யா தற்செயலான சந்திப்பு ஆங்காங்கே [லிப்ட், பார்கிங் lot , ஆபீஸ் தெரு ] தொடர்கிறது...இருவரும் கண்களால் பேசிக் கொள்கின்றனர்...background மியூசிக் லே கட் shots
காட்சி 4
ஆபீஸ் மாடி.
சாம் நண்பன் : டே..எவ்வளவு நாளாடா உனக்கு அவள தெரியும்...அதுக்குள்ள இந்த முடிவுல இருக்க?.
சாம்: கொஞ்ச நாள் பார்த்ததே அவ கூட ரொம்ப நாள் வாழ்ந்த மாதிரி இருக்கு மாமு..
சாம் நண்பன் : அடடடா...இவன் அளப் பர தாங்க முடியல da ...
சாம்: முடிவு பண்ணிட்டேன் மச்சி...நாளைக்கு அவள நான் propose பண்ணத்தான் போறேன்...
சாம் நண்பன் : ரொம்ப வேகமா போரேட...கொஞ்சம் யோசிச்சிகோ ...அவ்வளவுதான் சொல்லிட்டேன்...
சாம்: பழசா இருந்தாலும் திரும்பவும் சொல்றேன்.. ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்சே மட்டும் இல்ல யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன்...[background லே 'முத்தமிழ்..நு போக்கிரி மியூசிக் லே சாம் slow motion
லே நடந்து போறான்...]
காட்சி 5
அழகிய மாலை நேரம்..சாம் பார்கிங் lot லே தன் பைக் மீது சாய்ந்து நின்று கொண்டிருக்கிறான். அப்பொழுது தன தோழியுடன் நித்யா வருகிறாள்..
சாம்: ஹாய்..
நித்யா : ஹாய்..[ சிரித்துக் கொண்டே அவனை கடந்து செல்கிறாள்..
சாம்: ஹே ஒரு நிமிஷம் . [நித்யா நிற்கிறாள்] ..I am சாம் ..
நித்யா: சாம்?
சாம் நண்பன் அவர்களை கடந்தவாறே..டே சற்குணம்...பேரப் பாரு சருகுனோம் வழுகுனோம் நு...[கிண்டலாக சொல்லிக்கொண்டே செல்கிறான்..]:
நித்யா மீண்டும் சிரித்தவாறே.... சாரி. சொல்லுங்க...
சாம்: உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்..பக்கம்தானே பெசன்ட் நகர் பீச்..கொஞ்சம் பேசலாமா?
நித்யா: ரொம்ப தான் தைரியம் உங்களுக்கு...இப்போதான் பேரை சொன்னிங்க கையோட பீச்க்கு வா சொல்றீங்க...
சாம்: உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்..பக்கம்தானே பெசன்ட் நகர் பீச்..கொஞ்சம் பேசலாமா?
நித்யா: ரொம்ப தான் தைரியம் உங்களுக்கு...இப்போதான் பேரை சொன்னிங்க கையோட பீச்க்கு வா சொல்றீங்க...
சாம் நண்பன் மீண்டும் அவர்களை கடந்தவாறே.: ஒரு தடவ முடிவு பண்ணிட்டா அவன் பேச்சே மட்டும் இல்ல யார் பேச்சையும் அவன் கேட்க மாட்டாராங்கோ......
நித்யா: மீண்டும் சிரித்தவாறே... opposite லே இருக்க coffeshop லே மீட் பண்ணலாமா?
சாம்: ஒ ஓகே.. நான் வெயிட் பண்றேன்.எடுத்தாபுல இருக்கும் coffeshop நோக்கி தன் பைக் தள்ளிக் கொண்டு போகிறான் ...அவன் போனதும்,
நித்யாவின் தோழி: ஹே என்ன டி அவன் கூப்பிட்டதும் நீயும் போற... என்ன நடக்குது?
நித்யா: எனக்கு அவன பிடிச்சிருக்கு...உண்மைய சொல்லப் போனால் லவ் அட் first சைட் லே எனக்கும் நம்பிக்கை இல்ல. பட் ஏனோ தெரிலே..அவன பிடிச்சிருக்கு...
[நித்யா, பைக் தள்ளிக் கொண்டு போகும் சாமை பார்க்க, சாம் இவளை திரும்பி பார்த்துக்கொண்டே போக கண்கள் இருந்தால் பாடல் back ground லே...]
நித்யாவின் தோழி: கூள் ...குட் லக் டி ..நீ நடத்து... என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே...

க்ரீச் என்று பெருத்த சதம் கேட்க...ஓடி சென்று பார்க்கிறாள் நித்யா... கூட்டமாய் மக்கள் இருக்க ...பதட்டத்துடன் coffeshop இல் சாம் தென்படுகிறானா என்று பார்க்கிறாள். இல்லாமல் போகவே கூட்டத்தில் நுழைந்து முன் செல்கிறாள்... அங்கே சாம் பைக் ஒரு புறம் விழுந்து கிடக்க ரத்த வெள்ளத்தில் சாமின் கண்கள் அவளைப் பார்க்கின்றன...
tight closeup லே சாம் கண்ணகல காமிக்கிறோம்..அதுலே நித்யா நிற்பது தெரிகிறது...மெல்ல சாம் கண்கள் மூடுகிறது...full dark 2 செகண்ட்ஸ்...
காட்சி 7
ரேடியோ FM ஆபீஸ்.. கேட் முன் ஒரு ஸ்கூட்டி வந்து நிற்கிறது. பார்வையற்றோர் பயன்படுத்தும் தடி ஊன்றி இறங்குகிறார் சாம்.
நித்யா: செக்யூரிட்டி ....பார்த்து உள்ளே அழைச்சிப் போங்க
செக்யூரிட்டி: சரிம்மா
நித்யா: சாம். I know u can do it well. Nalla pannunga ..Good Luck. நான் 3 hrs le வந்து pickup பண்ணிகறேன்.
செக்யூரிட்டி சாம் கைப் பிடித்து உள்ளே கூட்டி செல்கிறான்.செக்யூரிட்டி: அந்தம்மாக்கு உங்க மேல ரொம்ப அக்கறை சார்.. உங்க வேலைக்காக தெனமும் வந்து காத்து கிடப்பாங்க..
சாம்: ஹ்ம்ம். எனக்கு தெரியும் ... அவளுக்கு என் மேல் அளவுகடந்த பாசம்...
செக்யூரிட்டி: உங்க மனைவியா அவங்க?
சாம்: ஆமா ! ரெண்டு வாரம் முன்ன தான் கல்யாணமாச்சி...
காட்சி 8
நித்யா hands free connect செய்து தன மொபைல் ரேடியோவை on செய்கிறாள்.. "சத்யா வின் ஒரு கணம் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறேன்..ஒவ்வொருவர் வாழ்விலும் பல நிகழ்வுகள் நடந்திருப்பினும்...சில நிகழ்வுகள்...ஒரு கணத்தில் ஏற்ப்படும் அந்த சில நிகழ்வுகள் உங்கள் வாழ்கையையே மாற்றிவிடும்...அத்தகைய நிகழ்வுகளை நேயர்கள் என்னுடன் பகிர்ந்து கொள்ள...வாருங்கள் ! ஒரு கணம் நிகழ்சிக்கு..." என்று வெண்கலக் குரலுடன் சாம் பேசுவதை ரசித்துகொண்டே செல்கிறாள்....
2 comments:
ungal agmark nakkal script engum velayaaduthu! thiraikkathai ezhuthum kalayum konjam kai koodi irukku! puthusa ezhuthuravar mathiriye illai. Kandippa neenga oru comedy short film edukkanum! neenga chennai varra varaikkum athai thalli poda venam, take an handy cam and take something in US itself. kathai antha mathiri ready pannunga...
for eg., hero introduction!
naan satya. valarnthu varra thamizh cinemaavin hero. oru duetukkaaga florida vanthen. apo....
ippadi aarambichi oru kathai ezhuthunga...
பிரதீப், வருகைக்கு நன்றி...முதல்லே ரெண்டு மூணு ஸ்கிரிப்ட் ரெடி பண்றேன்...அப்பறம் கண்டிப்பா ஒரு படம் பண்றோம்....