•11:21 PM
இவன் பேரை சொன்னதும், பெருமை சொன்னதும் கடலும், கடலும் கை தட்டும்...இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டவன் நிலவு நிலவு தலை முட்டும்....அட்ரா ...அட்ரா இது தலைவருக்கான வரிகள் என்பதில், சிறு சந்தேகமும் இல்லை...படம்யா...இது படம்யா...தலைவா...பின்னிட்டே...அட்டகாசம்...கன கச்சிதம ஒன்னொன்னும் யோசிச்சு அசத்தியிருக்கு எந்திரன் டீம்....கொஞ்ச நெஞ்ச எதிர்ப்பார்ப்பா இருந்தது இந்த படத்திற்கு...கலாநிதிமாறனுக்கு கூட இவ்வளவு டென்ஷன் இருந்திருக்காது...எனக்கு அவ்வளவு டென்ஷன்...200 % அனைவரது எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் இல்லை...
படத்தோட கதை என்ன என்பதை அனைவரும் அறிவர்...ப்ளாக் லே, reviews எல்லாத்துலேயும் இந்நேரத்துக்கு போட்டு முடிச்சத திரும்ப நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...ஒரு ரசிகனா, தலைவரோட வெறியனா என் கண்ணோட்டத்துல எந்திரன் எப்படி இருக்குனு பகிர்ந்துக்கணும்...அதற்காகத் தான் இந்த ப்ளாக்...
இப்போ முளைச்ச சின்ன பயலுங்க, விடலை பசங்கல்லாம் இமேஜ், ஹீரோ அறிமுகம், பஞ்ச் டயலாக் அது இதுன்னு முக்கியத்துவம் கொடுக்கற காலத்துல...நம்ம தலைவரோட அறிமுகம் படு சிம்பிள் இதுல...ச்சே ...சான்ஸ் இல்லை...தலைவர் நெனச்சிருந்தா "எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு, இன்ட்ரோ லே மாஸ் வேணும் ... இப்படித்தான் வேணும் அது இதுன்னு சொல்லி ஸ்கிரிப்ட் லே, direction லே பல இடங்களில் தலை இட்டிருக்கலாம்...100 % ஒரு இயக்குனரின் சொல்படி நடந்திருக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார்...மனசு வேணுமையா...சின்னப்ப்சங்கல்லம் நாலஞ்சு இங்க்லீஷ் படத்த காமிச்சு இத மாதிர் ஷாட் வை அத மாதிரி வைன்னு அட்வைஸ் பண்ற காலத்துல இப்படி ஒரு மனிதரா? சத்திமா தலைவர தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்க முடியாது...
பொதுவா ரெண்டு ஹீரோ இருக்க சப்ஜெக்ட் லே உன்னை யார் மேலோங்கி இருப்பது என்பதுல நெறைய பிரச்சனை வரும்...அந்த போட்டிலே டைரெக்டர் தல தான் உருளும்...தலைவர் பல படத்துல சக நடிகர்களிடம், விட்டுக் கொடுத்து நடிப்பது ஊரன்ரிஞ்ச விஷயம்....இப்போ மனிஷங்களையும் மீறி ரோபோ கராச்டருக்கு விட்டு கொடுத்து நடிசிருகிறார்...ஒரு எடத்துல கூட விஞ்ஞானி ரஜினி தன் ஹீரோ தனத்தை காமிக்கவே இல்லை...எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அந்த யதார்த்தம்...ஒரு சீன் லே கலாபவன் மணி இடம் விஞ்ஞானி ரஜினிக்கு ஒரு சண்டை காட்சி வைத்திருந்திருக்கலாம்..ஆனால் கதைக்கு தேவை இல்லை என்பதால் அதுவும் தவிர்க்கப் பட்டிருக்கு....டைரெக்டர்களை ஆட்டி வைக்கும் இக்காலகட்டத்தில் இப்படி ஒரு முன்னணி நடிகரா?
விஞ்ஞானி ரஜினியிடம் தெரிகிற முதிர்வு, ஒரு பயம் கலந்த ஒரு பணிவு, சிட்டி ரோபோவை பார்க்கும் போது தெரியவில்லை...நடை, ஸ்டைல், body language ..நல்ல வித்தயாசத்தை காமிச்சிருக்கார்...இந்த வயசுல இப்படி ஒரு சுருசுருப்பா? தல பின்றீங்களே.....காதல் அணுக்கள் பாட்டில் தலைவர் ஒரு நடை நடப்பார். வாவ்.....சம நடைங்க அது...ஐயோ அணு அணுவா ரசிச்சேன் நான்...A .R .ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை...
ஷங்கர் சார் hats ஆப் .... ஒரு Sci -Fi படத்தை, மக்களுக்கு புரியற மாதிரி, தெளிவா, தலைவரோட usual படம் போல மசாலா தடவாம, கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகத் தெளிவா பண்ணி இருக்கீங்க...கடைசி இருபது நிமிட க்ராபிக்ஸ் சிம்ப்ளி சூப்பர்ப்...ஐஸ்வர்யா அழகு, நளினம் எல்லாம் நெறஞ்ச ஒரு நிறைகுடம்...நல்ல முதிர்ச்சியான நடிப்பு...படத்துல தேவை இல்லாத விஷயம் என்றால், சந்தானம் கர்னாஸ்...காமெடி சொல்லும் அளவுக்கு ஒன்னும் இல்லாத போது, அசிஸ்டண்டா வேற யாரவது போட்டு தள்ளி இருக்கலாம்...தேவை இல்லாத மற்றொருவர் கலாபவன் மணி....
இவ்வளவும் சொல்லிவிட்டு நான் படம் போன அனுபவத்தை பற்றி சொல்லாம எப்படி? என் வீட்டிலிருந்து சுமார் 200 km தூரம் போய் பார்த்த படம் இது...so மொத்தம் 400 km இன்னைக்கு நான், என் மனைவி அம்மா travel பண்ணோம்..அங்கே தியேட்டர் லே நம்ம பசங்க தலைவரோட படம் போட்ட tshirt போட்டு கலக்கினானுங்க...நாம வழக்கம் போல விசில் பின்னி எடுத்தோம்..தியேட்டர் சும்மா அதிருசு லே......தலைவருக்கு, தலைவர் படத்துக்கு A , B ,C ன்னு கிளாஸ் எல்லாம் இல்லை...எல்லோருமே அமைதியாகச் சென்று ஆரவாரத்துடன் தான் படம் பார்ப்போம்...
படம் 100 % ஹிட் ...சூப்பர் ஸ்டார் படம், ஸ்டைல் , அரசியல், பஞ்ச் டயலாக் அது இதுன்னு எதிர்ப் பார்க்காம தலைவர் நடிச்ச ஒரு science and fiction படம்னு போங்க..உங்க எதிர்ப்பார்ப்பு கொஞ்சமும் குறையாம படத்த ரசிப்பீங்க ... தமிழ் சினிமா வரலாற்றில் எந்திரன் ஒரு மைல் கல்....ஒரு புதிய அனுபவம்...
சினிமா
|
2 comments:
பாட்ச மிறுமா ?
பாட்சா ஒரு மைல்கல் என்றால் எந்திரன் ஒரு மைல்கல் சார்...so அதுமாதிரி compare பண்ண முடியாது