•8:29 AM
ஆரம்ப காட்சிகள பார்த்து அடடா, இதுவும் பண்டல் தானோ னு தோனுச்சு எனக்கு...எடுத்தவுடன் ஒரு fight ...வடிவேலு நான் உங்க கிட்ட அசிஸ்டண்டா சேரனும் னு வரர்து [என்ன பண்ணார்னு அசிஸ்டன்ட் ...] .இதெல்லாம் பார்த்து, வடிவேலு பாணி லே ஐயோ ஐயோ னு நெனசசிட்டே இருக்கும் போது கதை மெல்ல சூடு பிடிக்க ஆரம்பிச்சது ... விஜய் இந்த படத்துக்கு கொஞ்சம் work பண்ணி இருக்கார்.. டிரஸ்ஸிங் லே இருந்து...எல்லாமே கொஞ்சம் ஓகே தான்... உண்மைய சொல்லப் போனால் நான் ஒரு விஜய் ரசிகன் தான்...காலேஜ் படிக்கும் போது எந்த ஒரு கல்ச்சுரல்ஸ் என்றாலும் தளபதி விஜய் பாட்டுக்கு 'தலைவாசல்' விஜய் மாதிரி ஆடி [துக் கருமம் கருமம்] கலக்கிய நாட்கள் எத்தனை ! எத்தனை !! ஆனால் நல்ல படம் கொடுக்காவிட்டாலும் நான் ரசிகனாக இருப்பேன் என்று சொல்லிக்கொள்ளும் வகையில் ரசிகனாக இருக்க நான் விரும்பவில்லை...[ஆமா ! இதப் பார்த்து விஜய் தேம்பி தேம்பி அழப் போறாரு...போடாங்ங்ங்ங்..] ஆனால், இந்த படம் மீண்டும் என்னை விஜய் ரசிகனாக மாற்றத்தான் செய்கிறது... அடுத்து
வரும் படங்களிலும் சற்றே கவனமான் செயல் பட்டால் விஜய் மீண்டும் இழந்த
இடத்தைப் பெறலாம்...[ டேய் டேய்...நீ ரொம்ப பேசற...சாரி எழுதுற...உன்ன வச்சித் தான் விஜய் வாழக்கை ஓட்ற மாதிரி பில்டப் கொடுக்கற...அடங்குடா...]
பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் விஜய் பேட்டி பல டிவிகளில் ஒளிபரப்பானது ( சன் டிவி தவிர )...அதில காவலனுக்கு ஓவரான பில்ட்அப் கொடுத்தாங்களோ னு தோணுது... என்னை பொறுத்த மட்டில் வித்யாசம் என்று சொல்வதற்கு ஒன்னும் இல்ல...விஜய் மீண்டும் ஜெயிக்க கையாண்ட உத்தி கொஞ்சம் பழசு தான் ...[இப்படி பழைய பாணி லே பிரவேசிக்கணும்னா நம்ம சங்கவி, சுவாதி இவங்கெல்ல கூட்டி வந்திருக்கலாமே!!! ] எனக்கெனவோ 'காலமெல்லாம் காதல் வாழக - முரளி ' படத்த பார்த்தா மாதிரியே இருக்கு முதல் பாதி...
மலையாள படம் ரீமேக் என்பதை மீடியா சொல்லாமல் இருந்திருந்தாலும், மலையாளப் படத்தோட டச்சை பல இடங்களில் கண்டு பிடிச்சிருக்கலாம்... இந்த படத்தோட இன்னொரு ஹை லைட் வடிவேல் காமெடி!!! ரசிக்கும் படியாதான் இருந்தது... படம் முழுக்க இந்த படத்தை வெற்றிப் படமாக்கியே தீரவேண்டும் என்ற விஜயின் ஆதங்கம் தெரிகிறது...பஞ்ச் டயலாக் இல்லாம, சாதரணமாக நடித்த விஜய்க்கு ஒரு சபாஷ்...படத்துல பஞ்ச் இருக்கலாம், தப்பில்லை...பஞ்ச்க்காக செலவு பண்ணி படம் எடுக்கற வித்தையே மாற்றினாலே போதும், தல சாரி தளபதி நீங்க ஜெயிபீங்க....
படத்துக்கு முன்ன பின்ன அரசியல் என்ட்ரி லே அடக்கி வாசிச்ச விஜய் இப்போ மீண்டும் அரசியல் பற்றியே பேச்சுகளில் அடிபடறது எனக்கென்னவோ சரியா படல... வாயத்தறந்து முழுசா ஒரு லைன் கூட அவரால பேச முடிலே....தெரிலே...அவர் பிரச்சாரத்துக்கு தவிக்கப் போறது, பிரசவத்துக்கு தவிக்கற மாதிர் தான் இருக்கும் நெனைக்கிறேன்... ... என்ன நடக்குது னு பார்போம்...ஆனா எனக்கெனவோ விஜய் சனியன தூக்கி பனியன் லே போட்டுக்கிறார் னு தோணுது... காவலனுக்கு காலம் தான் பதில் சொல்லும்.
சினிமா
|
0 comments: