Author: Sathish
•7:30 AM
நேரம் : இரவு 9:35



பெல்ட் அணிந்துகொண்டே பீரோ கண்ணாடி வழியே, கோபமாய் தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் கமலாவைப் பார்த்து சிரித்தான் சங்கர்; வடபழனி R 8 காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர்  ஆக பணிபுரிகிறான். கல்யாணமாகி 2 வருடமாகியும், இரவு நேர ரோந்துப் பணிக்கு எப்போது கிளம்பினாலும் "உம்ம"மென்று இருப்பது கமலாவின் வாடிக்கை."கோபத்துல்ல தாண்டி செல்லம் நீ ரொம்ப அழகா இருக்கே" என்று கூறிக் கொண்டே சுவற்றோரம் நின்று கொண்டிருந்த கமலாவின் அருகில் சென்றான் சங்கர்." விடிகாலையில் தான் வருவீகளா?" என்று தயக்கமாய் கேட்டாள் கமலா. "ஆமா..அடுத்த வாரம் அயோத்தி பிரச்சனை தீர்ப்பு. So சிட்டிலே பாதுகாப்பு அதிகப்படுத்த சொல்லி கமிஷனர் உத்தரவு போட்டிருக்கார். உள்பக்கம் 
தாப்பாள் போட்டு நீ ஒழுங்கா தூங்கு. ஓகே?" என்று சொல்லிக் கொண்டே கமலாவின் மிக அருகில் நெருங்கி, சேலை வழி தெரிந்த அவளது இடுப்பில் எதையோ தேடியது அவனது கைகள். சிலிர்த்து கண்மூடி நின்றாள் கமலா. அவள் உதடுகள்  ஏதோ முணுமுணுத்தது.




நேரம் : இரவு 10:35


அவசர அவசரமாக அந்த கேசுவாளிட்டி வார்டில் நுழைந்த சீப் டாக்டர்  "எத்தனை பேரு?" என்று கேட்டுகொண்டே க்ளௌஸ் அணிந்தார். "மொத்தம் 18 பேரு டாக்டர். அடல்ட்ஸ் 13 , 5 குழந்தைகள். ஆக்ஸிடென்ட் ஆன போது, டிரைவர் சீட் பக்கமா உட்கார்ந்திருந்த 7 பேர் ரொம்ப அடிபட்டு சீரியசா இருக்காங்க." என்று பதிலளித்தாள் நர்ஸ். அது ஒரு அரசு மருத்துவமனை..கழிப்பறைகள் சுத்தமா இருக்குதோ இல்லையோ, பினாயில் வாசம் பஞ்சமில்லாமல் மருத்துவமனை முழுவது வீசிக் கொண்டிருந்தது. அந்த கேசுவாளிட்டி வார்டில் சுமார் 10 பெட் இருக்கும். ரத்த கரையும், வலியின் புலம்பல்களும் மிகுதியாக இருந்தது அறை முழுவதும்.  


கடைசி பெட்டில் இருந்த காமினி, மெல்ல கண்விழித்தாள் அவளை சுற்றிலும் வயர்கள். பயத்தில் அவளின் ரோஸ்மில்க் நிற முகம் மேலும் சிவந்தது.. "டா... டாக்டர்...  டாக்டர்.." என்று முனகிக் கொண்டிருந்த காமினியின் அருகில் சென்றார் டாக்டர்; நிழலாய் தொடர்ந்தாள் நர்ஸ்.." ஒன்னும் பயப்படாதேமா..உனக்கு ஒன்னும் இல்லை...யு ஆர் எ லக்கி கேர்ள். ஒன்னும் பெருசா அடிபடலை. அதிர்ச்சிலே கொஞ்சம் மயக்கமாயிட்டே அவளவுதான்.. . நர்ஸ் 30 மினிட்ஸ் கழிச்சு ஆக்சிகேன் மாஸ்க்கை எடுத்துடுங்க" என்று சொல்லிக் கொண்டே அடுத்த பேஷன்ட் அருகில் சென்றார். தலையில் உள்ள கட்டு இருக்கமாய் இருப்பதை உணர்ந்த காமினி, சுற்றும்   முற்றும் பார்த்தாள். தன் வலக்கைப் பக்கமாய் இருந்த பழுப்பு நிற இரும்பு மேஜையின் ஓரத்தில் தன் ஹேன்ட் பேக்கை கண்டதும் காமினி ஒரு பெரு மூச்சு விட்டாள்...அவள் நினைவு முழுவதும் சிவா நிரம்பியிருந்தான்.

"ஆக்ஸிடென்ட் கேஸ், FIR காபி எல்லாம் ஒழுங்கா  கலெக்ட்  பண்ணி ரிசெப்ஷன் லே கொடுத்துடுங்க" என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினார் சீப்.  டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். அந்த விபத்து சிகிச்சை பிரிவின் வராண்டாவில் நான்கைந்து போலீஸ்காரர்கள், அடிப்பட்டவர்களின் உறவுக்காரர்கள் என்று ரொம்ப பிஸியாக இருந்தது அந்த ஹாஸ்பிடல்.  யார் கண்ணுலேயும் படாமல்  வெளியேறிய காமினி, தன்னை கடந்த ஆட்டோவைப் பார்த்து  "ஆட்டோ" என்று குரல் கொடுத்தாள்.  அடுத்தவரைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் "சர்ர்ர்" என்று ப்ரேக் போட்டு நின்றது அந்த ஆட்டோ. "எங்கே மா போகணும்" என்று ஒரு கர கரப்பான குரலில் கேட்ட ஆட்டோ டிரைவரிடம் "மொதல்ல இங்கிருந்து கெளம்புபா" என்று கூறி ஓரமாய் கிழிந்திருந்த அந்த ஆட்டோ குஷன்னில் தன்னைப் பொதிந்தாள் காமினி. அவள் குரலில் அவசரம் தெரிந்தது. நன்கு நனைந்த சிகரெட் பாக்கெட்டின் வாசம் அந்த டிரைவர் மீது வர, குமட்டிக்கொண்டு வந்தது காமினிக்கு...மீண்டும் ஒருமுறை தன்  ஹேன்ட் பேக்கை திறந்து பார்த்தாள்..அந்த பௌர்ணமி வெளிச்சத்தில் உள்ளிருந்த கிறிஸ்டல், வெள்ளை ஒளியை அவள் கண்ணில் பாய்ச்சியது...


நேரம் : இரவு 11:05


"என்ன சிவா ஏதாவது பிரச்சனையா இருக்குமோ? இன்னும் கால் வரல" என்று தன் வழுக்கை தலையில் இருக்கும் வியர்வையை கர்ச்சிப்பால் துடைத்துக்கொண்டே கேட்டார் பரந்தாமன். "அதான் எனக்கும் தெரிலே ...வழக்கமா 8 மணிக்கு ஆபீஸ் லே இருந்து கெளம்பிடுவா...இன்னிக்கு கண்காட்சியோட கடைசில் நாளு கொஞ்சம் லேட் ஆகும்,  வெளியெ வந்ததும் கால் பண்றேன் சொன்னா.. நான் கால் பண்ணி பாக்கவா?" என்று கேட்டான் சிவா.. " கொஞ்சம் பொறு சிவா..பார்ப்போம் " என்று கூறி சுற்றில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தை பார்த்தார் பரந்தாமன். பெரிய முள்ளும், சின்ன முள்ளும் பொறுமையாய் நகர்வந்தைக் கண்டு கடுகடுத்தது அவரது முகம்.

ஆடம்பரமாய் வளர்ந்திருந்தது  அந்த நான்கடுக்கு பிரைவேட் ஹாஸ்பிடல்.. அதன் நான்காவது மாடியில் தான் பரந்தாமனும் சிவாவும் பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்..அவர்களின் அமைதியை கலைத்தது அந்த டெலிபோன்..பரந்தாமன் அவசர அவசரமாக ரிசிவரை எடுத்து  "ஹெலோ...டாக்டர் பரந்தாமன் ஹியர்" என்று நிதானமாக கூறினார். "டாக்டர் காமினி பேசறேன்...கிறிஸ்டல் என் கிட்ட பத்திரமா இருக்கு..நம்ம பிளான் படி, நாளைக்கு நீங்க சர்ஜரிக்கு ரெடி பண்ணிடுங்க...எல்லாம் நல்லபடி முடிஞ்சா போதும்..." என்றாள் காமினி மறுமுனையில்..."காமினி ஒன்னும் பயப்படாதே...என்னோட ஆராய்ச்சி கண்டிப்பா வெற்றி பெரும்...உன் கிட்ட இருக்கறது சாதாரன கிறிஸ்டல் இல்லை. மருத்துவ குணம் கொண்ட அபூர்வ கிறிஸ்டல். அதுலே இன்ப்ரா ரெட் லைட் செலுத்தி அதிலிருந்து வரும் ஒளியின் மூலம் சிவாவோட கணையப் புற்று நோயை கண்டிப்பா குணப் படுத்திடலாம்..." நீ சிவாவ அழைசிகிட்டு நேரா கிளினிக் வந்திடுமா " என்றார் பரந்தாமன். "சரிங்க டாக்டர்...நான் இன்னும் ஒரு மணி நேரத்துல சிவா அழைச்சிட்டு வந்துடறேன்" என்றதும் பரந்தாமன் ரிசிவரை வைத்தார்.

"சிவா காமினி இப்போ உனக்கு ட்ரை பண்ணுவா பார்" என்று பரந்தாமன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "அடடா மழைடா அட மழைடா" என்று சிவாவின்  நோக்கியா பாடியது..."ஹே காமினி. என்னாச்சு? இஸ் எவரிதிங் ஆள் ரைட்?" என்றான் சிவா. மறுமுனையில் காமினி "நான் வந்த பஸ் பெரிய ஆக்சிடென்ட் ஆயிடுச்சு...பட் எனக்கு பெருசா ஒன்னும் இல்லை..ஐயம் ஓகே.ஏகப்பட்ட போலீஸ் ஹாஸ்பிடல்ல...சமாளிச்சு வர லேட் ஆயிடுச்சு..நீங்க எங்கே இருக்கீங்க? " என்றாள். "நான் இன்னும் வீட்லே தான் இருக்கேன். ஜஸ்ட் உன்னோட காலுக்கு தான் வெயிட்டிங். இன்னும் டென் மினிட்ஸ் லே  திருவான்மியூர் RTO பஸ் ஸ்டான்ட் லே இருப்பேன் டா ...பாய் டியர் டேக் கேர் " என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது பரந்தாமன் அவன் கையில் ஏதோ ஒன்றை திணித்தார்.."சா ...சார் ..." என்றான் சிவா நடுக்கத்துடன் ...அவனது கையில் துப்பாக்கி... 

நேரம் : இரவு 11:25


அடையார் IIT அருகே, வயர்லெஸ் ஏதோ முனுமுனுக்க அதனை கவனிக்காமல்  சங்கர் தனது காரை மெதுவாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். இரவின் அமைதியில் எங்கும் நிசப்தம் நிரம்பி இருந்தது...தூரத்தில் தெரு நாய்களின் சத்தம்...ரோட்டோரத்தில் ஓர் வெள்ளை மாருதி அதன் முன்னே கருப்பு நிற ஸ்கார்பியோ நந்தியாய் நின்று கொண்டிருந்ததை பார்த்து, சங்கரின் கவனம் அங்கே திரும்பியது...ஏதோ தப்பு நடப்பதாய் உணர்ந்த சங்கர், தன் காரில் இருந்த ஒலி பெருக்கியில், "ஹலோ வெள்ளை மாருதி TN 9318 என்ன அங்கே?  கருப்பு ஸ்கார்பியோ வண்டி எடு" ன்னு அறிவித்துக் கொண்டிருக்கும் போதே, கையில் பெரிய அருவாளுடன் ஒருவன் ஓடிச் சென்று ஸ்கார்பியோவில் தொற்றிக் கொள்ள, விருட்டென்று கார் சீறிப் பாய்ந்தது.

வேகமாக காரை விட்டு கீழெ இறங்கிய சங்கர் மாருதி காரில் ரத்த வெள்ளத்தில் ஒருவன் பிணமாகியிருப்பதை கண்டான். சற்றும் தாமதிக்காமல், ஓடிசென்று   தன் காரை கிளப்பிய அதே சமயம், அவனது கை வயர்லசை தேடி எடுத்தது. "ஹலோ கன்ட்ரோல் ரூம் ...R8     ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் சங்கர்.."அடையார் IIT கிட்டே 45 வயசு ஆள அசால்ட் பண்ணிட்டு அக்கிஸ்ட்டு கருப்பு நிற ஸ்கார்பியோ லே தப்பிச்சு போறாங்க...ஐ நீட் மெடிக் அட் IIT...ஆள் இருக்கான போயிட்டான பாருங்க...நான் அக்கிஸ்ட்டுகல பாளோ  பண்றேன்..ரெண்டு போலீஸ் பற்றோள அடையார் ஏரியா லே ரெடி பண்ணுங்க  ஓவர் " என்று சொல்லிக்கொண்டே சைரன் ஆன் செய்தான்...சைரன் ஒலி நகரையே உலுக்க ஸ்கார்பியோவை  துரத்தியது சங்கரின் போலீஸ் கார்.

நேரம் : இரவு 11:55


திருவான்மியூர் RTO பஸ் ஸ்டான்ட். சாலை சற்றே வெறிச்சோடிக் கிடந்தது.  சாலையோரம் இருந்த டீக்கடையில் இருந்த ஒன்றிரண்டு பேர் நடுவே சிவா, ஒரு கையில் கிங்க்ஸ் சிகரெட் மற்றொரு கையில் டி. கடைக்காரிடம் இருபது ரூபாய் கொடுத்து மீதி சில்லறையை சரி பார்க்காமல் தன் ஜீன்ஸ் பான்டில் நுந்திக் கொண்டே சற்று தொலைவில் இருந்த வெள்ளை நிற ஹோண்டா சிட்டியை நெருங்கினான் சிவா. டிரைவர் சீட் ஜன்னல் வழி தலை விட்டு "சார் உங்களுக்கு டி சொல்லட்டுமா?" என்று கேட்டான் சிவா. " வேண்டாம் சிவா.. அவ வர நேரம்..சீக்கிரம்  மேட்டர முடிச்சிட்டு கெளம்பலாம். அப்புறம் சொன்னது நினைவிருக்குள? அவ கொண்டு வரர்து அவளை பொறுத்தவரை ஒரு சாதாரண  கிறிஸ்டல், ஆனால் நமக்குத் தான் தெரியும் அதன் மதிப்பு. அலெக்ஸான்ரிட் - டைமண்டை விட பல மடங்கு மதிப்பு வாய்ந்த ஒரு அபூர்வ கல். புரிஞ்சுதா? புத்திசாலித்தனமா நடந்துக்க" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆட்டோ ரோட்டோரம் வந்து நின்றது.

ஆலிவ் நிற பூனம் சேலையில் உள்ளிருந்து இறங்கினாள் காமினி. ஈரம் சுமந்த காற்று அவள் மேல் வீச, காதோரம் இருந்த அவள் கூந்தலை பின்னுக்கு தள்ளிக்கொண்டே அவள் கண்கள் யாரையோ தேடியது."ஹாய் காமினி...இங்கே " என்ற சிவாவின் குரல் கேட்ட திசை நோக்கி நடந்தாள். "ஹாய் சிவா, உடனே கிளினிக்கு  கெளம்பலாம்...நான் டாக்டர் கிட்ட பேசிட்டேன். நமக்காக அவர் வெயிட் பண்ணுவார்.." என்று மட மடவென பேசிய காமினியை இடை மரித்த சிவா "ஹே வெயிட் வெயிட் ...கிறிஸ்டல் எங்கே?" என்றான். "பத்திரமா ஹேன்ட் பேக்லே இருக்கு டா...உனக்கு உடம்பு நல்லபடி ஆகணும்னு தான் நான் இவ்வளவு ரிஸ்க் எடுத்தேன். சர்ஜெரி முடிஞ்சதும், யாருக்கும் தெரியாம  திரும்ப இந்த கிறிஸ்டல கொண்டு போய் எடுத்த இடத்துலேயே வைகக வரை எனக்கு டென்ஷன் தான்" என்று சொல்லிக் கொண்டே கூழாங்கல் போலிருந்த அந்த கல்லை கையில் எடுத்தாள் காமினி. "எல்லாம் சரிதான்..ஆனால் திரும்ப வைக்கணும்ங்கற நெனப்ப விட்டுடு காமினி. எனக்கு அது வேணும். அது வெறும் கல் இல்லை வைரம்..வைரத்தை விடவும் உயர்ந்தது  " என்று சொல்லிக் கொண்டே அவனது கைகள் முதுகு பக்கமாய் போவதைக் கண்டாள் காமினி அவள் கிறிஸ்டலை மீண்டும் ஹேன்ட் பேக்லே போட்டாள்.  .அடுத்த வினாடி சிவாவின் கையில் துப்பாக்கி,  “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. கலங்கிப் போனாள் காமினி. " சிவா என்ன விளையாட்டு இது. உன் மேல் கொண்ட காதலால் நான் எவ்வளவு ரிஸ்க் எடுத்து இந்த கிறிஸ்டல கொண்டு வந்தேன் தெரியுமா? எத்தனை போலிசை சமாளிக்க வேண்டியிருந்தது தெரியுமா? " என குரல் தழு தழுக்க கூறிய காமினியின் கண்கள் கலங்கிப் போய் இருந்தது.  அவர்களின் சற்று நேர அமைதியை கலைக்கும் வண்ணம், காரை விட்டு இறங்கிக் கொண்டே  “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன். "டா... டாக்டர்...நீ..நீங்களா?" மேலும் அதிர்ச்சி அவள் கண்களில், இருக்கமாய் அவளது கைகள் ஹேன்ட் பேக்கை பிடித்தவண்ணம் தார் ரோட்டை விட்டு ஓரமாய் இறங்கினாள் காமினி. தூரத்தில் சைரன் ஒலி கேட்க திகைத்து போயினர் மூவரும்...சடாலென்று பரந்தாமன் காரில் ஏறி "சிவா..பேக்கை பிடிங்கிட்டு அவளை போட்ரு..." என்று சொல்லி முடிப்பதற்குள், நிலை தடுமாறி அங்கு வந்து கருப்பு நிற ஸ்கார்பியோ சிவாவுடன் ஹோண்டா சிட்டி யையும் அடித்து தூக்கியது... "ஐயோ..."  என்ற அலறல் சைரன் ஒலியை மீறி ஒலித்தது... 

நேரம் : இரவு 12 :05


"ஹலோ கன்ட்ரோல் ரூம் ...R8     ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் சங்கர். திருவான்மியூர் கிட்ட ECR  ரோட்லே ஆக்சிடென்ட்" என்று சங்கர் அறிவித்துக் கொண்டிருக்க இருட்டில் சென்று மறைந்தாள்  காமினி..இருக்கமாய் அவளது கைகள் ஹேன்ட் பேக்கை பிடித்திருந்தது.....
This entry was posted on 7:30 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

20 comments:

On November 16, 2010 at 7:50 PM , Unknown said...

வெற்றிக்கு எனது பாராட்டுக்கள்.

 
On November 16, 2010 at 9:19 PM , RVS said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் ;-)

 
On November 16, 2010 at 11:15 PM , மாதேவி said...

வெற்றியடைந்ததற்கு வாழ்த்துக்கள்.

 
On November 16, 2010 at 11:36 PM , pichaikaaran said...

மனமார்ந்த பாராட்டுக்கள்... வாழ்துக்கள்...

 
On November 16, 2010 at 11:53 PM , venkatapathy said...

congratulations

 
On November 17, 2010 at 12:03 AM , Ramesh said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.. கதை அருமை..

 
On November 17, 2010 at 12:38 AM , Prasanna said...

நேரங்களை காண்பித்து இருப்பது நன்று. இதில் ஏதாவது ஒரு விஷயம் தாமதமாக நடந்து இருந்தாலும் காமினி காலி + 'கெட்டவர்கள்' எஸ்கேப் பட்டர்பிளை எபெக்ட் போல :) வாழ்த்துக்கள்..!

 
On November 17, 2010 at 1:16 AM , Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள்..

 
On November 17, 2010 at 2:17 AM , பின்னோக்கி said...

வாழ்த்துக்கள் வென்றதற்கு.

 
On November 17, 2010 at 3:04 AM , Anonymous said...

Interesting. Congratulations.

 
On November 17, 2010 at 3:04 AM , V I J A Y said...

Interesting. Congratulations.

 
On November 17, 2010 at 5:57 AM , Sathish said...

வாழ்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி....நல்ல அனுபவமும், எழுத்துத் திறனும் இருக்கும் இந்த வலைய்லகில் , என் எழுத்துகளுக்கு கிடைத்த முதல் அங்கிகாரம் இந்த பரிசு. தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து முயள்வேன்..


பிரசன்னா,

"பட்டர்பிளை எபெக்ட்" என் கதையின் ஆணிவேர்...அதை நூல் பிடித்து கதை நகரவேண்டும் என்று எழுதினேன். அதை லபக் னு பிடிச்சி பாராட்டியமைக்கு ...ரொம்ப தேங்க்ஸ் பா...

 
On November 17, 2010 at 2:23 PM , பிரதீபா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்.நல்லதொரு க்ரைம் கதை!! சிறு கோரிக்கை. முதல் பரிசுக்குரிய கதை என்பதால் பலர் படிக்க வரும்போது , எழுத்துப் பிழைகளைக் களைந்து மீண்டுமொருமுறை பப்ளிஷ் செய்யலாமே ...

 
On November 18, 2010 at 7:32 AM , Sathish said...

பிரதீபா, பாராட்டியமைக்கு எனது மனமார்ந்த நன்றி..எழுத்துப் பிழைகளைக் களைந்து மீண்டுமொருமுறை பப்ளிஷ் செய்துள்ளேன்...இனி வரும் பதிவுகளில் இன்னும் கவனமாக பிழைகளைக் களைந்து எழுத முயற்சிக்கிறேன்.

 
On November 18, 2010 at 7:48 AM , Jayakumar Chandrasekaran said...

Are you a disciple of Rajesh Kumar.You are following his style and plots.

 
On December 6, 2010 at 12:50 PM , Thamira said...
This comment has been removed by the author.
 
On December 6, 2010 at 12:51 PM , Thamira said...

பரிசு பெற்றமைக்கு முதல் வாழ்த்துகள்.

நல்ல சுவாரசியமான கதை. விறுவிறுப்பாகவும் இயல்பாகவும் இருந்தது. கொடுக்கப்பட்ட வரிகளை கச்சிதமாக கதையில் பொருத்தியிருக்கிறீர்கள். பாரலல் ட்ராக் ஒரு பழகிய வடிவம் எனினும் இந்தச் சவாலுக்கு அந்த வடிவத்தை பயன்படுத்தியதில் உங்கள் புத்திசாலித்தனம் தெரிகிறது. தொடர்ந்து கதைகள் எழுதுங்கள். நன்றி. வாழ்த்துகள்.

*பிழை திருத்தியிருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். அப்படியும் பிழைகள் தென்படுகின்றன. கவனம் ப்ளீஸ். //கூழங்கள்// கூழாங்கல்?//

 
On December 7, 2010 at 5:30 AM , Sathish said...

ஆதிமூலம்:

வாழ்த்தியமைக்கு நன்றி! எழுத்துப் பிழைக்கு வருந்துகிறேன்...+2 க்கு பிறகு தமிழில் எழுதுவது மிகக் குறைவு என்றபோதிலும், கண்டிப்பாக அதனை சாக்கு சொல்லி தப்பிக்க இயலாது...திருத்திக்கொள்ள முனைவேன்...தொடர்ந்து என் பதிவைப் படித்து கருத்து தெரிவிக்கவும்...

 
On December 16, 2010 at 3:56 PM , பாரதசாரி said...

வாழ்த்துக்கள்!!!!வெற்றி பெறும் எல்லா தகுதியும் உள்ள கதை.போட்டியின் விதிகளையறியாமல் படிப்பவர்களுக்கு இன்னும் சுவாரசியமாக இரூகும்

 
On December 17, 2010 at 1:31 AM , Sathish said...

பாரதசாரி :

நன்றி... தொடர்ந்து படியுங்கள்!! ஒரு சின்ன விண்ணப்பம்...என்னுடைய மற்றறொரு சிறுகதை ---" ஆ" தமிழ்மணம் விருதுகள் 2010 ... போட்டிக்கு பதிவு செய்துள்ளேன். கதை பிடித்திருந்தால், பிரிவு: படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை) இந்தப் பிரிவுக்கு வாக்களிக்கவும்

என்றும் உங்கள் ஆதரவை எதிர் நோக்கும் - சத்யா