Author: Satya
•9:12 PM
 சால்ட்...
அம்மா US  வந்த பிறகு நானும் என் மனைவியும் தியேட்டர் சென்று ஆங்கிலப் படம் பார்க்க சந்தர்பம் இல்லை..2 மாதத்திற்குப் பிறகு நாங்கள் பார்த்த (ரசித்த) படம் சால்ட்.... பொதுவாகவே ஏஞ்சலீனா ஜுலி படம் என்றாலே ஆக்க்ஷன் தான்...சால்ட் இல் அது கொஞ்சம் கூட என்றே சொல்லலாம்...முதல் சீன்லே கொரியன் போலிசாரால் இண்டேரோகட் இல் கடுமையாகத் தெரியும் ஏஞ்சலீனா அடுத்த சீன்லே , கணவர் உதவியுடன் விடுதலையாகி வெளியே நடந்துவரும் பொழுது ததும்பி அழ முற்படுகையில் சாதாரண பெண்ணாக தெரிகிறார்...அமெரிக்காவில்  CIA agent ஆக  பணிபுரிவதாய் நகரும் கதையில், விசாரணைக்காக வரும் ரஷ்ய உளவாளி, அமெரிக்கா வரும் ரஷ்ய அதிபரை கொலை செய்யும் பொருட்டு ரஷ்யாவை சேர்ந்த பெண் உளவாளி அமெரிக்காவில் ஊடுருவி இருப்பதாகவும், அது ஏஞ்சலீனா என்றும் கூறுகிறான்...அப்போது சூடு பிடிகிறது கதை...அடிதடி சேஸிங் னு அம்மணி எல்லாத்துலேயும் பின்னி எடுக்கறாங்க...தான் ஒரு டபுள் agent என்ற குற்றச்சாட்டு, இதற்கிடையில் கடத்தப்பட்ட தன் கணவரை காப்பாற்ற எடுக்கும் முயற்சி னு கதை வேகமாக நகருகிறது...ஆங்காங்கே சில twist and turns...

ஏஞ்சலீனா சற்றே வயதாகி தெரிகிறார்...கடைசியாக தியேட்டர் சென்று நான் பார்த்த ஏஞ்சலீனா படம் Wanted .... 2yrs இருக்கும் அந்த படம் பார்த்து...அதுலே அக்கா சூப்பர் figure .. [ வடிவேலுக்கு பிறகு இந்த dialgue சொல்றது நான்தான்...ஹி ஹி ஹி ] இந்த கதபாத்திரதிற்காக  ஏஞ்சலீனா நிஜ உலக CIA agents  உடன் பழகினாராம்...அவர்களுடன் பழகிய அனுபவத்தை பேசுகையில், "அவர்களிடம் எடுத்த குறிப்புகளில் மிக முக்கியமானதாக நான் கருதுவது, தன் வேலைப் பற்றி சொந்த குடும்பத்தாரிடம் கூட  பேச முடியாத அளவு அவர்கள் தனிமைப் பட்டிருகிறார்கள்..அவர்களின் தியாகம் குறிப்பிடப் படவேண்டிய விஷயம்" என்று கூறியுள்ளார்...சால்ட்.. ஆக ஓஹோ னு சொல்லக் கூடிய படமாக இல்லாவிட்டாலும், நன்றாக, விறு விருப்பாகத்  தான் இருக்கிறது...

எந்திரன் ஆடியோ ரிலீஸ்...

தலைவரோட எந்திரன் ஆடியோ ரிலீஸ் function மலேசியாவில் அரங்கேறியதை online லே பார்த்தேன்...பாட்டு அசத்தல்... A .R ரஹ்மான் இசை இளமை ததும்ப ததும்ப இருக்கு...பாட்டில் மட்டும் இல்ல தலைவரோட stills கூடத்தான்...simplela  வந்திருந்தாலும், தலையோட டிரஸ்  சூப்பர் இருந்தது...விவேக் சில எடத்துல மொக்கை போட்டாலும் நல்ல தான் ப்ரோக்ராம் ப்ரெசென்ட் பண்ணார்...ஐஸ்வரிய அழகு...decentaa டிரஸ் பண்ணி இருந்தாங்க...ஒருவருடைய நடை உடை எவள்ளவு முக்கியம் பாருங்க அவங்கள பர்த்தி பேச....ஷங்கர் பக்கத்துல ஒரு அவதாரம் உட்கார்ந்திருத்தது...[ஸ்ரேயா...] உள்ள போடவேண்டியதோட  saree கட்டி வந்திடுச்சு...கருமம்...அத எவன்யா முன்னாடி உட்கார வச்சான்....

கலாநிதிமாறன்...முதல் முறை பார்த்தேன்..எவளவு பெரிய நிறுவனத்தின் தல ....ரொம்ப சின்ன வயசு.....A .R ரஹ்மான் , ஐஷு, ஷங்கர்,வைரமுத்து  எல்லாரும் பேசினாங்க ...டீம் ரொம்ப ஹர்ட்வோர்க் பண்ணி இருக்காங்க...பெரிய ஹிட் என்பதில் சந்தேகமில்லை...

stills , தலையோட hairstyles , டிரஸ் னு செமைய இருந்தது...Trailor பார்த்து அசந்துட்டேன்... சின்ன வயசில இருந்து நான் ரஜினி யோட வெறித்தனமான ரசிகன்...இன்னும் எனக்கு நல்லா நினைவிருக்கு...மனிதன் படம் பார்த்து...கடைசி சீன்லே தல குண்டு தொங்கவிட்டு ஒரு leather டிரஸ் போட்டு வருவார்...அந்த டிரஸ் வேணும்னு [குண்டோட ]அடம் பண்ணி எங்கப்பாவ தெனரடிசிருக்கேன்...பல தடவை socks உள்ள pant போட்டு டியூஷன் சார் கிட்ட  அடி வாங்கி இருக்கேன்...ரெண்டு மூணு டம்ளர் தண்ணியே ஷர்ட் லே ஊத்திகிட்டு கைகளை மேல தூக்கி "ராமன் ஆண்டாலும் ராவண ஆண்டாளும்" பாட்ட பாடி ஆட்டம் போட்டிருக்கேன்...இவ்வளவு பண்ணிட்டு US வந்தஉடன் தல படத்த எப்படி மிஸ் பண்றது? இந்த படத்துக்கு நான், என் மனைவி அம்மா first டே போக பிளான் பண்ணி இருக்கோம்....தலைவரோட படத்துக்கு நான் பக்கத்துக்கு state போக வேண்டியிருக்கு...இருந்தாலும் பரவா இல்லை...தலை படத்த பார்த்துடுவேன்...
Author: Satya
•10:28 PM
நான் ஒன்பதாவது படிக்கும் பொழுது, தமிழ்லே பத்து மதிப்பெண் பகுதி ஒன்று...கதை, கவிதை அல்லது கட்டுரை...அரையாண்டு வரை கட்டுரை எழுதி வந்தேன்...2 - 2 1 /2 பக்கத்துக்கு மிகாமல் எழுதினாலும் 6 அல்லது 7 மதிப்பெண் தான் வரும்...அப்போதுதான் என் நண்பன் கமலேஷ் [பேர பார்த்து சேட்டுப் பய, decent னு நெனைக்காதீங்க....வீனா வருத்தப்படுவீங்க...] "கட்டுரை எழுதினா வேலைக்காகாது டா; கவிதை எழுதினா நல்ல மதிப்பெண் வரும்..பத்து வரி எழுதினா போதும்" அது இதுனு சொல்லி...என்ன ஏத்தி விட்டான்...அப்போ எடுத்தது தான் இந்த கவி அவதாரம்...[அட்ரா அட்ரா...]அரையாண்டு முடிஞ்சு, அடுத்த வகுப்புத் தேர்வு வந்தது...ஆசிரியரை பற்றி கவிதை ....வெறும் 15  நிமிஷத்துல எழுதினது...

அறிவுக்கண்ணை திறந்த என் ஆசிரியரே...
உம்மைப போற்றிப் பாடவந்தேன் கவிஞ்யனாக!!

அன்பால் திருத்த வேண்டும் என்று என்னை நினைத்தீர்;
நான் அடங்காமல் போகவே பிரம்பை எடுத்தீர்!!

கரும்பலகை தனில் எழுதி எனக்குப் புரியவைத்தீர்;
பல புரியாத புதிர்களையும் விளங்கவைத்தீர்!!!

அழியாச் செல்வமாம் கல்விச் செல்வம் ;
அதனை அறிய வைத்த ஆசிரியரே எந்தன் தெய்வம்!!!

இத்துணையும் செய்த உம்மைப் போற்றிப் பாட..
தமிழ் வார்த்தைகளை தேடினேன் நாட்களாக!!!!

எழுதி முடிச்சதும் என்னோட முதல் கவிதைய பார்த்து ரொம்ப சந்தோஷமா இருந்தது... பெருமையாவும் இருந்தது...கண்டிப்பா என் தமிழ் ஆசிரியரோட பாராட்டு கெடைக்கும்னு தோனுச்சு...marksheet கொடுக்கும் பொழுது என்னை கூப்பிட்டு படிக்கச் சொல்லி பாராட்டினார்...கிளாஸ் லே எல்லோரும் கை தட்டினாங்க....அடுத்து நம்ம சகா கமலேஷ்  ...அவனுக்கும் கைத்தட்டல் கெடுக்கப் போகுதுன்னு நெனசிட்டிருக்கும் போதே என் சார் கண்ணுல கொலை வெறி...பசு மாட்டைப் பற்றி கட்டுரை எழுத சொன்னா, பொங்கல் பற்றி 2 பக்கத்துக்கு எழுதி..கடைசி அரைப் பக்கத்துக்கு மாட்டுப் பொங்கல்...மாடுன்னு சொல்லாம பசு மாடு, பசு மாடுன்னு அங்கங்கே சொல்லி, பசுமாட குளிப்பாட்டுவாங்க, பசு மாட்டுக் கொம்புல வர்ணம் அடிப்பாங்கன்னு எழுதி இருக்கான்...கமலேஷின் அடி உதையில் ஆரம்பித்தது என் கவிப் ப்ரேவேசம் ...நெறைய சின்ன சின்ன குறும் கவிதைகள்... நிலவிற்கு மட்டும் வாயிருந்தால், ஒப்பாரி வைத்து அழுதிருக்கும்...யார் கவிதை எழுதினாலும் அத நோண்டாம விடமாட்டாங்க...நானும் ஒன்னு ட்ரை பண்ணேன்...12th ரிசல்ட் வந்த கையோட...இப்போவே உங்களுக்கு கவிதைக்கரு புரிஞ்சிருக்கும்....அதே அதே....

விண்வெளியில் வெள்ளித் தட்டாய் 
மிளிரும் வெண்ணிலாவே !!!
உனக்கு மட்டும் தேய் பிறை இருப்பினும் 
வளர் பிறையும் கூடவேயுண்டு!!!!

எந்தன் வாழ்வில் வெறும் தேய்ப் பிறை
 மட்டும் தானோ?

பின்பு ஏன் எனதாசைகள் ஒவ்வொன்றும் 
நிராசையாகி, கடைசியில்.....

அமாவாசை ஆகின்றன???

என்னுடைய "ஆண்பாவம்" பதிவை படித்தவர்களுக்கு தெரியும் நான் பன்னிரண்டாவது படிக்கும் போது அடிச்ச கூத்து...படிக்கற காலத்துல படிக்காம விட்டுபுட்டு நெலாவ புடிச்சி கவிதை வேறு....[விடுங்கப்பா பொது வாழ்க்கைலே இதெல்லாம் சாதாரனம்மப்ப...]

அடுத்து விடலைப் பருவ வயதில் எழுதிய கிறுக்கலில் ஒரு சாம்பிள்...

என்னவளே!!
நீ தானே உன் தாயிடம் கல்லூரிக்கு
கிளம்புவதாய் சொன்னாய்! 
பின்பு எனக்கேன் அவசரம் என் கால்களை
BATA வினுள் நுழைப்பதற்கு!!

என்னவளே !!
நீ நாணத்தால் தலை குனிந்து சொல்வதேனவோ 
உண்மை தான்!
உன் சுடிதாரில் உள்ள கண்ணாடி சில்லைகளின் ஒலி
தலை கவிழ்ந்து செல்லும் என்னை நிமிரச் செய்கிறதே!!!

என்னவளே!!
என்னிடம் மட்டும் A K 47 இருந்தால் 
உனைப் படைத்த பிரம்மனுக்குத் தான் முதல் குறி!
நீ அன்று சிந்திய புன்சிரிப்பால் தானே நான் இன்றும் 
என்னை கண்ணாடிக்கு அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன்!!!

என்னவளே!!
விளங்காத விடை உந்தன் விழிகள் 
என்பதால்தானோ 
வினாவற்ற விடுகதையாகிப் போனது 
எந்தன் வாழ்கை!!!

இது போல அப்பபோ சில பல கிறுக்கல்களை எழுதிய அனுபவம்....நாட்கள் ஆக ஆக நான் எழுதுவது குறைய ஆரம்பித்துவிட்டது....[ஐ ஜாலி சொல்றவங்க பேச்சு டு கா ] இந்த பதிவு கண்டிப்பாக என்னை உந்தித் தள்ளும் என நினைக்கிறேன்...எழுதுவதில் உள்ள ஆர்வம், சற்றே இனிமையானது...எண்ணங்களை இளமையாக வைக்க உதவுகிறது...

இந்த பதிவின் மூலம் மீண்டும் உணர்கிறேன் ...நானும் ஒரு கவி...முழுவதுமாக இல்லாவிட்டாலும்....