Author: Sathish
•7:03 AM
திரை விமர்சனம் எழுதியே ரொம்ப நாள் ஆச்சுலே? [அட கூருகெட்டவனே!!! நீ ப்ளாக் எழுதியே ரொம்ப நாள் ஆச்சுனு திட்டாதீங்க...அழுதுடுவேன்.] திரை விமர்சனம் சொல்லிட்டு என்னடா சமையல் குறிப்பு டைட்டில் இருக்கேனு ஆச்சரியமா? எல்லாம் ஒரு வித்யாசமா இருக்கட்டுமேனு தான்...ஹி ஹி ஹி [வாங்குற அஞ்சுக்கும், பத்துக்கும் இந்த விளம்பரம் தேவையா? ]

விருதகிரி

முதன்முறையாக புரட்சிக் கலைஞர் திரைக்கதை, வசனம், இயக்கம் னு ஏதோ பண்ணி வெளிவந்திருக்கு. முன்பாதி முழுக்க அரசியல், பஞ்ச் டயலாக் அது இது னு பண்ணி நல்லபடி தூங்க வச்ச படம் பின் பாதிலே "TAKEN" என்கிற எனக்கு ரொம்பவும் பிடிச்ச விறு விருப்பான ஆங்கில படத்தை எந்த அளவுக்கு காப்பி அடிக்க முடியுமோ அந்த அளவுக்கும் காப்பி அடிச்சு சொதப்பி இருக்க படம் விருதகிரி...

 சத்தியமா சொல்றேன் "TAKEN " படத்த பார்த்தவங்க அனைவரும் இந்த படத்தை பார்த்தா விஜயகாந்த்க்கு வர கோவத்தை விட ரொம்ப கோவம் வரும்... ஸ்க்ரீன் முழுக்க அவருடைய முகமே தெரிது.....இதுலே வேற என் பொண்டாட்டி வெறுப்பேத்தற மாதிரி, "சின்ன சின்ன expression கூட விஜயகாந்த்துக்கு சரியா வரலையே"  என்று சொன்னபோது, "பெரிய முகம் இல்லையா? அதான் சின்ன expression  சரியா உன்னால பாக்க முடிலே..நீ அவரோட மூக்குல இருந்து left சைடு expression பார்த்துக்கோ நான் ரைட் சைடு நான் கவனிசிக்கறேன் " னு சொல்லி சமாதானம் பண்ணேன்..

கொடுமை கொடுமை னு முன்பாதி போனா, பின்பாதி லே கொடூரக் கொடுமையா அருண்பாண்டியன் வேறு!!! இவங்க தனித்தனியா நடிச்சாலே பாக்கறது இப்பெல்லாம் நெம்ப கஷ்டம்... இதுலே ரெண்டு பேரும் சேர்ந்து மிரட்டினா? முடிலே டா சாமி...

இதுல காமெடி பீஸ் என்னனா தலைவரோட இங்கிலீஷ் தான்..."இன்டர்நேஷனல்"  லே "இன்டர்நேசனல்" , ஸ்பெஷல் லே ஸ்பெசல் னு படம் முழுக்க தொரை இங்கிலீஷ் தான்...ஒரே ஒரு நல்ல சமாசாரம் சார் டூயட் லா இல்லாம படம் பண்ணி இருக்கார்..சோ அந்த லிப் movements கொஞ்சம் கம்மி :) இதுல முடிவுல making of விருதகிரி. கேமரா முன்னாடி தலைவரு நின்னு ...சாட் (ஷாட்) ரெடி ...கேமரா ரோல்லிங் சொல்றது தான் ஹைலைட்.....


சித்து +2  

பாக்யராஜ் சன் சாந்தனு வோட ரெண்டாவது படம் இது நெனைக்கிறேன்...நடிக்க ஆசைப் பட்டவங்க எல்லோரையும் கூப்பிட்டு படம் எடுத்திருக்காங்க...சாந்தனுவ தவிர ஒருத்தருக்கும் ஒண்ணுமே வரல...குறிப்பா படத்தோட கதாநாயகி... பக்கா recommendation  நெனைக்கிறேன்...சுத்தமா நடிப்புக் காண சுவடே தெரிலே..."Alice in Wonderland" லே வர அந்த பூனை மாதிரி எல்லா பல்லையும் காமிக்கிறார்களே  தவிர வேற ஒன்னும் இல்ல [அவசரப் பட்டு தப்பா எடை போடாதீங்க...நடிப்பு ஒன்னும் இல்ல னு சொல்ல வந்தேன்...]

வழக்கமான கதை தான்... +2 தேர்வில் தோல்வியடைந்து நாயகனும் நாயகியும் வெவேறு ஊர்களிலிருந்து ரெயில் நிலையத்தில் தற்செயலாக சந்தித்து நட்பாகி காதலாக உருவெடுக்கிறது...பின்னர் இடையே வரும் பிரச்சனைகளை சமாளித்து, எப்படி காதல் ஜோடி ஒன்று சேருகிறது என்பது தான் கதை...இன்னும் எத்தனை நாளைக்கு டா அப்பா  ப்ரோயஜெனமே இல்லை சொல்ற பசங்கள நாடு போற்றும் நல்லவனாக்கி காமிப்பீங்க? இந்த படத்தோட கிளைமாக்ஸ் லே கதாநாயகியோட அப்பா, பாட்டி, ஒண்ணுவிட்ட சித்தப்பா, பெரியப்பா, ஏரியா போலீஸ், மிலிடரி னு ஒருத்தர் விடாம ஹீரோவ பாராட்ட ["கேக்கறவன் கேனையா இருந்தா K .B .சுந்தரம்பாள் லே கேத் வின்ச்லடே ஆயா " னு சொல்வாங்க!!!], சினிமா லே அப்பா நேர்மை, கலங்கின கண்கள் னு சொன்னதும் நினைவுக்குவர ராஜேஷ் நெகிழ்ந்து மகனை அணைச்சிக்கரதோடா படம் முடிகிறது...

சாந்தனு நடிச்ச முதல் படம் போல இந்த படத்தையும் பேர் தவிர வேற ஒன்னும் முன்னமே பிளான் பண்ணலே நெனைக்கிறேன்...ஷாட் லே வந்ததும் இன்னிக்கு கதை இப்படி எடுக்கலாம்னு முடிவு பண்ணி அத ஷூட் பண்ணாங்க நெனைக்கிறேன்!! கண்டபடி போகுது கதை...இதே நெலமை தொடர்ந்தா  பொட்டியே கட்ட வேண்டியதுதான் தம்பி....


யாருமே இல்லாத கடைக்கு டி ஆத்த்றது போல சாந்தனு மட்டும் டான்ஸ், fight அது இதுன்னு தன்னால முயன்ற மட்டும் கதைய தூக்கி நிறுத்த முயற்சி பண்ணுறார்... ஆனாலும் பிரயோஜனமில்லை என்பது தான் உண்மை....சித்து +2 First Attempt இல்ல பல Attempt போனாலும் தேறுவது கஷ்டம்....

This entry was posted on 7:03 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On January 13, 2011 at 8:33 AM , Anonymous said...

வறுத்தகிரி செம காரம்