•11:34 AM
அவசரப் படாதீங்க...எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கு...ஒழுங்கா லைன் லே நில்லுங்க...ஹ்ம்ம் கேபிள் ஷங்கர் வாப்பா வா வந்து முதல் ஆளா நில்லு. பிச்சைப்பாத்திரம் சுரேஷ் வாங்க, டுபுக்கு ரங்கா , சாரு சார் எங்கே போறீங்க சும்மா வாங்க...இதில் என்ன கூச்சம்??? .பெய்யென பெய்யும் மழை - பிரதீப்..நீ இல்லாம எப்படி பா நீதானே புள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சது வா...வா... இப்போ ஒன்னா நின்னு chorous ஆ காரி துப்புங்க...யப்ப்பா....முடிஞ்சுதா? இப்போ போ போ போய்கிட்டே இரு... வெயிட் எ நிமிட் ...த்து.....நானே துப்பி கிட்டேன்...இனி யாரும் துப்பக் கூடாது!!!
கடைசியா தேர்தல் சமயத்துல ஒரு பதிவு போட்டது...அதோட இப்போதான் வர! பிரச்சாரம் பண்ண வடிவேலையும் காணூம்!! உன்னையும் காணோம் ஹ்ம்ம்.... உனக்கெல்லாம் ப்ரீயா ப்ளாக் எழுத இடம் கொடுத்தவன உதைக்கணும் தானே நெனைகறீங்க!!! வேலை அதிகம், மாடா உழைச்சேன், படிச்சேன் கிழிச்சேன்னு பொய் சொல்ல விரும்புல... யாருமே இல்லாத கடைக்கு டீ ஆத்தனாலும் [கமெண்ட் வராம பதிவு போடறத தான் சொல்றேன் ] atleast டீ [பதிவு] போடற திருப்தியாவது இருந்தது...அப்படி என்னதான் பண்ணோம் இந்த அஞ்சு மாசம்னு பார்த்த சொல்ற மாதிரி கருமம் ஒன்னும் இல்ல!காலை எழுந்தது முதல் இரவு படுக்கற வரை என்னதான் கிழிச்சேன்? சரி...விடுங்க பய புள்ள ஏதோ சோம்பெரித்தனதுல இருந்துட்டேன் ...அதுக்காக அப்படியே இருந்துடுவேனா? எனக்கு என்ன ஆச்சு ஏது ஆச்சுனு நீங்க பீல் பண்ண மாட்டிங்க? அதான் இந்த அஞ்சு மாச கதைய உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தான் [கொல்லத்தான்] இப்போ எழுதறேன்...[டேய் நீ எழுதலே ன்னு ஒருத்தரும் கேள்வி கேட்கள ன்னு நெனைக்காதீங்க...கேட்கலனாலும் எழுதுவேன்!!!]

தினமும் காலை லே எழுந்ததும் இன்னிக்காவது ஒரு பதிவு போட்டுடனும் ன்னு தோணும், நெஞ்சு பட படன்னு துடிக்கும்...கை எல்லாம் விறு விறு ன்னு இருக்கும் [போய் ஒரு நல்ல டாக்டர் ர பாரு] சிந்திச்சு ஒரு வழியா லேப்டாப் தொடப்போனா மணி இரவு 10 30 ஆகுது இன்னும் படுக்கலா ன்னு என் பொண்டாட்டி குரல்கொடுப்பா ஸ்வப்பா...ஒண்ணுமே பண்ணாம எப்படி டா டைம் போகுது ன்னு எனக்கு சத்யமா தெரிலே... ஆனா கடந்த அஞ்சு - ஆறு மாசமா என் ஆபீஸ்ம் மின்ன மாதிரி இல்ல, மனசாட்சி இல்லாம வேலைலாம் செய்ய சொல்றாங்க... இந்தியாக்கு சுதந்திரம் கெடச்சாச்சு லே?[ US லே உட்கார்ந்துகிட்டு கேட்கற கேள்விய பாரு? வெண்ணை!!] இன்னும் அடிமை மாதிரியே நடத்துறாங்க!!!
புது customer florida லே ..அதனால வேலை கொஞ்சம் அதிகம்...அதுல ஒரு நல்ல விஷயம்னா கிழக்கு அமெரிக்க லே பல இடங்கள் சுத்தின நானும் என் மனைவியும் florida மட்டும் தான் விட்டு வச்சிருந்தோம் ...இந்த புது வேலை லே அதுவும் சுத்தி முடிச்சோம்...
பொதுவா எனக்கு இந்த பெரிய பெரிய rides லே போறது பிடிக்காது...நம்ம மெரினா பீச் லே குதிரை, வாத்து ன்னு இருக்க த்ரில்ளீர் ராட்டினம் தான் பிடிக்கும்...தில்லா ஏறுவேன் [கர்மம் கர்மம் ]ஆனா இங்கே கொலைவெறி லே திரியறானுங்க...உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன்...நீள் உருளை வடிவா ஒரு ride நெறைய பொடிசுங்க [8- 10 வயசிருக்கும் ] எல்லாம் உட்கார்ந்திருந்துது...சோ நானும் கொஞ்சம் மெல்ல சுத்தும்,,, ஊஞ்சள் மாதிரி ஆட்டுவானுங்க ன்னு நம்பி உட்கார்ந்தேன். படுபாவிப் பசங்க... கண்டபடிபுரட்டி எடுத்தானுங்க....மயக்கம் வர சமயம் நாளா பக்கமும் சின்ன பைப் மாதிரி ஒன்னு லே தண்ணியே பெய்ச்சி அடிச்சானுங்க..தெளியே வச்சி அடிகிரானுங்களோன்னு யோசிக்கரதுக்குள்ள, அந்த ride லே போய் உட்காரப் போட்டிருந்த மேடை விரிஞ்சி உள்ளே இருந்து நெருப்பு அடிக்குது...அடப்பாவிகளா மசாலா தடவாத கபாப் மாதிரி என்ன use
பண்றீங்களே ன்னு அழுகாச்சி அழுகாச்சியா வந்துது... என்ன ஒரு வில்லத்தனம்!!!Universal ஸ்டுடியோஸ், டிஸ்னி வேர்ல்ட் அது இதுன்னு ஒரே எந்சாய் தான் போங்க...குறிப்பா Harry Potter ride சக்கை போடு போட்டது... 3 நாள் ஒரே rides ஆ போய், 1 வாரமா தண்ணி அடிச்சா மாதிரியே திரிஞ்சேன் ....
அது தவிர 250 வருடம் பழமையான காதொலிக் சர்ச், NASA , Tampa மற்றும் சுற்று வட்டாரத்துல இருக்க பீச் ன்னு அப்படியே ஓடுச்சு என் florida பயணம்...ஒழுங்கா போய் வந்த இடத்தை பற்றி எல்லாம் எழுதினா கண்டிப்பா நாலஞ்சு பதிவு போட்டிருக்கலாம்...பாழாப் போன சோம்பேறித்தனம் ஒன்னும் பண்ண விடல...சரி விடுங்க...அதான் வந்துட்டேன்லே... வந்ததுக்கு, எனதன்பு பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், நல்ல பதிவுகளை படைத்திட வாழ்த்தி வணங்கி, நானும் சோம்பேறித்தனம் இல்லாமல் இந்த புது வருடப் பிறப்புக்கு தொடர்ச்சியா பதிவுகளை படைத்திட உறுதி மொழி எடுக்கிறேன்.. [கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம எப்படி என்னால இப்படி இருக்க முடிது? ] தப்பே இல்ல...திரும்ப ஒவ்வொருதர லைன் லே நில்லுங்க!!!
1 comments:
enakkum unakkum vithyaasame illai...naan sollavendiyathellam nee soldre...nanbenda!