•11:38 PM
வந்துட்டான்யா...வந்துட்டான்யா!! என்னோட பங்காளிங்க சொல்றது காதுல விழுது :) அவங்களுக்கு நான் சொல்றது...." ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்கமாட்டேன்..." [அட கூறுகெட்ட குப்பா...நீயே உன் பேச்ச கேட்காத போது மத்தவங்க எப்படி டா கேட்பானுங்கன்னு நெனைகாதிங்க ....] வெடல பசங்கலாம் ப்ளாக் எழுதறானுங்க !! நானும் ஒரு ட்ரை ப்ளீஸ்....ஹி...ஹி...ஹி....
வாழ்க்கை! ஒரு சின்ன கனவு...அதுல எவ்வளவு பிரச்சனைகள், போட்டிகள், பொறாமைகள்...யப்பா சாமி தாங்கலடா.. வரும்போதும் ஒன்னும் கொண்டு வரல போகும்போதும் ஒன்னும் கொண்டு போக போறதில்ல... இந்த இடைப்பட்ட காலத்தில ஒய் டென்ஷன்? [நல்லா தான் பேசற...ஆனா இருக்கற பிரச்சனை லே நீ வேற ஏன் இந்த புது முயற்சி?] என்ன பொறாமை :( வளரும் கலைஞன தடை செய்யதிங்க பா...
சரி விஷயத்துக்கு வருவோம் ... திடீர்னு நான் எழுத ஆரம்பிச்சேனா? எனக்குள் ஒரு கேள்வி...இல்ல பா...நீதான் ஒன்பதாவது படிக்கிற காலத்துலேயே கட்டுரை போட்டிலே கவிஞர் வைரமுத்து கையாலே "இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்" புத்தகம் முதல் பரிசா வாங்கினியே...ஏங்கேயூ கேட்ட குரல்...ம்ம் இருக்கட்டுமே இருக்கட்டும் அப்போ அவர் அடிச்ச கல்லால இப்போ முப்பத்திரண்டு வயசுல வலிச்சு மீண்டும் எழுத ஆரம்பிச்சிருக்கேன்...[விதி வலியது... உங்கள யார் காப்பாத்துறது?]
என்ன புதுசா இந்த ப்ளாக்லே இருக்கும்? வித்யாசமா ஒன்னும் இல்ல நாளும் வித விதமா எதாவது இருக்கும்...அன்றாட வாழ்க்கைல நாம பல பேர சந்திக்கிறோம்... அதுல சில பேர பின்பற்ற நினைக்கிறோம்...இந்த ப்ளாக் மூலமா நான் சந்தித்த சில நல்ல உள்ளங்கள், நல்ல நிகழ்வுகள், சில துக்கங்கள், சில ஸ்வாரஸியங்கள், சில (பல) கலாய்ப்புகள், சமூக சீர்திருத்த முயற்சிகள் [வெச்சாண்டா ஒரு பஞ்ச ..அட்றா அட்றா..], சினிமா, பொழுது போக்கு ன்னு அள்ளி தர இந்த புதிய முயற்சி ...மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்...
3 comments:
good start! best wishes to go a long way!!
pradeep-nisha
//நீதான் ஒன்பதாவது படிக்கிற காலத்துலேயே கட்டுரை போட்டிலே கவிஞர் வைரமுத்து கையாலே "இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்" புத்தகம் முதல் பரிசா வாங்கினியே.//
கட்டுரைப் போட்டியில் எத்தனைபேர் கலந்துகொண்டார்கள் என்பதை எழுதவில்லையே :-)
லதா... என்ன பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுடீன்களே!!M Ct M புரசைவாக்கம் ஸ்கூல் லே வகுப்புக்கு 6 section இருக்கு...பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கு பெற்ற போட்டி அது...அப்போ நீங்களே கணக்கு பண்ணிகூங்க...[கணக்கு வருமா??? ஹி ஹி ஹி ]....என் பதிவிற்கு விமர்சனம் கொடுத்தமைக்கு நன்றி...தொடர்ந்து படியுங்கள் !!!