•10:22 PM
கட்டுரைகள், கவிதைகள் சில எழுதிய அனுபவம் இருந்த போதும் சிறுகதை எழுத வேண்டும் என்ற என் நீண்ட நாள் கனவு முதன் முதலில் அரங்கேறுகிறது இன்று...பிழை இருப்பின் திறுத்திக்கொள்வதற்கான முதற்படி உங்கள் வாயிலாக...
மயக்கத்திலிருந்து மெல்ல கண் திறக்க முயற்சித்தான் மதன். கட்டப்பட்டிருந்த தன் கைகளில் வலி..தான் இருக்கும் இடம் சற்றும் பறிட்சயப்படாத இடம் என்பது மட்டும் புரிந்த நிலையில், எப்படி இங்கு வந்தோம் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, மங்கிய வெளிச்சத்தில் மூன்று உருவங்கள் தன்னை நெருங்கி வர கண்டான். "என்ன மதன் எப்படி இருக்கீங்க?" என்றது ஒரு உருவம். "ந... நான்... நல்லா இருக்கேன்" மதன் தன் குரலில் நடுக்கம் உணரக்கண்டான். "ஒன்னும் பயப்பட வேண்டா மதன். உங்களை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளும்படி எங்கள் இயக்கம் அறிவுறுத்தியுள்ளது. நீங்களும் எங்களுக்கு வேண்டிய தகவல்களை தந்தால் ரெண்டு மூணு நாள் லே முழுசா வீடு போய் சேரலாம். பசிக்குதா? சாப்பிட ஏதாவது வேண்டுமா? சகா மதன் சார்க்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கிவா" என்று சொல்லும்போதே குறுக்கிட்ட மதன், "இல்ல ஒன்னும் வேண்டாம். நான் ஒரு அரசு அதிகாரி. நீங்கள் என்னை கடத்தி வைத்திருப்பது என் அரசாங்கத்திற்கு தெரிந்தால் உங்களை சும்மா விட மாட்டார்கள்; ஒழுங்கா என்னை விட்டுடுங்க" என்றான். "நீங்கள் வெறும் அரசு அதிகாரியா? மத்திய உளவுத்துறையை சார்ந்த கணினித்துறையின் மேலாளர் அல்லவா நீங்கள். நாட்டின் பாதுகாப்பை சார்ந்த முக்கிய துறை உங்கள் கண்காணிப்பிலே இருக்கும் போது நீங்கள் சாதாரனமான ஆள் இல்லை என்று எங்களுக்கு தெரியும்" தூரத்தில் ஒலித்தது ஒரு பெண் குரல். திடுக்கிட்டுத் திரும்பினான் மதன். இந்த குரல் எனக்கு மிகவும் தெரிந்த குரல்; நன்கு பறிட்சயமான குரல்.யாரவள்? யோசித்து முடிக்குமுன் அருகில் வந்தது அந்தப்பெண்ணுருவம். மல்லிகா...என் காதலி மல்லிகா... உடைந்துபோனான் மதன்.
"மல்லிகா நீ... நீ.. எப்படி இங்கே?" என்ற கேள்வி முடியும் முன், மதன் அருகில் நெருங்கிய மல்லிகா "மதன் என்னுடைய 13ம் வயதிலிருந்து நான் இந்த இயக்கத்தில் இருக்கிறேன். உங்கள் கட்டுபாட்டுக்குள் இருக்கும் நாட்டின் முக்கிய ரகசியங்களை பெற உங்களை கடத்த திட்டம் தீட்டி நான் பழகினேன்; தனிமையில் சந்திப்பதாய் வரச்சொன்னேன்...இந்த கம்ப்யூட்டர் இன்டர்நெட் வசதி கொண்டது. எங்களுக்கு வேண்டிய தகவல்களை கொடுத்துவிட்டால் நீங்கள் ஒரு கஷ்டமும் இல்லாமல் வீடு திரும்பலாம்" என்றாள். காதலிபதாய் சொல்லி என்னை ஏமாற்றி விட்டாயடி! மதனின் இதயத்தில் இடி; கண்களில் மழை. "மல்லிகா..வேண்டாம் இந்த விபரீத முயற்சி. நான் சொல்வதை கேள்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பின்னாலிருந்து ஒருவன் மதனின் பின்மண்டைக்கு துப்பாகியால் குறி வைத்தான். பதறிப்போன மதன் மல்லிகா சொன்ன கணினியை நெருங்கினான். அங்கீகரிக்கப்படாத இடத்திலிருந்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டால் அடுத்த பத்தாவது நிமிடம் IP வாயிலாக தன்னை தேடி அதிரடிப்படை வரும் என்பதை அறிந்து கம்ப்யூட்டர்ஐ நெருங்கி தகவல்களை டவுன்லோட் செய்ய ஆரம்பித்த வண்ணம் அவன் நினைவுகள் சற்றே பின்னோக்கி சென்றன.
சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன், ஒரு பொறுப்பான பதவியில் வேலை செய்துவந்தாலும், தெரியாத பெண்களிடம் chat செய்வது ஒரு வாடிக்கையாய், இனம் புரியாத ஒரு இன்பமாய் பொழுதுபோக்காய் இருந்துவந்தது மதனுக்கு. அப்படி அறிமுகமானவள் இந்த மல்லிகா. மல்லிகாவின் நட்பு கிடைத்து ஐந்தாறு மாதங்கள் இருக்கும். யதேச்சையாய் yahoochat மூலமாக அறிமுகமான மல்லிகா நெருங்கிய தோழியாக மாறிப் பின் காதலியாக உருவெடுத்தாள். தான் ஒரு விதவை என்றும் ஸ்ரீலங்காவில் வசிக்கும் ஒரு தமிழ் பெண்ணென்றும் அறிமுகமாகி தினந்தோறும் chatல் மணிக்கணக்காய் உரையாற்றி வளர்ந்த நட்பு காதலாக உருமாறி இரண்டு வாரமாகிறது. சிங்களத்தமிழில் கொஞ்சிப்பேசிய மல்லிகவா இன்று ஒரு இயக்கத்தை சார்ந்த பெண்ணாக என் முன் நிற்ப்பது? இத்தனை நாள் காட்டிய நட்பு, காதல் அனைத்தும் பொய்யா? ஆயிரம் கேள்விக்கணைகள் மின்னலெனப் பாய்ந்தது மதனின் மனதில்.
இன்னும் அதிர்ச்சியிலிருந்து மதனால் மீளமுடியவில்லை, மல்லிகாவை வெறுக்க முடியவில்லை. அவள் பேசிய காதல் மொழிகள் பொய் என்பது புத்திக்குத் தெரிந்தபோதும் மனம் அதனை மறுத்தது; கண்களின் ஓரம் நீர் வழிவது நின்றபாடில்லை. அடுத்த சில நிமிடங்களில் சரமாரியான துப்பாக்கி சத்தங்கள். அதிரடிப்படை அந்த இடத்தை சுற்றி வளைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடம் யுத்த பூமியாக மாறியது. அதிரடிப்படையினர், மல்லிகாவை சுட்டுவிட போகிறார்கள் என்ற பயத்தில், அவளை காக்கும் பொருட்டு பாய்ந்த மதனை மல்லிகாவின் துப்பாக்கி பதம் பார்த்தது. நிலை குலைந்து அவளை பார்த்தவண்ணம் விழுந்தான் மதன். முதல் முறையாக மல்லிகாவின் கண்களில் கண்ணீர். அதில் உண்மை இருந்தது. தான் செய்த துரோகத்திற்கு வருந்தி "என்னை மன்னித்துவிடு மதன்" எனக் கூறும்போது மதனும் தன் மனைவி மாதவிக்கு மன்னிப்பு கேட்க மறக்கவில்லை. மூடாத அவன் கண்களிலும் துரோகச் சுவடுகள்.
சிறுகதை
|
0 comments: